குமரி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க ஈராண்டு மாநாடு இன்று நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக துவங்கி நடைபெற்றது.இந்த மாநாட்டில் நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி ஏகமனதாக நடைபெற்றது.
கோட்டத் தலைவராக
தோழர். S. அய்யம்பெருமாள் அவர்களும்
கோட்டச் செயலராக
தோழர். A. சுரேஷ்குமார் அவர்களும்
கோட்ட நிதிச் செயலராக
தோழர்.P.ஜஸ்டின் ஜோஸ் அவர்களும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மாநாட்டில் சிறப்பு நிகழ்வாக கடந்த 30.4.17 அன்று பணிநிறைவு பெற்ற
அஞ்சல் மூன்று இயக்கத்தின் போர்வாள், அண்ணன் பாலு அவர்களின் அன்புத்
தம்பியாக குமரிக் கோட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் பல்வேறுபொறுப்புகளில் பணியாற்றிய தோழர். P. முகமது அப்துல் றவூப் அவர்களின் பணி
நிறைவுப் பாராட்டு சிறப்பாக நடைபெற்றது. அவர் மாநிலச் சங்கத்தின் சார்பில்
சிறப்புச் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
மாநாட்டில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. R. அவர்களும், நெல்லை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். ஜேக்கப் ராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில.
Wednesday, May 10, 2017
V.C.Premlatha


