Thursday, 18 May 2017

எழுத்தர் பகுதியில் கேடர் சீரமைப்பு உத்திரவு அமலாக்கம் குறித்து அகில இந்திய நிலையும் மற்றும் தமிழக நிலையும்

எழுத்தர் பகுதியில் கேடர் சீரமைப்பு உத்திரவு அமலாக்கம் குறித்து அகில இந்திய நிலையும் மற்றும் தமிழக நிலையும்
""""""""""""""""''''''"''"""""''""""""""""""""""
தோழர்களுக்கு வணக்கம்.

இந்தப் பிரச்னை  குறித்து ஏற்கனவே பல செய்திகள் தெரிவித்திருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாக பல தோழர்கள் கேட்டதன் அடிப்படையில் தற்போதைய நிலை குறித்து மேலும் இந்தப் பதிவு.

DTE ஐ பொறுத்தவரை   ஏற்கனவே நமதுசம்மேளன மாபொதுச் செயலர் அளித்த கடிதத்தின் மீது விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 15.5.17 அன்று மீண்டும் ஒரு கடிதம் கொடுத்து துறையின் புதிய செயலரிடம் பேசியுள்ளார். ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை.

நம் மாநிலத்தைப் பொருத்தவரை,  கடந்த
15 5.2017 அன்று இது குறித்து பேசிட நம் CPMG அவர்களின் அவசர அழைப்பை ஏற்று மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் மற்றும் நிதிச் செயலர் இருவரும் பேச்சு வார்த்தையில்  கலந்து கொண்டோம். மாநிலத் தலைவர் அன்றைய தேதியில் வெளியூரில் இருந்த காரணத்தால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.

பேச்சு வார்த்தையில் நமது நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகள் குறித்த விஷயங்கள், தொடர்ந்து அளித்த கடிதம் ஆகியவற்றை ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ளோம்.

இலாக்காவிலிருந்து,  இலாக்கா(மேல்மட்ட)  அளவில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து எந்தவித உத்திரவும் கிடைக்காத நிலையில், ..........

தற்போது உள்ளபடியே இந்த உத்திரவை அமல்படுத்திட மாநிலச் சங்கத்தின் ஒத்துழைப்பை CPMG அவர்கள் கோரினார்.

அதற்கு நாங்கள், CPMG அவர்களின் அதிகார வரம்புக்குள் செய்யக்கூடிய விஷயங்களை செய்து கொடுக்குமாறும்,

இதில் உரிய பரிசீலனை இல்லாமல் அவசர கதியில் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம்.

அதற்கு CPMG அவர்கள் நிச்சயம் தன் வரையறையில் உள்ள அனைத்தும் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

குறிப்பாக, நம் கடித்தில் கொடுத்த பிரச்னைகளில்

1. பதவி உயர்வு ஏற்க இயலாத ஊழியர்களின், குறிப்பாக பெண் ஊழியர்களின்  கோரிக்கைகள்(Declination) கடந்த முறை போலல்லாமல் இந்த முறை நிச்சயம் ஏற்கப்படும் என்றும் ஒரே கோட்டத்திலோ,
அருகாமை இடங்களிலோ போடப்பட்டால் அவ்வாறு  Decline  செய்ய வேண்டாம் என்றும் CPMG அவர்கள் அறிவுறுத்தினார்.

2. ஏற்கனவே உத்திரவு இடப்பட்டு நிலுவையில் உள்ள விதி  38 இடமாறுதல்களை உடன் அமல்படுத்திட கோரினோம். மேலும் அடுத்த ஆண்டுகளில் எழுத்தரில் காலியிடம் ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் உடன் பரிசீலித்து உத்திரவு வழங்க வேண்டினோம்.
காலியிடங்களைப் பொறுத்து இவை நிச்சயம்  நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப் பட்டது.

3. Accounts lineல் LSG, HSG பதவிகள் உடன் identify செய்யப்படக் கோரினோம். இது குறித்து ஏற்கனவே ஊழியர் தரப்பு கூட்டத்தில் உறுதியளித்தபடி Dte  க்கு ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்காக நிலுவையில் பதவிகள் வைத்திருப்ப தாகவும் CPMG அவர்கள் பதிலளித்தார். ஒப்புதல் வந்தவுடன் செய்வதாகவும் தெரிவித்தார். இதில் மாநில அளவிலேயே முடிவெடுக்குமாறும் நாம் கோரியுள்ளோம்.

4. சென்னை பெருநகரப் பகுதி Unit அலுவலகங்கள் மற்றும் கோட்டங்களுக்கு  C class மற்றும் B class அலுவலகங்கள் இல்லாத காரணத்தால்  குறைந்த அளவிலேயே LSG பதவிகள் Identify செய்யப்பட்டுள்ளதும்,  பதவி உயர்வுக்கான pyramid முறையில் பதவிகள் அடையாளப் படுத்தாமையால் ஏற்படும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டி முதல் நிலைப் பதவி உயர்வுக்கான பதவிகளை 4:1 அடிப்படையில் அதிகப் படுத்த வேண்டினோம். இதனை பரிசீலித்து உரிய முடிவு எடுப்பதாக உறுதியளித்தார்.

5.   4.11.92 க்குப் பின்னதான Seniirity பட்டியல் 1.4.17 ல்  5 ஆண்டு சேவை முடித்தவர் வரை,  உடன் வெளியிடப்பட வேண்டுமென்றும்,

அப்படி செய்யப்பட்டால் Decline செய்திடும் மூத்த ஊழியர் பணியிடங்களில் விருப்பமுள்ள இளைய ஊழியர் விரைவில் பதவி உயர்வு பெற முடியும் என்றும்,

காலதாமதமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் நேரடியாக Gr B தேர்வு எழுதிட முடியும்  என்றும் கோரினோம்

முதலில் தற்போதுள்ள பட்டியலை முடித்த பின்னர் அடுத்த நிலையில் இதனை செய்கிறோம் என்று CPMG அவர்கள் கூறினார். இதனை நாங்கள் ஏற்கமுடியாது என்றும், உடன் அடுத்த நிலைப் பணி மூப்புப் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

6. NFG பதவிகள் எந்த கேடரிலும் Identify செய்யப்பட்டதில்லை என்றும், ஆகவே இதில் பதவி உயர்வு பெறும் ஊழியர்களை identify செய்யப்பட்ட பதவிகளுக்கு இடமாற்றம் செய்வது கூடாது என்றும் கோரினோம். இதனைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

7. பதவி உயர்வு என்பது மேல்நிலையில் இருந்து படிப்படியாக கீழ்நிலை வரை அளிக்கப்பட்டால் மட்டுமே Chain of Vacancies சரியாக கணக்கிட முடியும் என்று கோரினோம். இது குறித்து சரியான முடிவு தரப்பட வில்லை.

8. பதவி உயர்வு என்பது தகுதியான ஊழியர் எண்ணிக்கை மற்றும் உயர் பதவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுமானவரை அந்தந்த கோட்டங்களிலேயே அளிக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டது. நம்முடைய இதர கோரிக்கைகள் குறித்து தெளிவான முடிவுகள் CPMG அவர்களால் தெரிவிக்கப்பட வில்லை.

இருப்பினும் கடந்த 17.5.17 அன்று அளிக்கப்பட்ட TN  PJCA வின் தொடர் போராட் கோரிக்கைப் பட்டியலில் இந்தப் பிரச்னையும் அஞ்சல் மூன்று சார்பாக வைக்கப்பட்டு CPMG அவர்களிடம்  அளிக்கப் பட்டுள்ளது. இதன் நகல் நேற்றே அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிரப்பட்டுள்ளது. மீண்டும் படித்துப் பார்க்கவும்.

CPMG அவர்கள் அளித்த உறுதி மொழியின்படியும், மாநில அளவிலான இதர பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பொருத்தும் நம் போராட்ட வியூகங்கள் அமையும்.

ஆனாலும்  கேடர் சீரமைப்பு பிரச்னையில் ஏற்கனவே 17.3.17 தேதியிட்ட  சம்மேளனத்தின் கடிதத்தில்  அளிக்கப்பட்டுள்ள இலாக்காவால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே இது முழுமை பெறும். உயர்பதவிகள் முழுமையாக  நிரப்பப்படும். ஆளெடுப்பு என்பது நிறுத்தப்படாது. காலிப்பணியிடங்கள் நிரப்ப்படும்.  இதுவே இன்றைய நிலை.

தோழமை நன்றியுடன்,

J. இராமமூர்த்தி,
மாநிலச் செயலர் ,
NFPE அஞ்சல் மூன்று,  தமிழ்நாடு.