Tuesday, 1 October 2013

கோவை மேற்கு மண்டல கோட்ட/கிளை செயலர்கள் மாநாடு மற்றும் மண்டல அளவிலான பயிலரங்கம் ,கொளத்தூர்

நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு , சேலம்  மேற்கு கோட்டம்  கோவை மண்டலம் சார்பாக நடத்திய  கோவை மேற்கு மண்டல கோட்ட/கிளை செயலர்கள் மாநாடு மற்றும் மண்டல அளவிலான பயிலரங்கம்  கொளத்தூரில் 28.09.2013 , 29.09.2013 நாட்களில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில்  நமது முன்னாள் பொது செயலர் தோழர் K.V.S., தோழர் மனோகரன் ,செயல் தலைவர் NFPE, தமிழ் மாநில தலைவர் தோழர் .ஸ்ரீ வெங்கடேஷ்,,தமிழ் மாநில செயலர் தோழர் J.R. ,தோழர் .தன்ராஜ் ,  தமிழ் மாநில  செயலர் GDS (NFPE), தோழர் குமார் .,திருச்சி மண்டல செயலர்,உட்பட 21  கோட்ட/கிளை செயலர்களில் 18 தோழர்களும் , மண்டலம் முழுதும் இருந்து சுமார் 260 தோழர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பான ஒன்றாக இருந்தது.  அதிலும் பயிலரங்கில் இருந்து இடையில் எந்த தோழரும் நகராமல் இருந்து  கவனித்த நிகழ்வு நிகழ்ச்சியின் மணிமகுடம் 

நிகழ்வின் சில புகைப்படங்கள் மட்டும் இன்று