வருந்துகிறோம் !
"""""""""""""""""""""""'"''"'"""'
நமது NFPE நிர்வாகப் பிரிவு அலுவலர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலரும், கணக்கு அதிகாரியாக
(A.O.) புதுடெல்லி அஞ்சல்துறை இயக்குனரகத்தில் பணியாற்றி டிசம்பர் 2016 ல் ஓய்வு பெற்றவரும், அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் சொந்த ஊரைச் சேர்ந்தவரும், அவரது நீண்டகால நெருங்கிய நண்பருமான
தோழர்.
G. கீர்த்திவாசன் அவர்கள்
இன்று மாலையில் சென்னையில் அவரது மகள் இல்லத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடன் மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை அருகில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் உள்ள P. திருமாளம் கிராமத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
அவரது மறைவிற்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது ஆன்மா அமைதிபெற வேண்டுகிறோம்.
இவண்
NFPE அஞ்சல் மூன்று சங்கம் ,
Salem West Division
Wednesday, September 13, 2017
V.C.Premlatha