Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 30 July 2013

TRADE UNION STUDY CAMP AT AMBATTUR BRANCH , A GRAND SUCCESS


அம்பத்தூர் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு  மற்றும் GDS  கிளைகளின் சார்பாக கடந்த 28.07.2013 அன்று திருவொற்றியூர் அஞ்சலகத்தில் நடத்தப் பட்ட தொழிற் சங்க பயிலரங்கு  மிகச் சிறப்பாக - கலந்து கொண்ட அனைவரின் பாராட்டினையும் பெற்றது.

காலை சுமார் 10.30 மணியளவில்  அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் C . மோகன் அவர்கள் தலைமையேற்க , அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் G . சுரேஷ் பாபு அவர்களின் வரவேற்புடன்  நிகழ்ச்சி இனிதே துவங்கியது . முதலில் ' NFPE  கிராமப் புற அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தோற்றமும் இன்றைய நிலையில் அவர்களின் நிலைமையும், நம் தொழிற் சங்கக் கடமையும்' என்ற தலைப்பில்  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர் R . தனராஜ்  அவர்கள்  வகுப்பினைத் துவக்கி வைத்து சிறப்பித்தார். 

அடுத்து ' அஞ்சல் தொழிற் சங்க வரலாறும், இன்றைய தொழிற்சங்க கடைமையும் ' என்கிற தலைப்பில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி அவர்கள் ,  நமது தொழிற் சங்கம் தோன்றிய வரலாறு, தலைவர்களின்  அளப்பரிய தியாகம்,  நாம் பெற்ற வெற்றிகள் , இன்றைய சூழலில்  அரசின் நிலைமை, இலாக்காவின் நிலைமை, இன்று நம் முன்னே உள்ள கடமை  குறித்து  சிறப்பானதொரு வகுப்பினை  அளித்தார். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ' இலாக்கா விதிகளும், நடத்தை விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் , CONTRIBUTORY  NEGLIGENCE ' உள்ளிட்ட விதிகள்  இவற்றில் , ஊழியர் பாதுகாப்பு சட்டங்கள்'   குறித்து  மிகத் தெளிவாக  நம்முடைய  அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் தோழர். KVS  அவர்கள் வகுப்பினை  எடுத்தார்கள் . 

இதன் பிறகு  சுமார் 01.00 மணி நேரம்  ஊழியர்களின் சந்தேகங்களுக்கு தோழர்  KVS  அவர்களும்  J .R . அவர்களும்  பதில் அளிக்க , கேள்வி- பதில் அரங்கம் களை  கட்டியது .   கலந்துகொண்ட ஊழியர்கள் ஒருவர் கூட  மாலை 06.00 மணிவரை  அரங்கினை விட்டு வெளியேற வில்லை என்பது  நிகழ்ச்சியின் மீது  அவர்கள்  கொண்ட ஈடுபாட்டினை  எடுத்துக் காட்டுவதாக அமைந்தது . 

சுமார் 160 ஊழியர்கள்  கையொப்பமிட சுமார் 180 ஊழியர்கள் கலந்து கொண்டது  நிகழ்ச்சியின்  சிறப்பை வெளிப்படுத்தியது . நிகழ்ச்சியில் தென் சென்னை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். ராஜேந்திரன் அவர்களும் திருவண்ணாமலை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் பிச்சாண்டி அவர்களும், அம்பத்தூர் கோட்டச் சங்க வழிகாட்டி தோழர். G .C . நரசிம்மலு உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள்  மற்றும்   இதர தோழர்களும் கலந்து கொண்டனர். 

பயிலரங்கு நிகழ்ச்சியினை  அஞ்சல் மூன்றின்  கிளைச் செயலர் தோழர்.
S . அசோகன் அவர்களும், அஞ்சல் நான்கின்  கோட்டச் செயலர் தோழர்.G . சுரேஷ் பாபு அவர்களும், AIPEU  GDS  NFPE  இன்  கோட்டச் செயலர் தோழர். 
S . விஜயகுமார் அவர்களும்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியதற்கு  நம்  மாநிலச் சங்கத்தின் மனம் திறந்த  பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! 

இதுபோன்ற  தொழிற் சங்க பயிற்சி வகுப்புகள்  இனி ஒவ்வொரு கோட்டத்திலும்  நடைபெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.! கோட்ட/கிளைச் செயலர்கள் அதற்கான முயற்சியில் ஈடு பட வேண்டுகிறோம்!

CONGRATS TO AMBATTUR BRANCH FOR ORGANIZING TRADE UNION STUDY CAMP

கடந்த ஜூன் திங்களில் நமது மாநில மாநாடு நடை பெற்ற பின்னர், முதன் முதலில்  அம்பத்தூர் கிளையில்  ஊழியர்களை விழிப்புணர்வு அடையச் செய்திட  ஒரு தொழிற் சங்க பயிலரங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது வரவேற்கத் தக்கது . இந்த முயற்சிக்கு அந்த கிளைச் சங்க நிர்வாகிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

 இது போல தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும்  ஊழியர்கள் பயிற்றுவிக்கப் பட்டால்  நிச்சயம் அது ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் .  நமது மாநிலச் சங்கத்தின் சார்பில்  மண்டல ரீதியிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் , தொழிற் சங்க பயிற்சி வகுப்பும்  முதலில் தென் மண்டலத்தில் ஏற்பாடு செய்யப் படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

SOUTHERN REGION TRADE UNION STUDY CAMP AND DIVL/BR.SECS MEETING AT MADURAI


அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

நமது குடந்தை மாநில மாநாட்டில் அறிவித்த படி, மாநிலச் சங்கம் பொறுப்பேற்றவுடன் இரண்டு மாதங்களுக்குள்  மண்டல ரீதியிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி , தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை  ஒருங்கிணைத்து, அந்தந்த மண்டல அதிகாரிகளிடமும், மாநில உயர் அதிகாரியிடமும்  MEMORANDUM அளித்து , ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வினை வேண்டியும் , அப்படி தீர்க்கப்படவில்லை எனில் மண்டல ரீதியில்  தொடர் போராட்டங்களை  நடத்திடுவதாகவும்  மாநிலச் சங்கம் முடிவெடுத்துள்ளது. 

அதன் படி , முதலில் மிக அதிகமாக பிரச்சினைகள் உள்ள தென் மண்டலத்தில் , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதன் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தினை கூட்டுவது என்று முடிவினை எடுத்தோம். அந்த கூட்டத்தினை ஏற்று நடத்துவது என்று மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கம்  மனம் உவந்து முன்வந்துள்ளது  என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் , புதிதாக  இலாக்காவில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு  தொழிற் சங்க வரலாறு மற்றும் இலாக்கா  நடத்தை விதிகள்,  ஊழியர் பாதுகாப்பு விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் , CONTRIBUTORY  NEGLIGENCE  குறித்த விதிகள்  , CCS  CCA  RULES 1965 உள்ளிட்ட விதிகளில் ஊழியர்களின் பாது காப்பு அம்சங்கள் குறித்து தென் மண்டல அளவில்  ஒரு  தொழிற் சங்க பயிற்சி வகுப்பு  நடத்திடவும் முடிவெடுத்தோம். அதனையும்  மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கமே எடுத்து நடத்திட  விழைந்துள்ளது  என்பது பாராட்டத் தக்கது. 

இந்த நிகழ்ச்சி  இளைஞர்களுக்கு மட்டுமல்ல , நம் சங்கத்தின் முன்னோடி களுக்கும் தான்.  அதிகாரிகளின்  விதி மீறிய,  தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இருந்து ஊழியர்களை பாது காக்க இந்த வகுப்பு  ஒரு கேடயமாக அமைந்திடும் என்பது திண்ணம். 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ம்  தேதி  விடுமுறை தினத்தன்று   இந்த தொழிற் சங்க பயிற்சி வகுப்பும்  ஆகஸ்ட் மாதம் 10 ம்  தேதி கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டமும்  நடைபெற முடிவெடுக்கப் பட்டுள்ளது.  

எனவே  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் இதனையே முன்னறிவிப்பாக எடுத்துக் கொண்டு  பயிற்சி வகுப்புக்கு  தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் இளைஞர்களையும்  சங்க முன்னோடிகளையும் கலந்து கொண்டிட  ஆவன செய்திட வேண்டுகிறோம்.  இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது என்று  வெளியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் முன் கூட்டியே கேட்டுக் கொள்கிறோம்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிற தோழிய/ தோழர்களுக்கு  குறைந்த பட்ச DELEGATE  கட்டணம் வசூலிக்கப் படும். அந்தப் பணத்தில்  காலை சிற்றுண்டி , 11 மணியளவில் தேநீர், மதிய உணவு, மாலை தேநீர், மற்றும்  வகுப்பு முடிந்தவுடன் ஊருக்கு செல்வதற்கு முன்னர் எளிய சிற்றுண்டி வழங்கப் படும். வகுப்புகளில் குறிப்பெடுக்க SCRIBBLING PAD , பேனா  உள்ளிட்டவை அளிக்கப் படும் . 

மறுநாள் நடைபெறும் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து  அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறுதல் இன்றிக் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் . அவர்கள்  வரும்போது , உடனடியாக முழு விபரத்துடன் MEMORANDAM  தயாரித்து  மண்டல / மாநில அதிகாரிகளுக்கு அளிக்கும் வகையில் அவர்களது  கோட்ட மட்டத்தில்  மாதாந்திரப் பேட்டியில்  எடுக்கப் பட்டும் தீர்க்கப்படாத ஊழியர்கள் பிரச்சினைகளையும், பொதுப் பிரச்சினை களையும்  விரிவாக  அவர்களது சங்க லெட்டர்  PAD  இல் TYPE  செய்து எடுத்து வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  

தயவு செய்து வாய்மொழியாக மட்டுமே  சொல்லிச் செல்லலாம் என்றுஎண்ண  வேண்டாம் என்றும் அன்புடன் வேண்டுகிறோம்.  அது முழுமையாக பிரச்சினைகளை மாநிலச் செயலருக்கு  அளிக்காது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். 

நிகழ்ச்சிகள் நடைபெறும்  இடம், நேரம் ,  எடுக்கப் படும் வகுப்புகள் , வகுப்புகளை எடுப்போர் குறித்த விபரங்கள் ஓரிரு நாட்களில்   சுற்றறிக்கையாக வெளியிடப்படும்.  இதனைப் பார்க்கும் தோழர்கள் , இந்த விபரத்தினை தயவு செய்து  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். 

குறிப்பு : 
தொழிற் சங்க பயிற்சி வகுப்புகளுக்கு  கண்டிப்பாக  தோழியர்களையும் அழைத்து வரவும் . இது ஒரு நல்ல வாய்ப்பு . நிச்சயம்  உபயோகப் படுத்திக்  கொள்ளவும். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
உங்கள் மாநிலச் செயலர் .

வாழ்த்துக்கள்





H.S.G. II பதவி உயர்வு பெற்று இன்று  திருப்பத்தூர் கோட்டம் பேர்ணாம்பட்டு துணை அஞ்சலக அதிகாரியாக HSG II ஆக பதவி ஏற்க செல்லும் நமது மூத்த தோழர் V.வாசுதேவன் ,உதவி அஞ்சல் அதிகாரி ,சூரமங்கலம் HO  அவர்களை  மேலும் பல பதவி உயர்வுகளை பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.

                                      அகில இந்திய அஞ்சல்ஊழியர்  சங்கம் 
                                   அஞ்சல் மூன்று ,சேலம் மேற்கு கோட்டம்
   


Monday, 29 July 2013

EXEMPTION FROM FILING ITR (INCOME TAX RETURN) NOT EXTENDED THIS ASSESSMENT YEAR 2013-14 – CBDT

      
INCOME TAX DEPARTMENT  இந்த வருடம் 2013-14 ஆண்டுக்காக  சம்பளம் பெறும் அணைத்து ஊழியர்களும் INCOME TAX RETURNS   FILE செய்ய வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு

  Income Tax Department issues press release to clarify that unlike previous year Salaried Employees with Total Income up to Rs.5 lakhs too have to file ITR (Income Tax Return) this year viz., Assessment year 2013-14.

       The full text of Press Release issued by CBDT (Cenral Board of Direct Tax) is as follows:
       The CBDT has, vide notification dated 1-05-2013, made E-filing of Return compulsory for Assessment Year 2013-14 for persons having total assessable income exceeding Five lakh rupees.

       The CBDT vide its earlier notifications had exempted salaried employees having total income up to Rs. 5 lakhs including income from other sources up to Rs. 10,000/- from the requirement of filing return of income for assessment year 2011-12 and 2012-13 respectively. The exemption was available only for the assessment year 2011-12 and 2012-13. The exemption was giving considering ‘paper filing of returns’ and their ‘processing through manual entry’ on system.

          However, this year the facility for online filing of returns has been made user-friendly with the advantage of pre-filled return forms. These E-filed forms also get electronically processed at the central processing centre in a speedy manner. Hence, the exemption provided during the last two years is not being extended for assessment year 2013-14. Taxpayers are encouraged to file their returns electronically. E-filing is an easy, fast and secure method of filing of income tax return. Moreover, Digital signature is not mandatory for these taxpayers and they can transmit the data in the return electronically by downloading ITRs, or by online filing and thereafter submit the verification of the return in From ITR-V acknowledgement after signature to Central Processing Centre.
        The processing for E-filed returns is faster. From 25th July to 31st July 2013 (Except 27th and 28th July being holidays), Special Return Receipt Counters are opened in IT Offices  (FOR SALARIED TAX PAYERS) 

MESSAGE OF THE DAY,


நமது இந்த மாத Monthly Meeting Subjects...



25.07.2013  அன்று நடைபெறுவதாக இருந்த MONTHLY MEETING மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP “C”
SALEM WEST  DIVISONAL BRANCH
                                                                    SALEM 636005

No.P3/SLW/45  dated at Mettur Dam 636 402   the 23.07.2013
To
The Supdt., of Post Offices,
Salem West Division,
Salem 636005
                              Sub:-Union monthly meeting-Submission of subjects-reg
                              Ref:-D.O. letter No.Union/AIPEU/P3/Dlgs dated the 09.07.2013
                                                             ---000---
                             The following officials will attend the monthly meeting to be held on 25.07.2013.  The subjects to be discussed are furnished  below.
S/Shri.
1.C.Sanjeevi, SPM,Mettur Dam R.S. 636402                         :    Secretary
2.A.Palanisamy,A/Cs APM,Suramangalam                  .      :   Auditor
3.G.R.Madheswaran SPM,Karuppur              .                      :   Vice President

                                                      Thanking You,Sir.

                                                                                                                                       Yours faithfully,
                                                                                                                                 
                                                                                                                                      /   C.SANJEEVI/
                                                                                                                                 Divisional Secretary




Pending Subjects
88/2012          Shifting of Gonur SO building to better building to road point.
102/2012        Filling up of vacant LSG posts at Suramangalam HO.
105/2012         Passing of  pending Medical bills 
127/2012         Repairs to generators of Omalur S.O.
03/2013           Repairs in the toilets in first floor of Suramangalam HO both Gents & ladies
                           Toilets
04/2013           Grant  of pending Child Education  Allowance 
05/2013           Shifting of Jalakantapuram S.O. building to alternate building
06/2013           Replacement of faulty  printers in the office Mettur Dam, Kolathur ,
                         Raman Nagar, Rasipuram ,Tharamangalam S.Os and Suramangalam HO.
07/2013           Upgradation of ram  in all the  computers in our division
08/2013           Supply of Chair to Omalur Cutcherry
09/2013           Supply of Computer Table to Rasipuram Bazaar S.O.
11/2013           Providing lock facilities in all counters in Rasipuram S.O. and repairs in        
                          Supervisor  Table..    
15/2013           Repairs to generators of Mettur Dam  S.O.
18/2013           Discontinuance of irregular procedure ordered by Postmaster,Suramangalam HO                          
                         for issuance of Cheques towards payment of maturity value of all savings schemes
                      

New Subjects

19/2013            Alternate arrangement for conveyance of evening mails from Kolathur to Mettur
                          Dam & and Kolathur to Salem  TMO since the present Private MMS discontinued
                         theEvening trip to Kolathur.
20/2013            Approval of revised MDW of all branches of  Suramangalam HO
21/2013            Posting of one senior PA to Omalur LSG S.O. to look after the work of Supervisor  during the off hours of the SPM since the counter Working hours begins 0930 

hours.
                                                  
22/2013             Grant of   Incentive to the official those who have passed Hindi Exams.

Details/Pattern of Postal/Sorting Assistant (PA/SA) Phase-II Exam 2013 (Computer/Typing Test)


Now as Postal Department started publishing the List of Shortlisted Candidates for Paper-II based on the performance in Paper-I(Aptitude Test), its time now to understand the details of Paper-II (Computer Typing/Data Entry Test) & Practice it.

Results of Andhra Pradesh, Gujarat, Karnataka, Maharashtra, Tamil Nadu, Assam, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, North East, Odisha, West Bengal and Kerala Postal Circles already stands published in the official website.

Results of Delhi, Jammu & Kashmir, Punjab, Uttar Pradesh, Uttrakhand, Bihar, Haryana, Himanchal Pradesh and Rajasthan Circles are expected soon.

Here is the list of number of candidates shortlisted from each Circle based on the results declared so far.

Name of Circle
No. of Shortlisted Candidates for Paper-II
Andhra Pradesh
2115
Gujarat
983
Karnataka
612
Maharashtra
1947
Tamil Nadu
1783
Assam
2114
Chhattisgarh
330
Jharkhand
640
Madhya Pradesh
1097
North East
153
Odisha
749
West Bengal
2023
Kerala
1000

Pattern of Paper-II (Computer / Typing Test):
The Typing Test shall be for a duration of 30 minutes (15 minutes each for Typewriting and data entry) consisting of one passage of 450 words in English or 375 words in Hindi to be typed with a minimum speed of 30/25 words per minute respectively & Data entry of some figures and letters each carrying equal marks on Computers.

The typing test and test of data entry operations will be conducted on Computer key board but not on type writer.

Note: The final merit shall be prepared on the basis of the aggregate marks obtained by the Applicants in the Aptitude Test (Paper I) only subject to their qualifying in Computer/Typing test ( Paper II). ie, there will be no marks for Typing/Data entry test. You have to just qualify the minimum criteria in Paper-2 and final merit list shall be prepared on the basis of marks of Paper-I only.

WHAT'S THE ASSESSMENT OF OUR RULERS ? SHALL WE KNOW ?


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! ஏழாவது ஊதியக் குழு உடன் அமைத்திட வேண்டும் , 50% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும் என்று கோரி  நாம் போராடி வரக்கூடிய நேரத்தில் , நம்மை ஆளக்கூடிய அரசாங்கம் , அதன் அங்கமாக இருக்கக் கூடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  எந்த நிலையில் சிந்திக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கடமை  ஒரு அரசு ஊழியர் என்கிற முறையில் நமக்கு இருக்கிறது .  இது குறித்து பத்திரிகைகளில் வந்த சில செய்திகளை  உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம் ...  படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்குத் தெரிவிக்கவும் ..

குறிப்பு :  வறுமைக் கோடு என்ற அரசாங்கத்தின் அளவீட்டை வைத்து  மானிய விலைகளில் பொருள்கள்  நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப் படுகின்றன . இது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இனி வழங்கப் படும் . அதாவது  கெரசின், அரிசி, கோதுமை,சர்க்கரை, பாமாயில் , சமையல் எரிவாயு  போன்றவை ஆகும் .

வறுமைக் கோடு என்பது தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது . அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.27.20 க்கு மேல் கிராமப் புறத்திலும் , நாள் ஒன்றுக்கு ரூ. 33.33 க்கு மேல்  நகரப் புறத்திலும் வருமானம் உள்ளவர்கள் இனி வறுமைக் கோட்டுக்கு கீழ் வர மாட்டார்கள். அதாவது  இனி தினப்படி பிச்சை எடுப்பவர்கள் கூட வறுமைக் கோட்டுக்கு மேல் தான் வருவார்கள் . அப்படியானால்  அரசு ஊழியர்களின்  ஊதிய நிலையின்  படி மத்திய அரசின் பார்வையில்   நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்  என்பதை  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் ! வாழ்க  வளமுடன் !

ஒரு ரூபாயில் ஒரு வேளை முழு உணவு சாப்பிடலாம்......மத்திய அமைச்சர் திரு பாரூக் அப்துல்லா .

ஐந்து ரூபாயில் திருப்தியாக ஒரு வேளை உணவு சாப்பிடலாம் .. ரஷீத் மசூத், காங்கிரஸ்  M.P.

பனிரண்டு ரூபாயில் ஒரு வேளைஉணவு தாராளமாக சாப்பிடலாம் .. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  ராஜ் பாப்பர் . 
******************
பார்க்க பத்திரிக்கை செய்தி :-
TIMES OF INDIA --- 26 th July 2013
New Delhi: After Raj Babbar and Rasheed Masood, now union Minister for New and Renewable Energy Farooq Abdullah Friday has said that one can have full meal for Re.1.

"One can eat for Re.1, if desired. It depends on the common man how much they can afford and they have to manage in that only," Abdullah told reporters on the ongoing debate on poverty.

Congress leader Rasheed Masood on Thursday claimed that "one can eat well" for Rs.5 in the national capital, a day after Congress spokesperson Raj Babbar said that one can have a full meal for Rs.12 in Mumbai.

"You can eat well for Rs.5 in the Jama Masjid area of Delhi," Masood, a Rajya Sabha member from the Congress, told reporters here.

The comment has opened floodgates of criticism with the Bharatiya Janata Party (BJP) saying the government is just trying to perpetuate poverty.

The Planning Commission Tuesday said poverty ratio in the country had declined to 21.9 percent in 2011-12 from 37.2 percent in 2004-05 on account of increase in per capita consumption.

The commission estimated the 2011-12 national poverty line at Rs.816 per capita per month for rural areas and Rs.1,000 per capita per month for urban areas.

This would mean that the people whose daily consumption of goods and services exceed Rs.27.20 in villages and Rs.33.33 in cities are not poor.
************************************
இது தொடர்பாக இந்து நாளிதழில்  விவாதத்தில் வந்த முந்தைய செய்தியையும் உங்களுக்கு நினைவூட்டு கிறோம்.

Even as a controversy rages over the Rs. 32 per capita per day poverty line, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia has said “it is not all that ridiculous” in Indian conditions.

“The fact is that Rs. 4,824 per month for a family [of five] to define poverty is not comfortable but it is not all that ridiculous in Indian conditions,” Mr. Ahluwalia said in a letter to Attorney-General Goolam Vahanvati.

இறுதிச் செய்தி : இதற்காக சம்பந்தப் பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள் (மாண்டேக் சிங்  அலுவாலியா அல்ல )

TREATMENT ON EMERGENCY CAN BE MADE IN NON EMPHANELLED PRIVATE HOSPITAL


C. G. Employees and their dependents can avail treatment in a non empanelled Private hospitals in emergency conditions and get reimbursement

(G.I MH OM No. F. No. S. 14025/14/2012-MS, dated 11.06.2013)

Revision of rates for reimbursement of medical expenses incurred in emergency conditions under CS (MA) Rules, 1944

The undersigned is directed to state that the issue of revision of rates for reimbursement of medical expenses incurred on availing medical treatment in emergency conditions under CS (MA) Rules, 1944, when treatment is taken in a non-empanelled private hospital, has been under consideration of the Government for some time.

2. It has now been decided that, reimbursement of medical expenses incurred by a Central Government employee covered under CS(MA) Rules, 1944 on availing medical treatment for himself and his dependent family members in emergency conditions, would be allowed as per the prevailing non –NABH CGHS rates as applicable to a CGHS covered city and non-NABH rates applicable to the nearest CGHS covered city in case of non-CGHS city, as the case may be, or the actuals, whichever is less.

3. For the medical treatment in such cases where package rates are prescribed under CGHS, the non-NABH rates of the CGHS covered city and non-NABH rates of the nearest CGHS city (in case of non-CGHS covered city) or the actuals, whichever is less, will be applicable.

4. This OM supersedes all earlier orders issued from time to time under CS (MA) Rules, 1944 on this subject for allowing reimbursement of medical expenses in emergency conditions when treatment is taken in a non-empanelled private hospital.

5. This OM will come into effect from the date of issue.

6. This issue with the concurrence of the Integrated Finance Division vide their Dy. No. C-282, dated 22.05.2013.

PROBATION PERIOD OF PA/SA


Directorate vide memo No. 60-3/2013-SPB-I dated 8/7/2013 has clarified that ás per revised Recruitment Rules for the post of Postal Assistant / Sorting Assitant notified on 3rd November 2011, the period of probation is the same i.e. two years but the provision of Examination for confirmation has been discontinued and clearance of probation period is to be decided by the Departmental Promotion Committee (DPC). It is also clarified that who have not yet cleared the confirmation test may not be subjected to confirmation examination but may be assessed for clearing their probation after taking into consideration their performance during the induction training, the special report /ACRs and any other relevant input. If they are not found up to the mark, their probation period may be extended as per the Government's instructins. In such cases, PAs/SAs shall be considered for clearance of probation period from a prospective date and not with retrospective effect.



                                                                                                           

INSPECTORS POSTS EXAM 2013 - VACANCY POSITION OF TN CIRCLE


Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai videMemo. No. REP/9-2/13 dated 25.07.2013 has declared the following vacancies for Inspector Posts Examination 2013 to be held on 07.09.2013and 08.09.2013:
 

OC
SC
ST
Total
12
11
Nil
23



                                                                           C.SANJEEVI,
                                                                           DIVISIONAL SECRETARY

REPLY BY PMG CCR TO OUR CIRCLE UNION ON MINUS BALANCE RECOVERY CASES

சென்னை மத்திய கோட்டத்தின் MINUS BALANCE  RECOVERY பிரச்சினையில்  நமது மாநிலச் சங்கத்தின் மூலம் இலாக்கா சட்ட விதிகளை சுட்டிக் காட்டி சகட்டு மேனிக்கு  ஊதியப் பிடித்தம் செய்வதை எதிர்த்து  PMG, CCR அவர்களிடம்  கடந்த 19.04.2013 அன்று கடிதம் அளித்து பேசியிருந்தோம் . அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் , ஊழியர்களுக்கு  போதிய வாய்ப்பு அளித்திடாமல் எந்தவொரு ஊதியப் பிடித்தமும் செய்யப் பட மாட்டாது என்றும்  PMG, CCR  அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள் .

அதன் அடிப்படையில்  தற்போது எந்த விதங்களில்  சட்டங்கள் பின் பற்றப் படும் என்பதை தனது பதிலாக நமக்கு  அளித்துள்ளார்கள் . அதன் நகலை கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம். இது நமக்கு முழு திருப்தி இல்லையெனினும் ,  தற்போது  உயர் அதிகாரியே  இந்த விதங்களில்  சட்டங்கள் பின் பற்றப் படும் என்பதனை எழுத்து  மூலம்  உறுதி செய்துள்ளது  நமது சங்க நடவடிக்கை களுக்கு கிடைத்த வெற்றியே !

உங்கள் கோட்டத்தில் இந்த விதிகள் பின்பற்றப் பட வில்லையாயின்  உடன் மாநிலச் சங்கத்தின் பார்வைக்கு  இதனை கொண்டு வரவும் . பாதிக்கப் பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப் படும் SHOW CAUSE NOTICE க்கு பதிலும்  நமது மாநிலச் சங்கம் அளித்த  மாதிரி  பதில் படிவம் பார்த்து , அதன் படி அந்தந்த கோட்டங்களில் உள்ள  பிரச்சினைகளுக்கு தகுந்த வண்ணம் பதில் அளிக்கவும்
பார்க்க PMG, CCR  அவர்களது பதில் :-

Thursday, 25 July 2013

Useful Web Sites for Improve your Typing Speed - PA/SA Exam 2013


Direct Recruitment PA/SA Examination - LATEST UPDATE ( as on 23-JUL-2013)

UPDATE as on 23-JUL-2013

I . The List of shortlisted candidates for the Computer Typing / Data Entry (PAPER II) for Kerala Postal Circles is added in the given link below.

II . PAPER II for Andhra Pradesh, Gujrat, Karnataka, Maharashtra, Tamil Nadu, and Kerala Postal Circles is scheduled on 10th and 11th August 2013.The Admit cards for the same have been dispatched. If not received by 31 July 2013 then it can be downloaded from this website from August 01, 2013



Source : http://www.eonlineapply.com/dop/