Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 29 October 2013

MARCH TO PARLIAMENT BY CENTRAL GOVT EMPLOYEES AND BY GRAMIN DAK SEVAKS - 2 DAYS PROGRAMME

அன்பார்ந்த அஞ்சல் மூன்று  மாநிலச் சங்க நிர்வாகிகளே ! SUPREME  COUNCILLOR  களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே !  மகிளா  கமிட்டி நிர்வாகிகளே !  வணக்கம் !

எதிர்வரும் டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியில் GDS  ஊழியர் கோரிக்கைகளுக்காக  பாராளுமன்றம் நோக்கிய பேரணி ஏற்கனவே அறிவிக்கப் பட்டு  அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன ..

உங்களிடம் ஏற்கனவே  இதற்கான ரயில் முன்பதிவு செய்திட நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக வேண்டினோம் என்பது  நினைவிருக்கும். ஆனால் இன்னமும் ஒருவரிடமிருந்தும்  பதில் வரவே இல்லை .

தற்போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் நமது NFPE  சம்மேளனத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின்  ஊதியக் குழு , 50% பஞ்சப்படி  உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளுக்காக  எதிர்வரும்  டிசம்பர் திங்கள் 12 ஆம்  தேதி (GDS  பேரணியைத் தொடர்ந்து )  நடத்திட  தாக்கீது வந்துள்ளது !

எனவே  உடன் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் நான்கு, RMS  3, RMS  4, GDS  உள்ளிட்ட  NFPE  இன் அனைத்து உறுப்பு சங்கங்களுக்கும் இந்த செய்தியை  தெரிவித்து , அதன் மீது  ஒரு கோட்டம் அல்லது கிளைக்கு  தலா 10 பேருக்கு குறையாமல்  டெல்லி தலைநகரில் நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணிக்கு   ஊழியர்களைத் திரட்டி  உடன்  ரயில் முன்பதிவு  செய்திட  மாநிலச் சங்கம் ,  அஞ்சல் RMS  தமிழ் மாநில இணைப்புக் குழு  மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு  உங்களை  வேண்டிக் கேட்டுக் கொள்கிறது . 

அலட்சியமாக  இருக்க வேண்டாம் என்றும்  நினைவுறுத்துகிறோம்.  மாநிலச் சங்கம் நிர்வாகிகள் உடன் தங்கள் பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களைத் தொடர்பு கொண்டு  பயணத்திற்கான ஏற்பாடுகளை  செய்திட வேண்டுகிறோம்.  தங்கள் பகுதியில் இருந்து சங்க வாரியாக எத்தனை பேர் ரயில் முன்பதிவு செய்துள்ளனர் என்ற விபரத்தினை உடன் மாநிலச் செயலருக்கு தெரிவிக்கவும்.  உடன் பதிலை எதிர் பார்க்கிறோம்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்திடவும் அதன் விபரங்களை மாநிலச் செயலருக்கு தெரிவித்திடவும் வேண்டுகிறோம்.

தோழமையுடன் 
J . ராமமூர்த்தி , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று தமிழ் மாநிலம்.
கன்வீனர் , அஞ்சல் - RMS  இணைப்புக் குழு ,  NFPE , தமிழ் மாநிலம் .
தலைவர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தமிழ் நாடு .

LATEST INFORMATION ON P.A./S.A. RESULTS AND UNFILLED POSTMAN VACANCIES


1) நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் எழுத்தர்  தேர்வு  முடிவுகள்  இன்று மாலை வெளியாகும் என்று மாநில நிர்வாகம் தெரிவிக்கிறது . 


2) சென்னை பெருநகர மண்டலத்தில் POSTMAN  UNFILLED  VACANCIES கிட்டத்தட்ட 200 காலியிடங்கள்  உள்ளதாகவும்  

இந்த காலி இடங்களுக்கு CCR  இல் உள்ள   MOFUSSIL  கோட்டங்களில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதியவர்களில்   SURPLUS  QUALIFIED  ஆக உள்ள  GDS  ஊழியர்களிடமிருந்து   3 OPTION கேட்கப் பட்டு  அந்த விண்ணப்பங்கள்  PMG,  CCR  தலைமையிலான  கமிட்டி முன்பாக பரிசீலனைக்கு வைக்கப் பட்டு  பின்னர் அவர்களுக்கு  பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் . 

இது எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும்  என்று  நிர்வாகம் தெரிவிக்கிறது .

VERIFICATION OF SERVICE BOOK - DOPT ORDERS DT. 23.10.2013

NO DELAY SHOULD BE MADE ON ENCASHMENT OF LEAVE ON SUPERANNUATION - DOPT ORDERS DT.21.10.2013



VIRUDHUNAGAR AND SIVAKASI CONFERENCES

AS PER THE REPORT RECEIVED FROM DIVL. SEC., VIRUDHUNAGAR  AND BRANCH SECRETARY , SIVAKASI 

                                                            SIVAKASI BRANCH
The following were elected as New Office Bearers for the ensuing period unanimously in the joint Conference held at Sivakasi on 06.10..2013 under the Presidentship of com S.Marimuthu , AIPEU Group –C , Sivakasi.

PRESIDENT                          :::          COM          S.MARIMUTHU ,PRI (P).SIVAKASI-HO 

SECRETARY                         :::          COM.        S.VIJAYAKUMAR, PA, SIVAKASI-HO 


TREASURER                         :::          COM.        A.RAJAPANDIAN.PA. SIVAKASI HO

                                                       VIRUDHUNAGAR BRANCH
                 The following were elected as New Office Bearers for the ensuing period unanimously in the joint Conference held at Sivakasi on 06.10..2013 under the Presidentship of com S.Marimuthu , AIPEU Group –C , Sivakasi.

PRESIDENT                          :::           COM        M.DHAMODARAN,ASPM,SATTUR

SECRETARY                         :::          COM.       M.MAREESAWARAN, SPM,
                                                                               VIRUDHUNAGAR BUS STAND S.O.                                   
 TREASURER                        :::          COM .     A.SOMASUNDARAM,PA,
                                                                               VIRUDHUNAGAR-HO

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  சேலம் மேற்கு கோட்ட  சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !

-----சி.சஞ்சீவி, மண்டலச்செயலர் , கோவை மேற்கு மண்டலம்.

சென்னையில் இரு தபால் அலுவலகங்களில் குண்டு வீச்சு


சென்னையில் நேற்று நள்ளிரவு தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் 
குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில், இரண்டு பேரை காவல்துறையினர் 
கைது செய்துள்ளனர். 

மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில், இரு சக்கர வாகனங்களில் 
வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக 
வீசியுள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள் இந்த சம்பவம் 
நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் 
வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே 
வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் 
எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட 
லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த 
தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மந்தைவெளி தபால் 
நிலையத்தில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இங்கு 
அதிகளவு சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.

இரண்டு தபால் நிலையங்களில் இருந்தும் வெடிக்காத 4 பெட்ரோல் 
குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெட்ரோல் குண்டுகள் 
வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகியப் 
பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த 
காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  இதையடுத்து, இரண்டு பேரை 
கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 26 October 2013

Saturday, October 26, 2013

Outcomes of the Meeting on 7th Pay Commission

Central Government invited the National Council Standing Committee members for discussing the Terms and reference for the 7th Central Pay commission. A meeting was held under the Chairmanship of Secretary, DOP& T on 24.10.2013 at 1500 Hrs at North Block. Staff side Members, National Council JCM  Standing Committee, have attended this Meeting. On behalf of Staff side the fallowing suggestion has been given to the Central Government
  •  Government of India should come out with their proposal on Terms and Reference and then Staff side will    give their proposal.
  •  All anomalies pending including MACP to be settled.
  •  One Labour leader to be included in the commission.
  •  All pending cadre Review proposals should be delinked from 7th CPC.
In its response to the above suggestion the Central Government assured that, after consulting the Ministry of Finance, the proposal of Draft will be given to all the Federations for discussion
0 comments

Thursday, 24 October 2013

HEARTY WELCOME TO THE NEW P.A.s / S.A.s SELECTED .... NFPE-P3 INVITES YOU ALL WITH WARM GREETINGS !

நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் எதிர்வரும் வியாழன் மாலை அல்லது வெள்ளியன்று 

அஞ்சல் எழுத்தர்   முடிவுகள் வெளியாகும் என்று மாநில நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

 

 C.SANJEEVI,DIVISIONAL/REGIONAL SECRETARY P3



Wednesday, 23 October 2013

TN CONFEDERATION' FIRST CIRCULAR RELEASED



 

DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING AND TRADE UNION STUDY CAMP OF CENTRAL REGION

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் ! 

 நமது மாநிலச் சங்கத்தின் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் , மதுரை  மற்றும்  கோவை மண்டலங்களைத் தொடர்ந்து  மத்திய மண்டலமான 

திருச்சி மண்டலத்தின்  அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டம் எதிர்வரும்  09.11.2013 சனியன்றும் ,  மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு  எதிர்வரும் 10.11.2013 ஞாயிறு அன்றும் 

கீழே காணும் இடத்தில்  சிறப்பாக நடத்திட  திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன .


 IFPAAW Rural workers Education Centre, 
Trichy - Chennai high road,

Thuraimangalam, Four Road, Perambalur - 621 220

இதற்கான விரிவான அறிவிப்பு சுற்றறிக்கை வாயிலாக வரும் வாரத்தில் வெளியிடப்படும். நமது முன்னாள் பொதுச் செயலரும் , மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு தலைவருமான தோழர். KVS  அவர்கள் இலாக்கா விதிகள்,  நடத்தை விதிகள், தண்டனை விதிகள் , பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவைகளை  POWER  POINT  வடிவில் உங்களுக்கு வழங்கிட உள்ளார்கள் என்பது ஒரு உபரிச் செய்தி . 

இது தவிர  STUDY  MATERIALS  மதுரை, கோவை மண்டலக் கூட்டங்களில்  தந்ததை விட அதிக  அளவில் , பல புதிய விபரங்களுடன் உங்களுக்கு அளிக்கப் பட உள்ளது . ஆகவே  மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் பெருமளவில் நிர்வாகிளை உள்ளடக்கிய , இளைஞர்களையும் , தோழியர்களையும் கலந்து கொண்டிட  ஏற்பாடுகளை  இப்போதிருந்தே செய்திட வேண்டுகிறோம். 

கோட்ட/ கிளைச் செயலர்கள்  கோட்ட அளவில்  அதிகாரியிடம் எடுக்கப் பட்டும் தீர்க்கப் படாமல்   பகுதியில் தேங்கிக் கிடக்கும் ஊழியர்  பிரச்சினைகளை  பட்டியலிட்டு , முழு விபரங்களுடன்  தங்களுடைய LETTER  PAD  இல் TYPE  செய்து  கூட்டத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று கண்டிப்பாக கோரப்படுகிறது . அதுபோல  அனைத்து கோட்ட/ கிளைச் செயர்களும்  தவறுதல் இன்றி கண்டிப்பாக இந்த இரண்டு நாட்கள் நிகழ்விலும் கலந்துகொண்டிட வேண்டும் என்று அறிவிக்கிறோம்.

மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் செய்தது போலவே உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் படுகின்றன  .  அவசியம் இளைய தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். 

இந்த செய்தியையே முன்னறிவிப்பாகக் கொண்டு இதனை பார்க்கும் தோழர்கள் , இதர தோழர்களுக்கும் இந்த விபரங்களை தெரிவித்திட வேண்டுகிறோம்.

நிகழ்விடம்  - ஏற்பாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்காணும் தோழர்களை தொடர்பு கொள்ளவும் :-

1. தோழர். தமிழ்ச் செல்வன் , கோட்டச் செயலர் -   9965428382
2. தோழர். சசிகுமார், செயல் தலைவர்  - 9442234938
3. தோழர். ராஜூ , போஸ்ட் மாஸ்டர் , தென்னூர் - 9994247485

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

TN AIPEU GDS NFPE FIRST CIRCLE COUNCIL MEETING HELD ON 17.10.2013

தமிழக AIPEU GDS NFPE  சங்கத்தின் முதல் மாநில கவுன்சில் கூட்டம் கடந்த 17.10.2013 அன்று சென்னை எழும்பூர் SRMU  சங்கக் கட்டிடத்தின்  நக்கீரன் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . அதன் மாநிலத் தலைவர் தோழர் R . ராமராஜ் அவர்கள் தலைமை வகிக்க , சென்னை வட கோட்டத்தைச் சேர்ந்த தோழர். லீலாராமன் (செயலர்)  வரவேற்புரை யாற்ற  , NFPE  சம்மேளனத்தின் உதவி மாபொதுச்  செயலர் தோழர். S . ரகுபதி அவர்கள் மிகச் சிறப்பானதொரு துவக்கவுரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து  கூட்டத்தின் நோக்கம் , மாநிலச் சங்கத்தின்  செயல்பாடுகள், மத்திய சங்க நிகழ்வுகள் ,  நம்முன்னே உள்ள கடமைகள் , எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய  பேரணி உள்ளிட்ட தகவல்களுடன் ஒரு நீண்ட எழுச்சி யுரையினை  அதன் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் வழங்கினார்கள் .

இதர மாநிலச் சங்க நிர்வாகிகள்  ஸ்ரீரங்கம்  தோழர்.R . விஷ்ணுதேவன், பவானி மகாலிங்கம் , பட்டுக்கோட்டை இளங்கோவன், மதுரை  ராஜசேகர், சேலம் மேற்கு  சண்முகம், தாம்பரம் விஜயகுமார், பாண்டிச்சேரி கலிய முர்த்தி , திருவண்ணாமலை முனுசாமி ஆகியோர்   கலந்துகொண்டு  விவாதத்தை மெருகேற்றினர் .  இது தவிர 32 கிளைகளை இருந்து  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

அஞ்சல் மூன்று மாநிலத்  தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநில நிதிச் செயலரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் A . வீரமணி,  அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர்  N .G . , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். V . ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். 

இது தவிர அஞ்சல் மூன்று அம்பத்தூர் கிளையின் முன்னாள் தலைவர்கள், தோழர்  நரசிம்மலு, தோழர் முருகன், திண்டுக்கல் தோழர்.  மருதை ஆகி யோரும் கலந்து கொண்டனர் . 

கூட்டத்தின் தீர்மானங்களில்  முக்கியமாக ,  ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும்   GDS  தோழர்கள் 15 பேருக்கு குறையாமலும் , இதர அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு R 3, R 4 உள்ளிட்ட சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட கிளைச் செயலர்கள் அனைவரும் முழு வீச்சில்  எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு  ஊழியர்களை திரட்டிட  வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது .

இத்தகைய கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை வடகோட் டத்தைச் சேர்ந்த P 3/GDS  சங்க நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் நன்றி முழுவதுமாக உரித்தாக்கப் பட்டது .

குறிப்பு :-

1. நமது  அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்த பாராளுமன்றம் நோக்கிய பேரணியில்  விடுதல் இன்று  கண்டிப்பாக கலந்து கொண்டிட வேண்டும். 

2.  மேலும் அனைத்து அஞ்சல் மூன்று  கோட்ட/ கிளைச் செயலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதர முன்னணித் தோழர்களையும்  GDS  தோழர் களையும்  ஒன்றிணைத்து , உடனடியாக இரயில்  டிக்கெட்  முன்பதிவு செய்திட வேண்டுகிறோம். இறுதியில் செய்தால் நிச்சயம்  டிக்கெட் CONFIRM  ஆகாது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். 

3. இதற்கான பொறுப்புகளை அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு மாநிலச் சங்கத்திற்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் பதிலை எதிர்பார்க்கிறோம்.