வெற்றிகரமாக நடைபெற்ற கோவை
கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (16.7.17) காலை 10.30 மணி தொடங்கி கோவை தலைமை அஞ்சலகத்தில் கோவை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு கோட்டச் சங்கத் உதவித் தலைவர் தோழர். காளியப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J.R., அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். N.சுப்ரமணியன், அஞ்சல் மூன்று சங்க மாநில நிதிச் செயலர் தோழர்.
A. வீரமணி , அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலச் செயலரும் மதுரை கோட்டச் செயலருமான தோழர். S. சுந்தரமூர்த்தி, சேலம் மேற்கு அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். K.S. பகழேந்தி,பொள்ளாச்சி அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். அய்யாசாமி, கோபி அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர்.S. கார்த்திகேயன், மேட்டுப் பாளையம் அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர். G. பாலாஜி, மேட்டுப் பாளையம் அஞ்சல் மூன்று முன்னாள் கிளைச் செயலர் தோழர். K. செல்வராஜ், அஞ்சல் நான்கு மண்டலச் செயலர் தோழர். H. ஶ்ரீதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் மிகச் சிறப்பான முறையில் ஜனநாயக பூர்வமாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியிட்டு சிறப்பான வெற்றியினைப் பெற்றனர்.
தலைவர் : தோழர். P. பாலன்
செயலர்: தோழர்.D. எபினேசர் காந்தி
பொருளாளர்: தோழர். கீதப்பிரியா
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு அஞ்சல்
மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
Sunday, July 16, 2017
V.C.Premlatha