Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 8 December 2017

ஒரு எழுத்தாளரின் பதிவில் தபால் அலுவலகம்……..

ஒரு எழுத்தாளரின் பதிவில் தபால் அலுவலகம்……..

ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை, ஒரு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை என்ற வரையறுக்கப் பட்ட விதிமுறைகளை தாண்டி, இப்பொழுது ”தினமும் இரவு 8 மணி வரை வேலை செய், ஞாயிறு அன்றும் அலுவலகம் வா” என்று அதிகார வர்க்கம் அலப்பறை செய்து கொண்டு இருக்கிறது.
   தனக்கு லாபம் வேண்டும் என்பதற்காக, தனிநபரோ, தனியார் நிறுவனங்களோ தன் கீழ் வேலை பார்ப்பவர்களை கசக்கி பிழிந்து, நியாய அநியாயம் பார்க்காமல். மனிதாபமானமின்றி நடந்து கொள்வதை போல அரசும், அதிகாரிகளும் நடந்து கொள்வது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. சேவைக்கு, சிக்கனதிற்கு, ஒழுங்கிற்கு எடுத்துகாட்டாக செயல்பட்ட தபால் துறை இன்று எதை நோக்கி பயணிக்கிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

சரி,சரி விஷயத்திற்கு வருவோம். அரசும் அதிகாரவர்க்கமும் நம்மை சரியாக  புரிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ, ஒரு எழுத்தாளர் தபால் துறையை பற்றி தன் கதையில் சரியாக பதிவு செய்து இருப்பதை உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்.

  (ஆனந்த கீதம் என்ற மாத நாவலில் முத்துலட்சுமி ராகவன் அவர்கள் எழுதி உள்ளதில் சிலவற்றை அப்படியே தந்துள்ளோம்.)

ஈ.டி.டி.ஏக்கள் நிலையை உள்ளபடியே பதிவு செய்திருக்கின்ற அவருக்கு நம் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

             *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
     “தபால் முத்திரைகளை பதிப்பது ஒரு தனி கலை. அதிவிரைவாக முத்திரை செய்ய, தேர்ந்த பயிற்சி பெற்ற தபால் துறையினரால்தான் முடியும். அங்குள்ள பணியாளர்கள் அதிவிரைவில் தெளிவான முத்திரை பதிப்பதில் வல்லுனர்கள். அப்படி பதிக்கும் போது தபால் முத்திரைக்கான கருப்பு மை கைகளிலும் உடைகளிலும் படியாதபடி லாகவமாக கையாள வேண்டும். தபால் துறையின் கருப்பு மை எளிதில் அழியாது.  என்ன ஒன்று…. முத்திரை பதிப்பதில் இத்தனை நுணுக்கமான அணுகுமுறைகள் இருக்கின்றன என்பது முத்திரை பதிப்பவர்களுக்கும் தெரியாது…. மேலதிகாரிகளுக்கும் தெரியாது.

       மடிப்பு கலையாத நேர்த்தியான உடையுடன் வரும் மேலதிகாரிகளின் வாயிலிருந்து வரும் ஒரு சிறு பாராட்டு போதும்… தபால் துறையின் கடைநிலை ஊழியர்கள் மகிழ்ந்து பரவசப் பட்டுப் போக……… ஆனால் அந்த பரவசம் அவர்களுக்கு கிடைத்ததேயில்லை!...................... அதிகாரத்தை பிரயோகிக்கும் அதிகார மேல் மட்டம் கடைநிலை ஊழியரைப் பற்றி நினைப்பதேயில்லை என்பதே நிதரிசனமான உண்மை. அவர்களின் சிந்தனைகளெல்லாம் துறையின் வரவு செலவு கணக்கிலேயே மையமிட்டு கொண்டிருக்கும்……”

     “தபால் அலுவலகத்தில் வொர்க் லோடு அதிகம்… வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஆபிசில என்ன வேலை இருக்குன்னு சொல்லிட்டு போயிருவாங்க … உள்ளே வந்து ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்… இது மென்னியை பிடிக்கிற வேலையின்னு.. புராதன ஆபிஸ்தான் இது. கட்டிடத்தில் மட்டுமில்லை… ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனிலும் அப்படித்தான்… வேலை நேரத்தில் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியாது……” 

     ”இதுதான் என் வேலை  என்று அளந்து வேலை பார்க்காமல், ஆத்மார்த்தமாக வேலை பார்க்கும் தபால் துறை ஊழியன் அவன்... இங்கு பார்க்கும் வேலையை வேறு எங்கு பார்த்தாலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாமே என்ற எண்ணம் தோன்றும். கட்டிட துறையிலிருந்து, பிளம்பர், எலக்ட்ரீசியன் என்று தொழில் தெரிந்த அத்தனை பேரும் வேலைக்கேற்ற ஊதியம் வாங்கிக் கொண்டிருக்க…. ஐந்து மணி நேரம்தான் என்று வரையறுக்கப்பட்ட  வேலை நேரத்தைப் பற்றிப் பேச்சே எடுக்காமல், ஆபிஸ் திறப்பதில் இருந்து, மூடுவது வரை அயராமல் உழைக்கும் ஈ.டி.டி.ஏ-க்களுக்கு என்ன கிடைக்கிறது…? ஐயா போஸ்ட் ஆபிசில வேலை செய்கிறாரு என்ற பெருமை மட்டும்தான் கிடைக்கிறது.”

   பணி பாதுகாப்பு, பென்சன் என்ற ஏதுமின்றி தபால் துறையின் அஸ்திவாரமாக உழைக்கும் அடிமட்ட ஊழியர்கள்தான் கிராமப்புறங்களில் தபால் துறையின் சேவையை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்…. அவர்களைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காமல் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி கம்யூட்டர்களை இறக்குமதி செய்து துறையை நவீன மயம் போல காட்ட முனைந்து கொண்டிருக்கிறது தபால் துறை..!.”

     ”நிரந்தரப்படுத்தப் படாத வேலையில் இருக்கிற நினைவின்றி, வாய் நிறைய சிரிப்பும், பேச்சுமாக அலுவலகத்திற்கு உயிர்ப்பூட்டிக் கொண்டிருப்பது ஈ.டி.டி.ஏ ஊழியர்கள்தான்.”

    லீவு கிடைக்காத அவலம், அலுவலக கணக்கை முடிப்பதில் உள்ள சிக்கல் என பலவற்றை பதிவு செய்த கதை ஆசிரியர் கடைசியாக இப்படி தபால் அலுவலக ஊழியர்களின் அவல நிலையை விளக்கி இருப்பார்.

     “அய்யே!.. யாருக்கு வேணும் போஸ்ட் ஆபிசில் வேலை பார்க்கிற மாப்பிள்ளை… இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிசே கதின்னு கிடக்கனும்… வருசத்துக்கு எட்டு நாள்தான் லீவு.. சனிகிழமையும் ஆபிஸ்… இழுத்துகிட்டுக் கிடந்தாக்கூட மெடிக்கல் லீவுலே அனுப்ப மாட்டாங்க….அதுவே வாத்தியார் வேலைன்னு வைய்யி… மணியடித்த்தும் வீட்டை பார்த்து ஓடி வந்துரலாம்… சனிக்கிழமை லீவு… கால்பரிட்சை,அரைபரிட்சைன்னு லீவு.. இதுபோக முழுபரிட்சைக்கு முழுசா ஒரு மாதம் லீவு… இதுபோக மெடிகல் லீவு, ஈஎல் லீவுன்னு எம்ப்புட்டு லீவு தெரியுமா?,, எனக்கு போஸ்ட் ஆபிசிலே வேலை பார்க்கிற மாப்பிள்ளை வேணாம்… வாத்தியார் மாப்பிள்ளை தான் வேணும்……!”

Monday, 27 November 2017

New elected office bearers

🚩🚩🚩🚩🚩🚩🚩

   செங்கல்பட்டில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்றின் 38 வது தமிழ் மாநில மாநாட்டில் கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
🚩🚩🚩🚩🚩🚩
தலைவர் ..
___________
தோழர் :
*M.செல்வகிருஷ்ணன்* HSG 1
    (சங்கரன்கோவில் HO)
    கோவில்பட்டி கோட்டம்

துண தலைவர்
_______________
தோழர்கள்

N.சுப்ரமணியன் ,PM
மேட்டுப்பாளையம் HO

K. மருதநாயகம், PA
திருச்சி HO

S. அய்யம் பெருமாள்
கோட்டார் SO . நாகர்கோயில் கோட்டம்

மாநில செயலாளர்
____________________
தோழர்

*J. ராமமூர்த்தி* , APM
T. நகர்  HO

உதவி செயலாளர்
___________________
தோழர்கள்

R.   குமார் , PA,
புதுக்கோட்டை HO

S.வீரன் ,PA,
வேலூர்

A. ராஜேந்திரன்.PA ,
திருப்பூர்

N. சிவ சண்முகம், PA
கோயம்புத்தூர் HO

G. ராமமூர்த்தி ME
செங்கல்பட்டு HO

நிதிச் செயலாளர்
___________________
தோழர்

*A. வீரமணி* ,PA
Annaroad HO

உதவி நிதி செயலாளர்
______________________

தோழர்

N. கோபால் , Spm,
காஞ்சிபுரம் கேட்செரி

அமைப்பு செயலாளர்கள்
_______________

தோழர்கள்
C. சசிகுமார் PA
ஸ்ரீ ரங்கம் HO

C. Mohan PA,
சென்னை

சுப்ரமணியன் .,PA
திண்டுக்கல்

☘🌹☘🌹☘🌹☘🌹

தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள். 

💐💐💐💐💐💐💐💐

Circle conference

மாநில தலைவராக தோழா் செல்வகிருஷ்ணன்
மாநில செயலாளர் தோழர் J R ராமமூர்த்தி
நிதி செயலாளராக
தோழா் வீரமணி ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படனா் அனைவருக்கும் சேலம் மேற்கு கோட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்💐💐💐💐🙏🙏🙏

Wednesday, 15 November 2017

Obituary

நமது தோழர் திரு இரா சுந்தரம் எஸ் பி எம் கருப்பூர் அவர்களின் தாயார் இன்று இயற்கை எய்தினார் என்பதை வருதத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, 8 November 2017

NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் உறுப்பினர் சந்தா ரூபாய் 75 ஆக உயருகிறது

NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் உறுப்பினர் சந்தா ரூபாய் 75 ஆக உயருகிறது .இதற்கான ஒப்புதலை அஞ்சல் வாரியம் அளித்துள்ளது .இதன்படி உறுப்பினர்களிடம் பெறப்படும் சந்தாத்தொகை கீழ்கண்ட விகிதங்களில் பிரித்து அளிக்கப்படும் .

 
கோட்ட சங்கத்திற்கு         --35
மாநிலச்சங்கத்திற்கு        - 20
மத்திய சங்கத்திற்கு       -- 16 
சம்மேளனத்திற்கு            --  4 
                                                  ------------------
                                                       75
                                               -------------------

Tuesday, 17 October 2017

NFPE P3 Union Diwali Gifts

Great victory to our sustained efforts.
"""""""""""""""""""""""""""""""""""
Today we  met the officers concerned at C.O. incldg CPMG. Detais follows.

Deepavali gift for you.

No migration for TTCN on 31 st as requested by us. 

It will be by 7th for TTCN and Dharmapuri only.

Deepavali gift for all.

Com. KR Ganesan and com. Sadan kumar of RMS CB dn are now reinstated into service immediately.

The order issued for removed from sevice to com. KRG is set aside now.

De novo is now ordered from the stage of issue of fresh charge sheet in his case.

Our sincere thanks to our CPMG, TN , judicious PMG, WR and DPS, MM .

Victory for our continued and sincere efforts and struggle.

Pl see the order copy below.

= NFPE P3 Circle
    Union,TN.

Sunday, 15 October 2017

புதுகை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு

புதுகை அஞ்சல்
மூன்று கோட்ட மாநாடு.
""""""''""""""'"""'''''""""""""""""""'''''''''''''''''''''"
இன்று புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற
புதுகை கோட்ட  அஞ்சல் மூன்று
சங்கத்தின் 36 ஆவது  கோட்ட
மாநாட்டில்

கோட்டத்  தலைவராக புதுக்கோட்டை தலைமை அஞ்சலக  அதிகாரி

தோழியர் K. நாகஜெயம் அவர்களும், 

கோட்டச் செயலராக
தோழர் R.குமார் அவர்களும்,

நிதிச் செயலராக
தோழர் M.சிவகுமார் அவர்களும்

போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் சம்மேளன செயல் தலைவர் தோழர். A. மனோகரன், மாநில அமைப்புச் செயலர் தோழர். C. சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் சேலம் மேற்கு கோட்டச் சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

POST OFFICE SMALL SAVINGS SCHEMES UNDER HEAVY ATTACK

~~~~~~~~~~~~~~~~~|~~~~~~~~~
POST OFFICE SMALL SAVINGS SCHEMES
UNDER HEAVY ATTACK

GDS MEMBERSHIP VERIFICATION PROCESS STOPPED.

IMPLEMENTATION OF GDS COMMITTEE REPORT DELAYED FOR ONE YEAR, STILL PENDING WITH FINANCE MINISTRY.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
HOLD PROTEST DEMONSTRATIONS AT ALL CENTRES AND IN FRONT OF ALL OFFICES ON 23.10.2017.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
FEDERAL SECRETARIAT WILL MEET AND DECLARE FURTHER COURSE OF ACTION.

Dear Comrades,

Government has unleashed a sudden and most damaging attack on Post office Small Savings Schemes. Notifications are already issued permitting all Nationalised Banks and three Private Banks ( ICICI Bank , AXIS Bank and HDFC Bank) to accept deposits for all Small Savings Schemes viz ; Recurring Deposit (RD) , Time Deposits (TD) , Monthly Income Scheme (MIS) Senior Citizen Savings Scheme (SCSS) , Sukanya Samridhi Account (SSA) , Kisan Vikas Patra (KVP) and National Savings Certificate (NSC VIII issue) with effect from 10th October 2017.

         This is a great blow to the Post office Small Savings Schemes and will be a threat to the job security of Postal Employees and also MPKBY /SAS Agents. About 40% of the Revenue and about 50% of the workload of Post office depends on the Post office Small Savings Schemes. Outsourcing of POSSS work to Banks will result in steady fall in Revenue and Workload of Postal Department.

         GDS Committee Report , though submitted to Govt on 24th November 2017 , is still pending with Finance Ministry for approval. GDS Membership verification process has been suddenly stopped by the Government.

          Overall situation in Postal Department is worsening day by day and resentment of the Employees is mounting.

         NFPE CHQ views the above situation with grave concern and calls upon the entirety of Postal and RMS employees including GDS and Casual labourers to conduct mass protest demonstrations at all Centres and in front of all offices on 23rd OCTOBER 2017.

       Urgent meeting of NFPE Federal Secretariat to be held shortly will announce further course of action.

Yours fraternally,

  R.N.PARASHAR
Secretary General,
NFPE.

Wednesday, 11 October 2017

தீபாவளி முதல் நாள் CSI MIGRATION ரத்து

நம் மாநிலச் சங்கத்தின் இடைவிடா முயற்சிக்குக்   கிடைத்த வெற்றி !

தீபாவளி முதல் நாள்
CSI  MIGRATION ரத்து !
"""""""""""""""""""'""'"'""""""""""""""""""""
இன்று காலை நமது CPMG அவர்கள் சென்னை எழும்பூர்  Hotel Aoka வில் Circle Level Excellence விருது வழங்கும் விழாவில் இதர அதிகாரிகளுடன் கலந்து கொண்டிருப் பதால் அவரை CSI பிரச்னைகள் குறித்து மாலை தான் பார்க்க இயலும் என்று மாநில நிர்வாகத்தில் தெரிவித்ததால்,

CEPT Dy.  Director அவர்களிடம் தொடர்பு கொண்டு  17.10.3017 தீபாவளிக்கு முதல் நாள் Migration தள்ளி வைப்பது குறித்து நம் சங்கத்தின் கோரிக்கை மீது Dte. ல் என்ன முடிவெடுக்கப்பட்டது என வினவினோம்.

அதற்கு அவர்,
"உங்கள் கோரிக்கை குறித்து CPMG அவர்களின் பரிந்துரையுடன் DTE க்கு File அனுப்பப்பட்டு அதனடிப்படையில் DTE
இதனை தள்ளி வைக்க உத்திரவிட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனால் Vellore,
R.O., C.O., DAP  அலுவலகங்களது  Migration 17.10.17 லிருந்து 27.10.17 க்கு மாற்றப்பட்டுள்ள தாகவும் ,

ஏற்கனவே 24.10.17 ல் இருந்த கோட்டங்கள் 31.10.17 க்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் ,

இதற்கு அடுத்த நிலையில் குறியிடப்பட்ட கோட்டங்கள் நவம்பர் மாதம் 7 ந்தேதிக்கு மாற்றப்பட்டதாகவும்
தெரிவித்தார்.

DTE  schedule படி ,
இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று MIGRATION இருக்கும் என்று தெரிவித்தார்.

இதர விஷயங்கள் குறித்து DTE மற்றும் CPMG அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கூறினார்.

அவருக்கும் CPMG அவர்களுக்கும் நம் நன்றியினைத் தெரிவித்தோம். 

நூற்றுக்கணக்கான தோழர்கள் தங்களது குடும்பத்துடன் தீபாவளி நிம்மதியாக கொண்டாட இதன் மூலம் வழி ஏற்பட்டது என்பது நமக்கும் மகிழ்ச்சியே.

நம் முயற்சி என்றும், எல்லா பிரச்னைகளிலும் தொடரும்.

தோழமையுடன்,

NFPE அஞ்சல்
மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.

Friday, 6 October 2017

Clarification on bench mark of "Very Good " in cases of MACP

Modified Assured Career Progression Scheme (MACPS) for the Central Government Civilian Employees - Implementation of the 7 th CPC recommendations - Clarification regarding revised benchmark of "Very Good " of APAR grading

 

Tuesday, 3 October 2017

Admissibility of DA for inhouse training

In all cases of Government sponsored training programs which are residential and where boarding & lodging at the training institute are compulsory and are provided at fixed rates, a special allowance in lieu of daily allowance will be admissible to Government servants deputed to undergo such training course. The special allowance irrespective of the period of training course, will be calculated as follows

a. Out station Participants - Actual expenditure on boarding and lodging plus 1/4th of full DA
b. Local Participants - Actual expenditure on boarding and lodging only

PTC mysore clarification letter 
 

தோழர் ஏழுமலை பணிநிறைவு

தோழர் ஏழுமலை பணிநிறைவு

தருமபுரி கோட்டத்தில் பல்லாண்டுகளாக கோட்ட செயலராக --தலைவராக வலம்வந்த தோழர் ஏழுமலை அவர்கள் 03.10.2017 அன்று தன் விருப்ப ஓய்வில் செல்கிறார் அவர்களுக்கு சேலம் மேற்குக் கோட்டச் சார்பாக வாழ்த்துக்கள்

Monday, 2 October 2017

Newsletter 02/2017







Time limit for submission of final claims for medical reimbursement

No. S.14025/19/2015-MS
Government of India
Ministry of Health and Family Welfare
Department of Health & Family Welfare

Nirman Bhawan, New Delhi
Dated 27 May, 2015

OFFICE MEMORANDUM

Subject: Revision of time limit for submission of final claims for reimbursement of medical expenses under CS(MA) Rules, 1944 -regarding.

The undersigned is directed to refer to OM No.F.29-40/68-MA dated 15.10.1968 in which it was laid down that submission of final claims for reimbursement of medical expenses of Central Government servants in respect of a particular spell of illness should ordinarily be preferred within 3 months from the date of completion of treatment.

2. A representation was received from National Council (Staff Side) to extend the time limit for submission of such medical bills from 3 months to 6 months. The matter was examined in the Ministry and it has been decided that the period of 3 months for submission of medical claims be revised to 6 months. Henceforth, only the cases in which the bills are submitted after 6 months from the date of completion of medical treatment/discharge of the patient from the hospital are required to be taken up for condonation. The power of condonation of such delays and other terms and conditions would be same as enumerated in the OM No.S.l4025/8/99/-MS dated 25.05.1999.

3. This issue with the approval of the competent authority.

(Sunil Kumar Gupta)
Under Secretary to the Govt. of India

Tuesday, 26 September 2017

Memorandum Submitted to Circle Union regarding CSI



Monday, 25 September 2017

Instructions for making local arrangement HSG-II


Sunday, 24 September 2017

உடுமலைப்பேட்டை அஞ்சல் மூன்று  சங்கத்தின் 21வது கிளை மாநாடு

இன்று ( 24/9/2017) நடைபெற்ற உடுமலைப்பேட்டை அஞ்சல் மூன்று  சங்கத்தின் 21வது கிளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
************************************
தலைவர்- N. ரத்தினசாமி.

செயலர்-B. ராமசுப்பிரமணியன்

நிதிச்செயலர்- S.S. மோகனசுந்தரம்

********"*********************" மாநிலத் தலைவர் தோழர் மோகன், முன்னாள் பொதுச்செயலர் தோழர் N.S., மாநில உதவிச்செயலரும், மேற்கு மண்டலச்செயலருமான தோழர் A. ராஜேந்திரன், பொள்ளாச்சி அஞ்சல் மூன்று கோட்டத்தலைவர் தோழர்  A.G. சந்திரசேகரன், துணைத்தலைவர் தோழர் ஜவஹர் மற்றும்  சகோதரச் சங்கங்களின்  தலைவர்கள் மாநாட்டினை வாழ்த்திப் பேசினர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்குக் கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்!!!!

                  ********

Friday, 22 September 2017

EC Meeting on 24.09.17

It is proposed to conduct AIPEU GR C EC Meeting on 24.09.17 (Sunday) under the presidentship of com.Jayaraman

Venue : Suramangalam HPO
Date : 24.09.17
Time: 1100 hours
Agenda : Issues in Implementation of CSI

Closure and Privatisation of Public Sector and Government Departments go unabated under Modi regime!

Closure and Privatisation of Public Sector and Government Departments go unabated under Modi regime!
*****************"*****************
CABINET DECIDED TO CLOSE DOWN TWELVE GOVERNMENT OF INDIA PRESSES.
HOLD PROTEST DEMONSTRATIONS AND DHARNAS.

Government decided to close down 12 out of 17 Government of India Presses.

Cabinet rejected recommendation of the Parliamentary standing committee consisting of 32 MPs not to close down any Government of India Presse  and accepted the report of Group of Secretaries to close down

Confederation National Secretariat calls upon all C-O-Cs and Affiliates to conduct protest  demonstrations at all Centers and Dharnas in front of all Government of India Presses and  send resolutions to Prime Minister.

M. Krishnan
Secretary General
Confederation

Sunday, 17 September 2017

தஞ்சாவூர் அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு

வெற்றிகரமாக நடைபெற்ற
தஞ்சாவூர் அஞ்சல் மூன்று
சங்கத்தின் கோட்ட மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (17.9.17) காலை 10.00 மணி தொடங்கி தஞ்சை அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு தஞ்சாவூர்  தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர். M. ராஜந்திரன் அவர்கள்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டை, அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயலர்
தோழர். J.R.,  அவர்கள் துவக்கி
வைத்து உரையாற்றினார்.

சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். A. மனோகரன் ,  அஞ்சல் மூன்றின் மாநில உதவித் தலைவர். தோழர். R.பெருமாள், , மாநில
அமைப்புச் செயலர் தோழர்.
C. சசிகுமார்,  திருவரங்கம் அஞ்சல் மூன்று கோட்டச்செயலர் தோழர்.
T. தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர்
தோழர். V.  மோகன்குமார், பாபநாசம் அஞ்சல் மூன்று கிளச் செயலர் தோழர். D.R. லெனின், முன்னாள் செயலர்
தோழர். J. குணசீலன், தலைவர்
V. ஶ்ரீ ராம் ,  மன்னை கிளைச்செயலர் தோழர். S. சேதுராமன், தஞ்சை அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். V.பஞ்சநாதன் , கோட்டத் தலைவர் தோழர். P. மாரிமுத்து, AIPEU GDS  தஞ்சை கோட்டச் செயலர் தோழர்.R.  தசரதன், தஞ்சை R3 கிளை நிர்வாகி தோழர்.  
J. கோவிந்தராஜன்  உள்ளிட்ட தலைவர்கள்/ நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரை வழங்கினர்

நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி
நடைபெற்றது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக
தோழர். T. வரதராஜன்
அவர்களும்,

கோட்டச் செயலராக
தோழர். S. செல்வகுமார் 
அவர்களும்,

நிதிச்செயலராக
K.  நீலவண்ணன் யாதவ் 
அவர்களும்

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் கோட்ட சங்கத்தின்

மகிளா கமிட்டியின்  தலைவராக
தோழியர். B. லதா அவர்களும்,

மகிளா கமிட்டியின் கன்வீனராக
தோழியர். N. மாலதி அவர்களும் ,

இவர்களுடன் இணைந்து பணியாற்ற மேலும்  10 உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்

Thursday, 14 September 2017

Know a rule

Volumetric Weight:

1. Wherever the postage, tariff or charges are fixed for a postal article based on weight , the weight shall mean the gross or the volumetric weight whichever is more.

2. Gross Weight: Gross weight is the weight shown by a standard weighing scale. When the Article is appropriately placed on to or suspended from the said scale.

3. Volumetric Weight: volumetric weight of the article shall be arrived at from the volume of that article using the appropriate formulae.

4. Exception: Volumetric weight need not be determined in following cases.
(a) If the sum of the length, breadth and height is not more than 90 centimeters, and any of the dimensions is not more than 60 centimeters.

(b) In case of an article is in roll form (Cylindrical) if the length and diameter each are less than 90 centimeters.

These exceptions will also applicable to Speed Post article.

5. *Procedure for calculation of volume:* Measure each dimension in centimeters rounded off to next higher centimeter.
(a) (i) *Cuboids* (e.g. square or Rectangular): Its Dimensions means length, Breadth and height.

(ii) *Cylindrical rolls:* Dimensions means diameter of its circular base and length.
(b) *Articles other than above shapes should not be accepted*

(c) *Formula for calculation of volumetric weight*
(i) Cuboids (e.g. Square, Rectangular)
Volume = Length X Breadth X Height

(ii) Cylindrical Roll.
Volume = 0.785 X (Diameter of Circular base)2 X Length

The Volume so arrived at in cubic centimeters should be rounded off to the next higher whole number.

6. *Formula to calculate volumetric weight: When the volume is calculated in cubic centimeters, the formula to determine the volumetric weight in kilograms shall be*

*Volumetric Weight in Kilo Gram = (Volume in Centimeters)3 ÷ 6000*

Volumetric weight so arrived at shall be rounded off to the next higher kilogram.

7. Postage or tariff or charges for the Postal articles shall be determined with reference to weight i.e. gross weight or volumetric weight, whichever is more.

8. Postage/Tariff charts for all kinds of postal articles may be worked out beyond the corresponding weight (as in gross weight) limits for calculation of due postage/Tariff.

9. The maximum weight and size limits for different kinds of postal articles are prescribed in Clause 100, 124, 125, 128(2), 129(2), 132, 137(d) and (e), 146(1) and (2) of Post Office Guide Part-I.
(DG Posts letter number 8-9/2007-D Dt. 16/2/09 and 4/3/09 and letter number 51-04/2009-BD & MD Dt. 24/3/09)

Obituary

பட்டுக்கோட்டை கோட்டத் தலைவர் தோழியர் V. முத்துலெட்சுமி அவர்கள் இன்று உடல் நலக் குறைவின்காரணமாக இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் பிரார்த்திக்கிறோம்.

Wednesday, 13 September 2017

Obituary

வருந்துகிறோம் !
"""""""""""""""""""""""'"''"'"""'
நமது NFPE நிர்வாகப் பிரிவு அலுவலர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலரும்,  கணக்கு அதிகாரியாக
(A.O.) புதுடெல்லி   அஞ்சல்துறை இயக்குனரகத்தில் பணியாற்றி டிசம்பர் 2016 ல் ஓய்வு பெற்றவரும்,  அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் சொந்த ஊரைச் சேர்ந்தவரும், அவரது  நீண்டகால நெருங்கிய நண்பருமான

தோழர்.
G. கீர்த்திவாசன் அவர்கள்

இன்று மாலையில் சென்னையில் அவரது மகள் இல்லத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடன் மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை அருகில் உள்ள  பூந்தோட்டம் பகுதியில் உள்ள  P. திருமாளம் கிராமத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.

அவரது மறைவிற்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரது ஆன்மா அமைதிபெற வேண்டுகிறோம்.

இவண்
NFPE அஞ்சல் மூன்று சங்கம் ,
Salem West Division

Tuesday, 12 September 2017

GDS PAY COMMITTEE IMPLEMENTATION தற்போதைய நிலவரம்

முக்கிய செய்தி:-
GDS PAY COMMITTEE IMPLEMENTATION தற்போதைய நிலவரம்

NFPE சம்மேளன மாபொதுச்செயலாளர்
தோழர் R.N. பராசார் இன்று மதியம் அஞ்சல்துறை உயரதிகாரிகளை சந்தித்து GDS COMMITTEE IMPLEMENTATION குறித்து பேசியுள்ளார். அவரிடம் நமது துறை உயரதிகாரிகள்
"நிதி அமைச்சகம் எழுப்பிய அனைத்து Queries(வினாக்கள்,
சந்தேகங்கள்) களுக்கும் அஞ்சல் துறையின் சார்பில் பதில்கள் அனுப்பபட்டுவிட்டன. நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நிதியமைச்சக ஒப்புதல் பெற்று கோப்பு அஞ்சல்துறை தலைமையகத்திற்கு வந்து விடும். கோப்பு(FILE) அஞ்சல்துறையால் பெறப்பட்டவுடன் அமலாக்கத்திற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் அஞ்சல்துறைக்கு கோப்பு (FILE)வந்தவுடன் எவ்வித தாமதமும் இன்றி விரைவில் அமலாக்கம் செய்வதற்கு பணிகள்  நடைபெறும் " என தெரிவித்துள்ளனர்.

Wednesday, 30 August 2017

தமிழகத்தில் எழுத்தர் பகுதியில் கேடர் சீரமைப்பும் தற்போதைய நிலையும்

தமிழகத்தில் எழுத்தர் பகுதியில் கேடர்
சீரமைப்பும்  தற்போதைய நிலையும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு, வணக்கம்.

கடந்த 2.8.2017  அன்று புது டெல்லியில் நடை பெற்ற கேடர் சீரமைப்பு குறித்து பரிசீலிக்க அமைக்கப் பட்ட கமிட்டியின் கூட்டத்தில் ஊழியர் தரப்பில், நம்முடைய அகில இந்திய சங்கத்தின் சார்பில் நாம் கலந்து கொண்டதும் அதில் சரியான முடிவுகள் எடுக்கப்படாததும் உங்களுக்குத் தெரிவித்தி ருந்தோம்.

தற்போது எதிர் வரும் 1.9.2017 அன்று அந்த கமிட்டியின் அதிகாரிகள் குழு இறுதி முடிவுகள் எடுக்க புது டெல்லியில்  கூட உள்ள நிலையில் நம்முடைய கருத்துக்களை மீண்டும் எடுத்துரைக்க முடிவெடுத்து  இன்று நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் இந்தக் கமிட்டியின் உறுப்பினரும் நம்முடைய PMG, MM& BD யாக இருக்கின்ற திரு.J.T. வெங்கடேஸ்வரலு அவர்களை சந்தித்து நம்முடைய கோரிக்கை மனுவினைக் கொடுத்து பேசினோம். அதன்மீது அவர் அளித்த பதில் .

1. கமிட்டியின் பரிந்துரை என்பது கிட்டத்தட்ட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
2. இதில் ஏற்கனவே அனைத்து காசாளர் பதவியும் அடிப்படை விதிகளின்படி எழுத்தருக்கானது என்று பரிந்துரைக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மட்டும் அனைத்து காசாளர் பதவிகளும் LSG யாக IDENTIFY செய்யப்பட்டுள்ளன.
4. இப்படியாக மொத்தம் 694 காசாளர்  பதவிகள் LSG யாக அடையாளம் காணப்பட்டு அவற்றில் பெரும்பகுதி எண்ணிக்கையில் தமிழகத்தில் நிரப்பப்பட்டுள்ளன.
5. ஏற்கனவே இரண்டாவது பட்டியலில் உள்ள ஊழியர்களுக்கு பெருநகர கோட்டங்களில் இடம் இல்லாத காரணத்தால் DECLINE செய்த பதவிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 1200 பதவிகள் வெளிக் கோட்டங்களில்  நிரப்ப வேண்டியுள்ளது.
6. இந்த நிலையில், TREASURY மாற்றப்பட்டால் மேலும் 694 ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது  என்பதை நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில்  சுட்டிக் காட்டியதன் பேரில் தமிழகத்திற்கு மட்டும் இதில் விலக்கு அளிக்க பரிந்துரைப்பதாக  கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
7. இது தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லை என்பதை சுட்டிக் காட்டியதால், இது குறித்த கோரிக்கை மனுவினை நமது  பொதுச் செயலர் மூலம் கமிட்டியின் CHAIRMAN அவர்களுக்கு அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதன்படியே தலைவர்கள் KVS மற்றும் M.கிருஷ்ணன் அவர்களின் வழி காட்டுதலின்படி நம்முடைய மாதிரி கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு நம்முடைய பொதுச் செயலர் தோழர். பராசர் அவர்களின் பார்வைக்கும் அவர்களின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் இதன் மீது தன்னுடைய முடிவுகளை எடுத்து கமிட்டி தலைவருக்கும் நம்முடைய இலாக்கா முதல்வருக்கும் அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

மேலும் இதன் மீது நேரில் பேசி தமிழக அஞ்சல் மூன்றின்  கோரிக்கை மனுவினை அளித்திடுமாறு நம்முடைய கர்நாடகா அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். ஜானகிராம் அவர்களிடம் தொலைபேசியில் பேசி அவர்களுக்கும் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மனுவின் நகலை அனுப்பியுள்ளோம். அதனை நாளை காலை அவர் நேரிடையாக கர்நாடகா CPMG யும் கமிட்டியின் தலைவருமான திரு. சார்லஸ் லோபோ அவர்களிடம் அளித்துப் பேச உள்ளார். மேலும்
திரு . லோபோ அவர்களுக்கும் நம்முடைய மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு அவரது உதவியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர செய்திகள் :

1. தமிழகத்தில் கேடர் சீரமைப்பு திட்ட அமலாக்கத்தால் குறைக்கப்பட்ட 3358 எழுத்தர் பதவிகளின் காரணமாக (FEEDER CADRE) எழுத்தரில் காலிப் பணியிடங்கள் இல்லை என முடிவெடுக்கப்பட்டது. இதனால்

அ) 2016-17 மற்றும்  2017-18 க்கான எழுத்தர் தேர்வுகள்அறிவிக்கை செய்யப்படவில்லை

ஆ) அனைத்து விதி 38 இடமாறுதல்களும் நிறுத்தப்பட்டது.

ஆனால் நம்முடைய 23.8.2017 வேலை நிறுத்தம் காரணமாக தற்போது காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு 2016-17 மற்றும்  2017-18 க்கான  அறிவிக்கை வெளியிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது.

இந்தக் காலியிடங்கள் என்பது சென்னை பெருநகரத்தில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, அண்ணா சாலை போன்ற ஒரு சில கோட்டங்களிலும் இதர மண்டலங்களில் ஒரு சில கோட்டங்களில் மட்டுமே இருப்பதாக அறிக்கை கிடைத்துள்ளது.

ஒட்டு மொத்தமாக இரண்டு ஆண்டுகள் கணக்கில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தக் காலியிடங்கள் உள்ளன.  இதர கோட்டங்களில் எழுத்தரில் உபரி காட்டப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 2015-16 க்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட எழுத்தர்களில் பல கோட்டங்களில் பணி நியமனம் அளிக்க முடியாத நிலையும், தேர்வு பெற்ற எழுத்தர்களில் பெரும் பகுதியினருக்கு அவர்கள் கேட்காமலேயே சென்னை பெருநகரத்தில் பணி நியமனமும் கிடைக்க உள்ளது. 

மேலும் நம்முடைய தொடர்ந்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே உத்திரவிடப்பட்டு நிலுவையில் இருந்த அனைத்து விதி 38 இட மாறுதல்களும் உடனே அமல் படுத்திட கடந்த வாரம் உத்திரவு வெளியிடப்பட்டது . அதன்படி 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது இடமாற்றம் பெறுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை பெரு நகரத்தில் அதிகம் பயனடையும் கோட்டம் சென்னை மத்திய கோட்டமாக இருக்கும். விதி 38 மற்றும் புதிய பணி நியமனத்தில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட எழுத்தர்களை இந்தகோட்டம் பெற உள்ளது. 

ஆனால் இரண்டாவது கட்ட கேடர் சீரமைப்பு உத்திரவு தற்போதுள்ள நிலையில் இடப்பட்டால், சென்னை பெரு நகர கோட்டங்களில் எழுத்தர்கள் SANCTIONED  STRENGTH ஐ தாண்டி உபரி என அறிவிக்கப்பட்டு மீண்டும் அவர்களை இடமாற்றம் செய்திட நேரும் என்பதையும் நாம் நம்முடைய கோரிக்கை  மனுவில் சுட்டிக் கட்டியுள்ளோம் என்பதனையும் இந்த இடத்தில் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

ஒரு புறம் உயர் தொழில் நுட்பம் புகுத்தப்படும் சூழலில், மறுபுறம் ஆழிப் பேரலையாக இந்த ஆட்பற்றாக்குறை என்பது அதிகம்  இருந்தும், நிரப்பிட இயலாத  செயற்கையான சூழலாக நம்மை   தாக்க உள்ளது என்பதும்  இதனை எதிர்த்து நாம் பெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டியது என்பதும் மிகப் பெரும் உண்மையே.

இதனை முன் கூட்டியே அறிந்து முதலில் அறிவிக்கும் மாநிலச் சங்கமும், அதிகார மட்டத்திற்கும் அகில இந்திய சங்கத்திற்கும் எடுத்துச் செல்லும் முதல் மாநிலச் சங்கமும் நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் சங்கமே.

விடை கிடைக்குமா ? வீதி இறங்கிப் போராட்டமா ? ஒரு மாதத்தில் தெரியவரும். நம்முடைய கோரிக்கை மனு கீழே உங்களின் பார்வைக்கு  அளிக்கப்பட்டுள்ளது.

29.8.2017 மதுரை மண்டல இரு மாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி மற்றும் நேர்காணல் விபரங்கள், ஏற்கனவே மாநிலச் செயலருடன் கூட்டத்தில் கலந்துகொண்ட நமது  நெல்லை கோட்டச் செயலரால் பதியப் பட்டதால் அந்த விபரங்களை மீண்டும் இங்கே தெரிவிக்க வேண்டியதில்லை என்று எண்ணுகிறோம்.