Wednesday, 11 October 2017

தீபாவளி முதல் நாள் CSI MIGRATION ரத்து

நம் மாநிலச் சங்கத்தின் இடைவிடா முயற்சிக்குக்   கிடைத்த வெற்றி !

தீபாவளி முதல் நாள்
CSI  MIGRATION ரத்து !
"""""""""""""""""""'""'"'""""""""""""""""""""
இன்று காலை நமது CPMG அவர்கள் சென்னை எழும்பூர்  Hotel Aoka வில் Circle Level Excellence விருது வழங்கும் விழாவில் இதர அதிகாரிகளுடன் கலந்து கொண்டிருப் பதால் அவரை CSI பிரச்னைகள் குறித்து மாலை தான் பார்க்க இயலும் என்று மாநில நிர்வாகத்தில் தெரிவித்ததால்,

CEPT Dy.  Director அவர்களிடம் தொடர்பு கொண்டு  17.10.3017 தீபாவளிக்கு முதல் நாள் Migration தள்ளி வைப்பது குறித்து நம் சங்கத்தின் கோரிக்கை மீது Dte. ல் என்ன முடிவெடுக்கப்பட்டது என வினவினோம்.

அதற்கு அவர்,
"உங்கள் கோரிக்கை குறித்து CPMG அவர்களின் பரிந்துரையுடன் DTE க்கு File அனுப்பப்பட்டு அதனடிப்படையில் DTE
இதனை தள்ளி வைக்க உத்திரவிட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனால் Vellore,
R.O., C.O., DAP  அலுவலகங்களது  Migration 17.10.17 லிருந்து 27.10.17 க்கு மாற்றப்பட்டுள்ள தாகவும் ,

ஏற்கனவே 24.10.17 ல் இருந்த கோட்டங்கள் 31.10.17 க்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் ,

இதற்கு அடுத்த நிலையில் குறியிடப்பட்ட கோட்டங்கள் நவம்பர் மாதம் 7 ந்தேதிக்கு மாற்றப்பட்டதாகவும்
தெரிவித்தார்.

DTE  schedule படி ,
இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று MIGRATION இருக்கும் என்று தெரிவித்தார்.

இதர விஷயங்கள் குறித்து DTE மற்றும் CPMG அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கூறினார்.

அவருக்கும் CPMG அவர்களுக்கும் நம் நன்றியினைத் தெரிவித்தோம். 

நூற்றுக்கணக்கான தோழர்கள் தங்களது குடும்பத்துடன் தீபாவளி நிம்மதியாக கொண்டாட இதன் மூலம் வழி ஏற்பட்டது என்பது நமக்கும் மகிழ்ச்சியே.

நம் முயற்சி என்றும், எல்லா பிரச்னைகளிலும் தொடரும்.

தோழமையுடன்,

NFPE அஞ்சல்
மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.