Thursday, 13 December 2012

சரித்திரம் படைக்கும் சேலம் மேற்கு கோட்டம்




             நன்றி ! நன்றி !! நன்றி !!!
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! அன்பார்ந்த வணக்கங்கள் ! 

     நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முடிவின்படி NFPE சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க 12.12.12 அன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை உணர்த்திக்காட்டிய அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் நமது கோட்டத்தின் P3,P4,GDS (NFPE) சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

             தொடரும் நமது கோட்ட சங்க      வெற்றி வரலாறு

போராட்டம் அறிவித்தால் முழு அளவில் ஈடுபாடு காட்டுகின்ற அதில் வெற்றி ஈட்டுகின்ற கோட்டமாக நமது சேலம் மேற்கு கோட்டம் இருக்கும். அதனடிப்படியில் கடுமையான தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு அடைந்திருந்தும்  12.12.12 வேலை நிறுத்தத்தில் நமது கோட்டத்தில் உள்ள  
கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக அணைத்து தோழர் தோழியர்கள் முழுமையாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்தது நெகிழ வைத்த நிகழ்ச்சி .
மேலும் நமது கோட்டத்தில் உள்ள   ஒரே ஒரு  தலைமை அஞ்சலகம் சூரமங்கலத்தில் அணைத்து தோழர் தோழியர்கள் முழுமையாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்தது வீர வரலாற்றை காட்டும் நிகழ்ச்சி.  . 
அதற்க்கு மேலும் நமது கோட்டத்தில் உள்ள அணைத்து 46 துணை அஞ்சலகங்களும் மூடப்பட்டது  நமது கோட்டம் மாபெரும் சங்க ஒற்றுமை உள்ள கோட்டம் என அணைத்து தலைமையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆக நமது சேலம் மேற்கு கோட்டத்தில் 99 சதம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அன்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது கோட்ட சங்கத்தின் கோடான கோடி நன்றிகள்
“சங்கம்” எனும் சங்கு ஊதி
“ஒற்றுமை”யை வில்லாக்கி
“கொள்கை”களை நாணேற்றி
“வெற்றிக்கனியை” எட்டிப் பறிப்போம் !

 
   வாழ்க NFPE !                                   வளர்க NFPE !
                                   என்றும்உங்கள் சேவையில் 
         தோழமையுடன்
அஞ்சல் மூன்று.அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE)
              சேலம் மேற்கு கோட்டம்