வெற்றிகரமான செங்கை அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு கோட்ட மாநாடுகள்
""""""""""""""""""'""""""""""""""""""'"''""""""""""""""""""""""""""""""""""""
""""""""""""""""""'""""""""""""""""""'"''""""""""""""""""""""""""""""""""""""
இன்று (25.6.17) செங்கற்பட்டு அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு கோட்டச் சங்கங்களின் இணைந்த மாநாடுகள் செங்கை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றன.
தனித் தனியேயான பொருளாய்வுக் கூட்டங்கள் அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர்.S. ராஜகுமாரன் மற்றும் அஞ்சல் நான்கின் கோட்டத் தலைவர் தோழர். P.V. குமரேசன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடை பெற்றன.இதில் நடப்பு ஈராண்டு காலத்திற்கான கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
அஞ்சல் மூன்று:-
தோழர்கள்
தலைவர்: S. ராஜகுமாரன்
செயலர்: G. இராமமூர்த்தி
பொருளர்: பிரடரிக்
தலைவர்: S. ராஜகுமாரன்
செயலர்: G. இராமமூர்த்தி
பொருளர்: பிரடரிக்
அஞ்சல் நான்கு:-
தோழர்கள்
தலைவர்: V. தனபால்
செயலர்: P. ரமேஷ்பாபு
பொருளர்: D. தேவராஜன்
தலைவர்: V. தனபால்
செயலர்: P. ரமேஷ்பாபு
பொருளர்: D. தேவராஜன்
சமீப காலங்களில் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு இணைந்த மாநாடுகள்
பல நடைபெற்று வருவதை நாம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
இது தொழிலாளர் ஒற்றுமையில் ஒரு முன்னேற்றமான நிலையாகும்.
இந்த நிலை தொடர வேண்டும் என விரும்புகிறோம்.மாநாட்டில் முதுபெரும் தலைவர் தோழர். AGP அவர்களும் மூத்த தலைவர் தோழர். KVS அவர்களும்
கலந்து கொண்டு உரையாற்றியது சிறப்பான நிகழ்வாகும்.மேலும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J.R., அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிச் செயலரும் மாநில நிதிச் செயலருமான தோழர். A வீரமணி , RMS நான்கின் மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன், காஞ்சி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர்.பாலாஜி, காஞ்சி அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். மகேந்திரன் , காஞ்சி அஞ்சல் மூன்று முன்னாள் செயலர் தோழர். கேசவன்,ராமநாதபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். N. அறிவழகன் , திருவள்ளூர் அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர். சந்திரமௌலி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/வாழ்த்துரை வழங்கினர். மாநாடு மகிழ்வுடன் நிறைவுற்றது.
Sunday, June 25, 2017
V.C.Premlatha