விருதுநகர் கோட்டத்தில் இலாக்கா விதிகளை மீறி முறைகேடாக 16 பேருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்திரவு நிறுத்தம் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விருதுநகர் கோட்டத்தில் கடந்த வாரம் இலாக்கா விதிகளை மீறி - LSG இடங்கள் நிரப்பப் பட்டதால் அதில் பணியாற்றி வந்த எழுத்தர்களை - காலிப்பணியிடங்கள் அறிவிக்காமல், அவர்களது விருப்பம் பெறாமல் முறைகேடாக இடமாறுதல் செய்து அந்தக் கோட்டத்தின் முதுநிலைக் கண்காணிப்பாளர் உத்திரவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்கவும் முயற்சித்தார்.
இது குறித்து வி.நகர் கோட்டத்தின் மூத்த தோழர். சண்முகநாதன் அவர்களும் மதுரைக் கோட்டச் செயலர் தோழர். சுந்தரமூர்த்தி அவர்களும் மாநிலச் செயலரிடம் புகார் தெரிவித்து உடன் நடவடிக்கை கோரினர்.
மாநிலச் செயலர் திண்டுக்கல்லில் இருந்து ஞாயிறு இரவே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால், திங்களன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் PMG ஐ சந்திக்க அவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தருவதாகவும், PMG அவர்களிடமும் இது குறித்து தொலைபேசியில் பேசுவதாகவும் உத்திரவாதம் அளித்தார்.
இதனடிப்படையில் தோழர். S.S., தோழர். சண்முகநாதன் இருவரும் காலையில் மண்டல அலுவலகம் சென்றபோது PMG, DPS, AD Staff எவரும் மண்டல அலுவலகத்தில் இல்லாத சூழலில் உடன் மாநிலச் செயலரை அணுகினர்.
எனவே மாநிலச் செயலரும் உடனடியாக தூத்துக்குடி சென்றிருந்த PMG அவர்களை கைபேசியில் அழைத்து பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விளக்கி உடன் தலையிட வேண்டினார்.
அதற்கு PMG அவர்களும் உடன் இந்த உத்திரவின நிறுத்தி வைக்கச் சொல்வ தாகவும், Campல் உள்ள DPS அவர்களை திரும்பியவுடன் சந்திக்க அறிவுறுத்துவதாகவும் உறுதியளித்தார்.
இதன்படியே வி.நகர் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உடன் இடமாற்ற உத்திரவு அமலாக்கம் நிறுத்தப் பட்டது.
இதனிடையே Surprise Visit ஆக மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகம் சென்ற DPS அவர்களை தோழர். S.S. சந்தித்து இது குறித்து தெரிவிக்க , அவரும் இதில் உடன் தலையிடுவதாக உறுதியளித்தார். மேலும் மாநிலச் செயலரின் கோரிக்கையை ஏற்று , இந்தப்பிரச்னை குறித்து விவாதிக்க எதிர்வரும் புதன்கிழமை வருமாறு PMG/DPS இருவரும் பணித்துள்ளார்.
புதனன்று நிச்சயம் இந்த நிறுத்தப்பட்ட உத்திரவுகள் ரத்து செய்யப்படுவது உறுதி. மேலும் ஏற்கனவே PMG அவர்களால் உறுதியளிக்கப்பட்ட கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம் .
இந்தப்பிரச்னையில் உடன் தலையிட்ட PMG, SR மற்றும் DPS , SR ஆகியோருக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் !.
Tuesday, July 25, 2017
V.C.Premlatha