Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Monday, 31 December 2012



                                  புத்தாண்டு வாழ்த்துக்கள்...  
                     
அறுசுவையின் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
இந்த ஆண்டு முழுவதும் என் சந்தோஷங்களில் தானும் சந்தோஷப்பட்டு....
வருந்திய போது ஆறுதல் சொல்லி...
குழம்பிய நேரங்களில் தெளிய வைத்து...
சிறு சிறு விஷயங்களுக்கு கூட பாராட்டி ஊக்கமளித்து....
இந்த ஆண்டு முழுவதும் மட்டும் அல்ல...
என் ஆயுள் முழுவதும் என்னுடன் இருக்க போகும்தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து
என் தோழர் தோழிகளுக்கு நன்றிகள் பல.....
வரவிருக்கும் புத்தாண்டில் உங்கள் வாழ்வு...தங்கமாய் வைரமாய் மின்ன இறைவனை வணங்கி    வாழ்த்துகிறேன்...... வாழ்க வளமுடன்.......
என்றும் உங்கள் சேவையில்
சி.சஞ்சீவி ,கோட்ட செயலர்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம் ,சேலம் 636005.           

Saturday, 29 December 2012

CHQ NEWS

DEMONSTRATION ON 28-12-2012 AT SALEM WEST DIVISION AGAINST ABOLITION OF POSTS BY THE DEPT.


NFPE -FNPO சம்மேளனங்கள் கூட்டுப் போராட்டக் குழு  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து  28/12/2012 வெள்ளி கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு  சேலம் மேற்கு கோட்டத்தின் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. AIPEU P3  தலைவர் தோழர்கள் .K பரமசிவம், P4 தலைவர் R.வரதராஜன் GDS(NFPE)கௌரவத் தலைவர் K.கண்ணபிரான் கூட்டு  தலைமை தாங்க அமைப்பு செயலர் தோழர்.G.R.மாதேஸ்வரன் விண்ணதிர கோசமிட கோட்ட செயலர் C.சஞ்சீவி தோழர்கள் K.S.புகழேந்தி ,A.ராமலிங்கம்,சந்திரசேகரன்,உள்ளிட்டோர் விளக்கவுரை ஆற்றி சிறப்பித்தனர் . குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு நமது மத்திய சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்டும் சேலம் மேற்கு கோட்டத்தின்  கடைக்கோடி வரை உள்ள தோழர்கள் வலைத்தளத்தின் அறிவிப்பை பார்த்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும்  ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கடிதத் தந்தியை  நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும்  அனுப்பப்பட்டது 

---C.SANJEEVI,DVL SECRETARY P3 SALEMWEST-

28.12.12 DEMONSTRATION SUCCESSFUL

2005 முதல் 2008 வரையில்  நேரடித்  தேர்வுக்கான  காலியிடங்களில் SCREENING  COMMITTEE  முடிவு அடிப்படையில் SCRAP  செய்வதாக முடிவெடுக்கப்பட்டு ,  நம்முடைய எதிர்ப்பினால்  இதுவரை , ஒழிக்கப்படாமலும்  அதே நேரம் நிரப்பப் படாமலும்  SKELETON  இல் வைத்திருந்த 17093  இலாக்கா பணியிடங்களை  தற்போது  நிதியமைச்சக உத்திரவு அடிப்படையில்  ABOLISH  செய்திட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து  முதல் கட்டமாக  நேற்று (28.12.12)  நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய JCA   பணித்திருந்தது.

சென்னையில் CPMG  அலுவலக வாயிலில்  மதியம் சுமார் 1.00 மணியளவில்  மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  கிட்டத்தட்ட 300 தோழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது  மிகச் சிறப்பான நிகழ்வு.  NFPE  அஞ்சல் மூன்றின்  மாநிலச் செயலர்  தோழர்.J.R. அவர்களும்  FNPO  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். G.P. முத்துகிருஷ்ணன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்க , NFPE /FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொண்டு  கண்டன உரையாற்றினார்கள்.  சம்மேளன/அகில இந்தியச் சங்க நிர்வாகிகள்  தோழர். S . ரகுபதி , தோழர். NG , தோழர். A . வீரமணி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இதேபோல  மதுரை, திருநெல்வேலி, திருச்சி ,ஸ்ரீரங்கம், அரக்கோணம் , காஞ்சிபுரம், திருப்பத்தூர் , திருப்பூர், சேலம் மேற்கு  போன்ற இடங்களில்  சிறப்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக  மாநிலச் சங்கத்திற்கு  தகவல்  கிடைத்தது . இதர பகுதிகளில் இருந்து இன்னும் இந்த  நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வந்து சேரவில்லை . சம்மேளன அறைகூவலை ஏற்று, மாநிலச் சங்க அறைகூவலை ஏற்று,ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திய  அனைத்து கோட்ட/ கிளைச் சங்கங்களுக்கும் , சென்னை பெருநகரில்  மிகச் சிறப்பான வகையில் அதிக எண்ணிக்கையில்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  தோழர்களுக்கும் , அதற்கு  ஊழியர்களை ஒருங்கிணைத்த  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. 

WE GOT SUCCESS IN LSG AND MDU PTC ISSUES


அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கங்கள் ! நேற்றைய வலைத்தளச் செய்தியில்  நாம் தெரிவித்த படி , நமது முன்னாள் பொதுச் செயலரும் Leader, staff  side , JCM DC  ஆகவும்  உள்ள  தோழர் KVS  அவர்கள்  இன்று  நடைபெற்ற  JCM  கூட்டத்தில்  பல் வேறு பிரச்சினைகள் குறித்து  இலாக்கா முதல்வருடனும் , POSTAL BOARD  MEMBER களுடனும்  விவாதித்துள்ளார் . அவை குறித்த விரிவான செய்திகளை  நாளை விரிவாக வெளி யிடுகிறோம்.

நாம்  அவரிடம்  கூறியிருந்த  இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து     விவாதிக்கப்பட்டதன் முடிவுகள்  கீழே  அளித்துள்ளோம்.

1. தமிழ்க்  அஞ்சல் நிர்வாகம் LSG  பதவி உயர்வு அளிப்பதில் எடுத் துள்ள முடிவான  CONFIRMATION  அடிப்படையில்  SENIORITY  நிர்ணயம் செய்து பதவி உயர்வு அளிப்பது  என்பது  நிறுத்தப்படும் .  ஏற்கனவே JCM  கூட்டத்தில்  உள்ள  இதே  பிரச்சினை  குறித்து  இறுதி முடிவு எடுக்க விரைவில்  ஊழியர் தரப்புடன்  பேசி முடிவு எடுக்க  தனியே ஒரு கூட்டம்  கூட்டப் படும்.  இதில்  ONE  TIME  MEASURE  ஆக DATE OF  APPOINTMENT  ஐ வைத்து SENIORITY  நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்கிட  ஊழியர் தரப்பில்  வலியுறுத்தப்படும்.
2. தமிழகத்தில் PTC  DIRECTOR  இன்  தவறான உத்திரவால் INDUCTION  TRAINING  இல் 60% மதிப்பெண் பெறவில்லை என்று காரணம் கூறி  பதவி இறக்கம் செய்யப்பட்ட  அனைத்து SORTING  ASSISTANT  தோழர்களும்,  இந்த   உத்திரவு ரத்து  செய்யப்பட்டு உடன் அவர்களது SORTING  ASSISTANT  பதவியில்  பணியமர்த்தப் படுவார்கள்.

நமது அகில இந்திய சங்கத்திற்கும்  குறிப்பாக  தோழர் KVS  அவர் களுக்கும் தமிழக அஞ்சல் மூன்று  , தமிழக RMS  மூன்று  சங்கங் களின் சார்பாக நம்  நெஞ்சார்ந்த நன்றி   இது  தமிழக மாநிலச் சங்கங்களின்  ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி .  முன்புபோல அல்லாமல் , தமிழக அஞ்சல் மூன்று அங்கீகாரம் பெற்ற பிறகு , தமிழகத்தின்  அனைத்து NFPE  மாநிலச் சங்கங்களும்  ஒரே அணியாக, NFPE  என்ற ஒரே சக்தியாக செயல் படுவதால் கிடைத்த வெற்றியாகும்

இன்று நடைபெற்ற JCA  போராட்டம் குறித்த  விரிவான செய்திகள்
பின்னர்  வெளியிடப்படும்

தோழமையுடன்
JR ,  மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .

Friday, 28 December 2012

28/12/2012 வெள்ளி கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


 NFPE

அனைத்திந்தியஅஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும்  புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம்  மேற்கு  கோட்டம்,             சேலம் – 636 005

      


            

சுற்றறிக்கை    27 (உறுப்பினர்களுக்கு மட்டும் )தேதி : 27.12.2012

        

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! அன்பார்ந்த வணக்கங்கள் ! 

NFPE -FNPO சம்மேளனங்கள் கூட்டுப் போராட்டக் குழு  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து  28/12/2012 வெள்ளி கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு  சேலம் மேற்கு கோட்டத்தின் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு நமது மத்திய சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளதால்  சுற்றறிக்கைகள் சேலம் மேற்கு கோட்டத்தின்  கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்க்க  வேண்டாம் எனவும்  இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை பார்த்த தோழர்கள் /தோழியர்கள் அனைத்து  உறுப்பினர்களுக்கும் இத்தகவலை  தெரிவிக்க   அன்புடன் வேண்டுகிறோம்.


SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதன் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.

இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-

PAs- 5010,                                      POSTMAN- 3230                               Gr D / MTS- 4407,
SBCO PAs- 385                            RMS SAs- 1259


எனவே அனைத்து பெருவாரியான  நமது P3/P4/GDS(NFPE) கோட்ட தோழர்கள்/தோழியர்கள்   ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
.     
 
   வாழ்க NFPE !                                                                                                                                                            வளர்க NFPE !
                                                                  என்றும்உங்கள் சேவையில் 
                                                                                  தோழமையுடன்,
K. பரமசிவம் தலைவர்  P3   C.சஞ்சீவி செயலர் P3  P. இளங்கோவன்நிதிச்செயலர்P3                                      
 R.வரதராஜன் தலைவர் P4   R..பிரகாஷ் செயலர் P4     S.ரத்தினம் நிதிச்செயலர்  P4
  K. கண்ணபிரான் கௌரவ தலைவர் GDS(NFPE)C.ஆறுமுகம் செயல் தலைவர் GDS(NFPE)                                    
 R.சரவணன்  தலைவர் GDS(NFPE)  S.சண்முகம் செயலர் GDS(NFPE)       C.முருகன் நிதிச்செயலர் GDS(NFPE)