Sunday, 30 July 2017

காரைக்குடி அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு

காரைக்குடி அஞ்சல் மூன்று
சங்கத்தின் கோட்ட மாநாடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (30.7.17) காலை 10.00 மணி தொடங்கி காரைக்குடி அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட மாநாடு காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் மணிமண்டப அரங்கில்  சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் , அஞ்சல் மூன்று மாநில நிதிச் செயலர் தோழர். A.வீரமணி, மத்திய மண்டலச் செயலர் தோழர். R. குமார், மாநில அமைப்புச் செயலர் தோழர். C. சசிகுமார், ஶ்ரீரங்கம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரை வழங்கினர்.

போட்டியின்றி நடைபெற்ற காரைக்குடி கோட்ட மாநாட்டில்

தலைவராக தோழர் ரமேஷ் அவர்களும்,

கோட்டச் செயலராக தோழர் குருசாமி அவர்களும்,

நிதிச்செயலராக தோழியர் சத்யப்பிரியா அவர்களும்

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்.