Tuesday, 12 September 2017

GDS PAY COMMITTEE IMPLEMENTATION தற்போதைய நிலவரம்

முக்கிய செய்தி:-
GDS PAY COMMITTEE IMPLEMENTATION தற்போதைய நிலவரம்

NFPE சம்மேளன மாபொதுச்செயலாளர்
தோழர் R.N. பராசார் இன்று மதியம் அஞ்சல்துறை உயரதிகாரிகளை சந்தித்து GDS COMMITTEE IMPLEMENTATION குறித்து பேசியுள்ளார். அவரிடம் நமது துறை உயரதிகாரிகள்
"நிதி அமைச்சகம் எழுப்பிய அனைத்து Queries(வினாக்கள்,
சந்தேகங்கள்) களுக்கும் அஞ்சல் துறையின் சார்பில் பதில்கள் அனுப்பபட்டுவிட்டன. நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நிதியமைச்சக ஒப்புதல் பெற்று கோப்பு அஞ்சல்துறை தலைமையகத்திற்கு வந்து விடும். கோப்பு(FILE) அஞ்சல்துறையால் பெறப்பட்டவுடன் அமலாக்கத்திற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் அஞ்சல்துறைக்கு கோப்பு (FILE)வந்தவுடன் எவ்வித தாமதமும் இன்றி விரைவில் அமலாக்கம் செய்வதற்கு பணிகள்  நடைபெறும் " என தெரிவித்துள்ளனர்.