Tuesday, 17 February 2015

கோவை மேற்கு மண்டலமெங்கும் உணர்ச்சி பூர்வமான போராட்டம்



சேலம் மேற்கு கோட்டம்

NFPE P3 கோட்ட தலைவர் தோழர்.K. பரமசிவம்  
NFPE P4 கோட்ட உ.தலைவர் தோழர்.R.சரவணன்
NFPE (GDS) கோட்ட செயலர்  தோழர்.A.அய்யந்துரை
AIGDSU  கோட்ட நிதி செயலர்  தோழர்.S.ஹரிராமன்      
கூட்டு தலைமையில்
NFPE P3 Divisional Secretary(I/C)Com.M.Sivakumar,
NFPE P4 Divisional SecretaryCom.R.Prakash,
AIGDSU Divisional SecretaryCom.K.Vijaya 
அவர்கள் 
ஆவேசமாக கோசங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.

 நமது மாநில உதவி செயலரும் கோவை மண்டலச்செயலருமான  தோழர் . சி.சஞ்சீவி  
அவர்கள்   எழுச்சி உரையுடன்  ...
சுமார் 20க்கும் மேற்பட்ட தோழியர்களுடன் 150க்கும் மேற்பட்ட தோழர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சூரமங்கலம் ஆர்ப்பாட்ட  நிழற் படங்கள் 





























திருப்பத்தூர் கோட்டம்
திருப்பத்தூர் கோட்டத்தில் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகம் முன்பும் ,குடியாத்தம் தலைமை அஞ்சலகம் முன்பும் முறையே கோட்ட செயலர் தோழர் சுப்பிரமணியம் கிளை செயலர் தோழர் நெடுசெழியன்  தலைமைகளில் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் தலைமை அஞ்சலகம் முன்பு சுமார் 110 தோழர்/தோழியர்களும் , குடியாத்தம் தலைமை அஞ்சலகம் முன்பு சுமார் 70 தோழர்/தோழியர்களும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி கோட்டம்
கிருஷ்ணகிரி கோட்டத்தில் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம் முன்பு
கிருஷ்ணகிரி கோட்ட செயலர்  தோழர் .செல்வம் அவர்கள் தலைமையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.  சுமார் 60  தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி கோட்டம்
தர்மபுரி கோட்டத்தில் தர்மபுரி தலைமை அஞ்சலகம் முன்பு மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலர் இளைய தலைமுறை தோழர் பழனிமுத்து அவர்களுடன் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆவேசமான எதிர்ப்பை தெரிவித்தனர்,  சமீபத்தில் புட்டிரெட்டி பட்டி என்ற CBS S.O.  வில் ஒரே நாளில் 400 கணக்குகளை அதன் BO  வில் தொடங்கி SO  விலும் கணக்கில் கொண்டு வரச் சொல்லி உட்கோட்ட ஆய்வாளரால் வற்புறுத்தப்பட்டது.  ஆனால் மேற்கு மண்டல PMG  அவர்கள் கடிதப்படி CBS அலுவலகத்தில் ஒரு கணக்கு தொடங்க ஆகும் நேரம் 7 நிமிடம் என சொல்லப்பட்டது. அதன் படி பார்த்தால் 400 கணக்குகளுக்கு 2800 நிமிடம் .அதாவது சுமார் 46 மணி நேரம். இது எப்படி சாத்தியம். அதிகப்படியான ரூ.10/- DEN கணக்குகள் தொடங்கப்பட்டதும் இந்த கோட்டத்தில் தான்.







சேலம் கிழக்கு கோட்டம்
சேலம் கிழக்கு கோட்டத்தில் சேலம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற சிறப்பு மிகு ஆர்ப்பாட்டத்தில்  தோழர் ரவீந்திரன் அவர்கள் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் கோட்டம்
நாமக்கல் கோட்டத்தில் நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில்  அதன் செயலர் தோழர் சண்முகம் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டு ஆவேசமாக கோசங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.


திருச்செங்கோடு கிளை
திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலர் தோழர் சுப்ரமணியம் அவர்கள் சுமார் 100க்கு மேற்ப்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டனர்.



ஈரோடு கோட்டம்
ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலர் தோழர் சாமிநாதன்,பாவனை கிளை செயலர் தோழர் எழில்வாணன்  ,கோபி கிளை செயலர் தோழர் கார்த்திகேயன் தலைமையில் ஈரோடு,பவானி,கோபி கிளைகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்ப்பட்ட தோழியர்கள்  250க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட சிறப்பு மிகு ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகளின் அத்து மீறல்களை சுட்டிக்காட்டி கோசங்கள் எழுப்பப்பட்டது. சமீபத்தில் சுமார் 35 தோழர்கள் RPLI கூடத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால் சம்பளம் பிடிக்கப்பட்டு பின் மாநில/மண்டல நிர்வாகிகள் எடுத்த முயற்சியால் மீண்டும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் கோட்டம்

திருப்பூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற வீரமிகு ஆர்ப்பாட்டத்தில் மூத்த தோழரும் தலைமை அஞ்சல் அதிகாரியுமான அன்பு தோழர். P.K.R. தலைமையில் சுமார் 80 க்கும் மேற்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டு வீரமான ஆவேச கோசங்களை எழுப்பி தங்கள் எதிப்பை பதிவு செய்தனர்.



பொள்ளாச்சி கோட்டம்/உடுமலைபேட்டை  கிளை
பொள்ளாச்சி தலைமை அஞ்சலகம் முன்பும் , உடுமலைபேட்டை தலைமை அஞ்சலகம் முன்பும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இடங்களிலும் முறையே சுமார் 60க்கும் மேற்ப்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து கொண்டனர். CBS அலுவலகங்களுக்கு LASER PRINTER கொடுக்கப்படவேண்டும்  என்ற நிலை இருந்தும் சுமார் 7CBS அலுவலங்கங்களுக்கு இதுவரை கொடுக்கபடாமல் உள்ள கோட்டம் இது.  ஆள்பற்றாக்குறை அதிகம் உள்ள கோட்டமும் இது தான்.
நீலகிரி கோட்டம்
சற்று வித்தியாசமாக  மலை கோட்டமான ஊட்டி தலைமை அஞ்சலகம், கோத்தகிரி துணை அஞ்சலகம்,கூடலூர் துணை அஞ்சலகம்,குன்னூர் தலைமை அஞ்சலகம் என நான்கு இடங்களில் தனித்தனியாக முறையே 50,30,30,40 என்ற எண்ணிக்கையில் கலந்து கொண்டு போராட குரல் எழுப்பியது சிறப்பான செய்தியாகும் .
கோவை கோட்டம்

மண்டல அலுவலகம் அமைந்த R.S.புறம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு மாநில நிர்வாகத்தின் போக்கையும், அதிகாரிகளின் நடவடிக்கையை பற்றியும் கோட்ட செயலரும், மாநிலஉதவி தலைவருமான  தோழர் எபிநேசர் காந்தி அவர்கள் வீர உரை ஆற்ற ஆர்ப்பாட்டம் மிகச்சிறப்பாக நடை பெற்றது.

அன்பு தோழர்களே/தோழியர்களே 24.02.2015 கோவை மண்டல

 அலுவலகம் முன் நடைபெறும் இரண்டாம் கட்ட போராட்டத்தில்

 மிக அதிகப்படியாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் 

அழைக்கிறோம்,

--------சி.சஞ்சீவி,மண்டல செயலர்-------