Wednesday, 19 July 2017

தோழர். ஞானையா நினைவஞ்சலி கூட்டம்

தோழர். ஞானையா நினைவஞ்சலி
"""""""""""""''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தபால் தந்தி ஒருங்கிணைந்த தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE)  முது பெரும் தலைவர் தோழர் D. ஞானையா அவர்கள் (97) மறைவினை  ஒட்டி (8.7.17) இன்று (19.7.17)   சென்னை எழும்பூர் SRMU நக்கீரன் அரங்கத்தில்   NFPE  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் COC யின் தலைவர். B. பரந்தாமன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அஞ்சல்  RMS தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர்.A.G. பசுபதி,  RMS பகுதியின்  மூத்த தலைவர். நாகை ஜெயராமன், அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர். தோழர். K. R. , அதன் மாநிலத் தலைவர் தோழர். தோழர். M.கண்ணையன், உழைக்கும் வர்க்கம் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர்  தோழர்.J. ரங்கநாதன், சம்மேளன உதவிப் பொதுச் செயலர். தோழர்.S.இரகுபதி, அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர். தோழர். J.இராமமூர்த்தி, அஞ்சல்  நான்கின் மாநிலப் பொருளர் தோழர். வெங்கடரமணி ,  RMS மூன்றின் அ.இ. உதவிப் பொதுச் செயலர். தோழர். K. சங்கரன், அஞ்சல் கணக்குப் பிரிவு மாநிலச் செயலர் தோழர்.R.B. சுரேஷ், கேசுவல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தோழர். D. சிவகுருநாதன்,  அஞ்சல் மூன்று அகில இந்திய உதவிப் பொதுச் செயலர். தோழர். வீரமணி, அதன்  முன்னாள் மாநிலச் செயலர் தோழர்.V. பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு  தோழர். ஞானையா அவர்களின்  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.