Saturday, 17 January 2015

Pongal Celebration @ Suramangalam HO

சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் விழா

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை பொங்கல் திருநாள் ஆகும். 16.01.2015 அன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு சூரமங்கலம் தலைமை அஞ்சலத்தில் சூரமங்கலம் தலைமை அஞ்சல் அதிகாரி திரு.சி.சஞ்சீவி அவர்கள் தலைமையில் பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று மாலை 3.00 மணியளவில் மகளிர் தோழியர் அனைவரும் சூரமங்கல அஞ்சல் வளாகத்தை அலங்கரித்து ,வண்ண கோலமிட்டு கிராமத்தில் வைப்பது போல விறகு அடுப்பில் புது பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து அதை அனைத்து பணியாளர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை சூரமங்கலம் தலைமை காசாளர் திரு செங்கோட்டைராஜா அவர்கள் தலைமையில் சூரமங்கலம் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.