Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Saturday, 28 February 2015

COM. K. PACHIYAPPAN, EX- CIRCLE ORG. SECRETARY RETIRING FROM SERVICE !

அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலரும் பவானி அஞ்சல் மூன்று கிளையின் 
முன்னாள்  செயலர், தலைவரும் ஆகிய அன்புக்குரிய  
தோழர். S . பச்சியப்பன் அவர்கள்  
(98944 37337)
இன்று (28.2.2015) இலாக்காவில் இருந்து  41 ஆண்டு கால சேவைக்குப் பின் பணி  நிறைவு பெறுகிறார். அவரது தொழிற் சங்கப் பணி  ஈரோடு கோட்டத்தில் மட்டுமல்லாமல் மாநிலச் சங்கத்திலும்  பரிணமித்தது. மிகச் சிறந்த செயல் வீரர். ஆற்றலாளர். தொழிற் சங்க வாதி . மனித நேயம் மிக்கவர். எல்லாவற்றுக்கும் மேலாக  அனைவருடனும்  அன்பு காட்டி பழகும்  இனிய  நண்பர் . அவர்தம்  இலாக்கா  பணி  நிறைவு நாளில் எல்லா நலனும்  வளமும் பெற்று அவரது குடும்பத்தாருடன்  நீடு  வாழ  நம்  கோவை மண்டலம்   நெஞ்சார வாழ்த்துகிறது !


சி.சஞ்சீவி, மண்டலச் செயலர், கோவை மேற்கு மண்டலம் 

WESTERN REGION DHARNA IN FRONT OF RO, COIMBATORE ON 27.02.2015


J C A
அனைத்திந்திய அஞ்சல் ,RMS,MMS,PSD GDS சங்கங்கள் கூட்டுப் போராட்ட குழு
கோவை மண்டலம், கோவை 641001
மாநில சங்கம் மற்றும் சம்மேளன அறைகூவல்

                                    .நமது மத்திய சங்க அறைகூவளின்படி 27.02.2015  அன்று மாலை 6.00  மணிக்கு கோவை மண்டல அலுவலகத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் இரவு 8.00  மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது, தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் கோட்ட/கிளைச்  செயலர்கள் மற்றும் NFPE(GDS) கோட்ட/கிளைச்  செயலர்கள்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட் முடிவின்படி நிர்வாகத்தின் RPLI/PLI/RD/ePOST போன்றவற்றை  இலாக்கா விதிகளுக்கு முரணாக பிடிக்கச் சொல்லி ஊழியர்களை கசக்கி பிழியும் அதிகாரிகளின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும் , டெல்லியில் கூடிய NFPE/FNPO மற்றும் GDS  சங்கங்களை உள்ளடக்கிய கூடு போராட்டக்குழு நமது கோரிக்கைகளான ஏழாவது ஊதிய குழுவில் GDS கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும்,50% பஞ்சபடியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் ,இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிடவேண்டும் .இலாக்காவை ஆறு கூறாகப் பிரித்து  தனியார் மாயம் செய்வதை கைவிடவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும்  மண்டலச் செயலர்கள் ,மாநில சங்க நிர்வாகிகள் , முன்னாள் அகில இந்திய சங்க நிர்வாகிகள்  ஆகியோர்  பேசினார்கள்.  கோவை மண்டலம் முழுதும் இருந்து கோட்ட நிர்வாகிகள் உட்பட பல தோழர்கள் /தோழியர்கள் அனைத்து பிரிவுகளில் இருந்தும் சுமார் 400  க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு வீர முழக்கமிட்ட காட்சி கண்கொள்ளாத ஒன்று 





































27.02.2015 REGIONAL LEVEL DHARNA ON PJCA / CIRCLE UNIONS' CALL A GRAND SUCCESS

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம். நேற்று (27.02.2015)  அஞ்சல்  மத்திய JCA  மற்றும் அஞ்சல் மூன்று ,  GDS  மாநிலச் சங்கங்களின் அழைப்பை ஏற்று மண்டல அலுவலகங்கள் முன்பாக  அறிவிக்கப்பட்ட  போராட்டம் பெரும் வெற்றி பெற்றது.  

சென்னையில் CPMG  அலுவலக வளாகத்தில்  இந்த நிகழ்வு முழு நாள் போராட்டமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது .மேலும் தென் மண்டல அதிகாரியின் தொழிற்சங்க விரோத நடவடிக்கையை எதிர்த்து கண்டனப் போராட்டமாகவும்  நடத்தப் பட்டது. தார்ணா  போராட்டத்திற்கு  GDS  மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் தலைமை வகித்து சிறப்பாக நடத்தினார். தார்ணா  போராட்டத்தை   அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். K . ராகவேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். NFPE  இணைப்புக் குழு தலைவரும் R  4 மாநிலச் செயலருமான தோழர்.  B . பரந்தாமன் , NFPE  உதவிப் பொதுச் செயலர் தோழர்.S . ரகுபதி, செயல் தலைவர் தோழர். A .மனோகரன், அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர் N . கோபாலகிருஷ்ணன் , உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி, அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன்,  அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். M . கண்ணையன்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S. அவர்கள்  தார்ணா  போராட்டத்தை முடித்து வைத்து  சிறப்புரை ஆற்றினார்.  தார்ணா  ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றி மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி  சிறப்பாகச் செய்திருந்தார். சென்னை பெருநகர மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  செயலர்கள்/ நிர்வாகிகள் , தோழர்/ தோழியர்  பெருமளவில் முழு நேரம்  கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

இதுபோல மத்திய மண்டலத்தின் திருச்சியில் PMG அலுவலக வளாகத்தில்  முழு நாள் தார்ணா போராட்டம்  சிறப்பாக நடத்தப்பட்டது . அஞ்சல் மூன்றின் மத்திய மண்டலச்  செயலர் தோழர். R . குமார் அவர்கள் இந்த  தார்ணா போராட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.  , மாநில உதவித் தலைவர் தோழர் J . ஜானகிராமன் , மாநில உதவி நிதிச் செயலர் தோழர்               R . பெருமாள் , GDS  மாநில நிதிச் செயலர் தோழர். R . விஷ்ணுதேவன், GDS  மாநில உதவித் தலைவர் தோழர். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.  மண்டலத்தின் பல்வேறு கோட்டங்களில் இருந்து தோழர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு  தார்ணா போராட்டத்தை சிறப்பித்தனர்.


மேற்கு மண்டலத்தில் இந்த போராட்டம்   கோவை  NFPE அஞ்சல் RMS  MMS, GDS  சங்கங்களின் சார்பில்  மாலை நேர ஆர்பாட்டமாக  இரவு 08.15 மணி வரை  R .S . புர ம்  மண்டல அலுவலக வாயிலில்  சிறப்பாக நடைபெற்றது . மண்டலம் முழுவதிலிருந்தும் சுமார் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் / தோழியர்கள்  இதில் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்று மாநில உதவித்தலைவர் தோழர். எபினேசர் காந்தி சிறப்பாக செய்திருந்தார். அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்  தோழர். C. சஞ்சீவி , மாநில அமைப்புச் செயலர் தோழர். A . ராஜேந்திரன் , GDS  மாநில உதவிச் செயலர் தோழர்.  மகாலிங்கம்  உள்ளிட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கிப் பேசினார் .


தென் மண்டலத்தில்  மண்டல அதிகாரி  தர்ணா  மற்றும் விடுப்பு மறுப்பு செய்து உத்திரவிட்டிருந்ததால்  அங்கு போராட்டம்  நடைபெறவில்லை .


மூன்று மண்டலங்களிலும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு  சிறப்பித்த அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/ கிளைச் செயலர்கள் மற்றும் தோழர்/ தோழியர்களுக்கு  தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

சென்னையில் நடைபெற்ற தார்ணா  போராட்டத்தில் பேசும்  போது நமது NFPE  உதவி மாபொதுச்  செயலர் தோழர். S .  ரகுபதி அவர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் உடனே வழங்க வேண்டாம் என்றும் மற்றைய சங்கங்களையும் கலந்துகொண்டு  ஒரு கூட்டுப் போராட்டமாக, வலுவாக இதனைச் செய்திட வேண்டும் என்றும்  வேண்டுகோள் (APPEAL )  விடுத்தார். இதனை சம்மேளனம் சார்பாகவே தாம் செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் பல மூத்த தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகள்  இந்த வேண்டுகோளை தொடர்ந்து வைத்தனர். எனவே அனைவரின் கருத்தை ஏற்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவதை  சற்று தள்ளி வைப்பதெனவும்    கூட்டுப் போராட்டமாக  மாற்றுவதற்கு எதிர்வரும் 2.3.2015 சென்னையில் நடைபெற  உள்ள தார்ணா போராட்டத்திற்குப் பின்னர் NFPE  இன் அனைத்து சங்கங்களையும் மீண்டும் ஒருமுறை கலந்து முடிவெப்பதென்றும்  தார்ணா  போராட்டத்தின்  முடிவில்  மாநிலச் சங்கங்களின் சார்பாக  கூட்டாக அறிவிப்பு செய்யப்பட்டது. 

நிகழ்வுகளின் புகைப்படங்கள்  மண்டலச் செயலர்களிடமிருந்து வந்து சேராததால்  அவற்றை உடன் பிரசுரிக்க இயலவில்லை . புகைப்படங்கள் கிடைத்தவுடன்   அடுத்த வாரத்தில் பிரசுரிக்கப் படும் .

தலைவர்களின் வழி காட்டுதல்களை ஏற்போம் !
கூட்டுப் போராட்டத்திற்கு உடன் முயற்சி மேற்கொள்வோம் ! 
கூட்டு பேர  சக்தியை மேலும் வலுப்படுத்துவோம் !  
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !

Friday, 27 February 2015

SUCCESS TO CHQ EFFORTS IN GETTING R.S. PURAM HPO CONVERTED INTO PM GR. III OFFICE

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்  கோவை கோட்டத்தில் எந்தவொரு அஞ்சலகமும் PM  GR III STATUS  இல் இல்லை என்றும்  அதனால் R.S.PURAM HPO மற்றும்  COIMBATORE  CENTRAL  S .O . ஆகிய அலுவலகங்களை PM  GR III  STATUS க்கு மாற்றித் தரும்படி  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலமாக நாம் கேட்டிருந்தோம்.  அதற்கு  இலாக்காவில்  பரிசீலிப்பதாக உறுதி அளித்திருந்தார்கள் . தற்போது நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர் . N .S  அவர்கள்  இந்த பிரச்சினை குறித்து மீண்டும் நினைவூட்டி  இந்தப் பிரச்சினைய எடுத்துச் சென்றுள்ளார். தற்போது  அவருக்கு  கோவை கோட்டத்தில்  R .S . PURAM  தலைமை அஞ்சலகம்   PM  GR III யாக தகுதி மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளதாக   DTE  இல் தெரிவித்துள்ளார்கள். 


இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டு  தீர்த்து வைத்த  நமது முன்னாள்  அகில இந்திய பொதுச் செயலர்  தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர். .N .S   ஆகியோருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!  முந்தைய கடிதங்களின் நகல்கள் கீழே உங்கள் பார்வைக்கு :-

Wednesday, 25 February 2015

General Secretary letter to the Department on S S A Account

Corrections sought for in Sukanya Sumriddhi Account Rules 2014 -


—CLICK HERE

MO VIDESH SERVICES DISCONTINUED WITH IMMEDIATE EFFECT



EXEMPTION FROM PHYSICAL APPEARANCE FOR LIFE CERTIFICATES



7 th CPC HAS INVITED NATIONAL COUNCIL JCM(STAFF SIDE) FOR A MEETING ON 25.02.2015

PRESS NEWS:- INFOSYS WAS PENALISED OF RS.9.33 CRORES FOR DEFAULT IN SERVICE

PRESS NEWS:- INFOSYS WAS PENALISED OF RS.9.33 CRORES FOR DEFAULT IN SERVICE

தொடர்ந்த  சேவைக் குறைபாட்டுக்கு  INFOSYS   மீது  BESCOM  ரூ. 9.33 கோடி  தண்டம் (PENALTY ) வசூலித்ததாக  பத்திரிக்கை  செய்தி . 
 அஞ்சலில் உள்ள சேவைக் குறைபாட்டுக்கு  நம் அதிகாரிகள்  தண்டத்தொகை வசூலிப்பார்களா  அல்லது மேலும்  'BILL'  போட்டு  கொடுப் பார்களா ? காலம்தான்  பதில் சொல்ல வேண்டும் !
பார்க்க  பத்திரிக்கை  செய்தி :-
BANGALORE MIRROR 
cover story.

Blame it on Infosys, says Bescom MD on excess power bills
By Niranjan Kaggere, Bangalore Mirror Bureau | Apr 22, 2014, 02.00 AM IST

Pankaj Kumar Pandey says power utility had identified 150 issues based on consumer complaints, but Infosys was able to rectify just 85. Only govt can scrap the contract

In February this year, some United Bank of India employees had reportedly blamed inherent deficiencies in 'Finacle', the financial software provided by Infosys, the Bangalore based IT bellwether giant, for the bank's mounting NPAs. The NPA controversy had led to the exit of Archana Bhargava, chairman of the bank. Now, Bangalore Electricity Supply Company (Bescom) has called into question the reliability of the company's billing software.

Under heavy criticism from consumers and the Karnataka Electricity Regulatory Commission (KERC) for persistent errors in the billing system, Pankaj Kumar Pandey, managing director, Bescom, blamed Infosys for the mess. Making his submission before KERC on Monday during a public hearing over a tariff review petition submitted by all the five Escoms for the year 2014-15, Pandey said, "We are not satisfied with the software."

Pandey admitted that he has been aware of the faulty software for some time, but claimed his hands were tied. "We have received several complaints about the variations in bills generated by the software," Pandey told the panel of KERC members. "We are not satisfied with the software. In fact, we had issued several notices to them (Infosys) and even penalised them by levying a penalty of Rs 9.33 crore. Even then they have not done anything. Based on the complaints, we identified about 150 issues and asked them to sort them out. However, they were able to address only 85 of them. They blame the glitches on the server not working properly."

When the KERC panel asked Pandey why the software hadn't been changed despite being aware of the glitches, Pandey said, "The government has to take a decision on it as it was the government which handed Infosys the contract. We have written to the chief secretary about the burgeoning problem pertaining to billing and we will soon hold a meeting with the chief secretary in this regard. The government has to take a decision on it."

The problem had snowballed into a major controversy with several individual consumers, consumer rights activists complaining to both Bescom and KERC. "It is not just one or two issues, but several," N Chandra Shekhar, a consumer activist, told BM. "Ever since Bescom switched over from their previous billing software to Infosys billing software, payment of bills online has become a major problem. A few months ago, RR numbers were mixed up resulting in the erroneous calculation of consumption."

The shadow-boxing between Bescom and Infosys over billing-related issues has been going on for quite some time. It turned into a slanging match when the billing system crashed in October last year. The bug was fixed, but the problem again resurfaced in November. And while Bescom has been blaming Infosys, the latter has claimed that the power utility owes it crores of rupees.

FINACLE PROBLEM

STATUS OF FINNACLE AT DOP...SITUATION MAY GET WORSE

  Dear comrades,

Below is the situation prevailing at our prestigious and historic department from the day Finnacle introduced.If the same situation continues department will not exist .This is for sure.Below is just an example.

 

"For the past 3 days cant even do a single transaction in CBS finacle." - voice of the common staff

இது  மக்களின்  குரல்  !  
உரோமாபுரி   பற்றி  எரிகிறது ....  
'இன்னும்  கொஞ்சம்  migration எண்ணெய்   ஊற்றுகிறேன்"  
என்று கூறும்   நிர்வாகம் ...  

இலாக்கா  வாழுமா ? வாடிக்கையாளர் சேவை 
மேலும் மேலும் சீரழியுமா ?  
BSNLஐ  முடமாக்கி ..  RELIANCE  அம்பானிகளை 
உலகக் கோடீஸ்வரர்கள் ஆக்கியது போல.....
   
அஞ்சலிலும் செய்திடவா   இந்த  வேலைகள்  ? 
காலம்  பதில் சொல்லட்டும் .... 
Lsg PM Gr, Karthik Eyan and 5 others commented on this.

 
Muthu Lsg PM Gr feeling broken
For the past 3 days cant even do a single transaction in CBS finacle.
If they cant give support for 1,50,000 postal outlets then Why shoud they asking for migration?
Public uttering filthy languages against counter staffs and postmaster and cant even tolerating these kind of wounds
Like ·  ·