Saturday, 8 July 2017

தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்
குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
"""""""''""""""'"'''"""""""""""''"""""""""""""""""""""""""'""""''""""""'""""''''''"""
இன்று (8.7.17) மாலை தமிழ் மாநில அஞ்சல் RMS இணப்புக் குழு க் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்றது.

கூட்டத்தில் எதிர் வரும் 13.7.17 அன்று  நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு
நாள் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகள் குறித்தும் , எதிர் வரும் 11.7.17 அன்று தொழிலாளர் நல ஆணையர் முன்பு நடைபெற உள்ள பேச்சு வார்த்தை குறித்தும் விவாதிக்கப் பட்டது.

CPMG அலுவலகத்தில் இருந்து COC மூலம் வைத்த கோரிக்கைகளில், கேடர் சீரமைப்பு பிரச்னை, கேசுவல் ஊழியர் பிரச்னை, தபால்காரர் பதிலி பிரச்னை, அதிகாரிகளின் அத்துமீறல் , RMS, MMS, GDS உள்ளிட்ட பல கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை அளித்து, பதில் அளித்துள்ள  மாநில நிர்வாகத்தின் மோசமான போக்கினை கண்டித்து

போராட்டத்தை தீவிரப் படுத்திட முடிவெடுக்கப் பட்டது. இதன் முதற் கட்டமாக COC சார்பில் வேலைநிறுத்தத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டு அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் இன்று அனுப்பப் பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக , நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க மறுக்கும் மாநில நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து

எதிர்வரும் 10.7.17 திங்களன்று 

NFPE COC சார்பாக

தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைகள் மற்றும் தலைமை அஞ்சலக வாயிலில்

கருப்புச் சின்னம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட
முடிவெடுக்கப் பட்டுள்ளது.

எனவே அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/கிளைச் செயலர்கள் விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி அதன் செய்திகள்/புகைப்படங்களை தொலைக்காட்சி/பத்திரிக்கைககளுக்கு அளிக்கவும்.

போராட்டம் தீவிரப்படுத்தப் பட்டால் மட்டுமே கோரிக்கைகளை வெல்ல முடியும். பிரச்னை தீரவில்லை என கூறுவதை விடுத்து பிரச்னைகளை தீர்க்க அமைக்கப் பட்டுள்ள களத்தினை பயன்படுத்துங்கள்.

தொழிலாளர் நல ஆணையர் முன்பான பேச்சு வார்த்தைக்குப் பின், பிரச்னையின் தீர்வுக்கான  முன்னேற்றம் இல்லையானால், வேலை நிறுத்தத்திற்கு முன்னதான  12 ந் தேதிக்கான போராட்டம் குறித்து  COC கூடி முடிவெடுக்கப்படும். 

இந்த செய்தியை பார்க்கும் தோழர்கள் அவரவர் பகுதியில்  உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் இதனை தெரிவித்து உடன் செயலாற்றிடவும்.

போராடுவோம்!     வெற்றி பெறுவோம் !

போராட்ட  வாழ்த்துக்களுடன்,

NFPE அஞ்சல் RMS.
இணைப்புக்குழு
தமிழ் மாநிலம்,
சென்னை 600 014.