Friday, 28 December 2012

28/12/2012 வெள்ளி கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


 NFPE

அனைத்திந்தியஅஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும்  புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம்  மேற்கு  கோட்டம்,             சேலம் – 636 005

      


            

சுற்றறிக்கை    27 (உறுப்பினர்களுக்கு மட்டும் )தேதி : 27.12.2012

        

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! அன்பார்ந்த வணக்கங்கள் ! 

NFPE -FNPO சம்மேளனங்கள் கூட்டுப் போராட்டக் குழு  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து  28/12/2012 வெள்ளி கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு  சேலம் மேற்கு கோட்டத்தின் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு நமது மத்திய சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளதால்  சுற்றறிக்கைகள் சேலம் மேற்கு கோட்டத்தின்  கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்க்க  வேண்டாம் எனவும்  இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை பார்த்த தோழர்கள் /தோழியர்கள் அனைத்து  உறுப்பினர்களுக்கும் இத்தகவலை  தெரிவிக்க   அன்புடன் வேண்டுகிறோம்.


SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதன் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.

இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-

PAs- 5010,                                      POSTMAN- 3230                               Gr D / MTS- 4407,
SBCO PAs- 385                            RMS SAs- 1259


எனவே அனைத்து பெருவாரியான  நமது P3/P4/GDS(NFPE) கோட்ட தோழர்கள்/தோழியர்கள்   ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
.     
 
   வாழ்க NFPE !                                                                                                                                                            வளர்க NFPE !
                                                                  என்றும்உங்கள் சேவையில் 
                                                                                  தோழமையுடன்,
K. பரமசிவம் தலைவர்  P3   C.சஞ்சீவி செயலர் P3  P. இளங்கோவன்நிதிச்செயலர்P3                                      
 R.வரதராஜன் தலைவர் P4   R..பிரகாஷ் செயலர் P4     S.ரத்தினம் நிதிச்செயலர்  P4
  K. கண்ணபிரான் கௌரவ தலைவர் GDS(NFPE)C.ஆறுமுகம் செயல் தலைவர் GDS(NFPE)                                    
 R.சரவணன்  தலைவர் GDS(NFPE)  S.சண்முகம் செயலர் GDS(NFPE)       C.முருகன் நிதிச்செயலர் GDS(NFPE)