Wednesday, 14 January 2015

அஞ்சல் வங்கி தொடங்க அவசர சட்டம் ?: மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்

அஞ்சல் நிலையங்களை வங்கியாக மாற்றுவதற்கான அவசரசட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. அனைவருக்கும் வங்கிச் சேவையைவிரிவுபடுத்தும் நோக்கில் புதிய வங்கிகள் தொடங்க உரிமம்வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் அறிவிப்புவெளியிட்டது. அதன்படி, கிராமங்களிலும் கிளைகளைக் கொண்டஅஞ்சல் துறையும் வங்கிச் சேவையில் ஈடுபடவிண்ணப்பித்திருந்தது. எனினும், அஞ்சல் துறையை வங்கிப்பணியில் ஈடுபட அனுமதிப்பது குறித்து மத்திய அரசுதான்முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அஞ்சல் வங்கியைஅனுமதிக்க அடுத்த மாதத்தில் சட்டம் கொண்டு வர அரசு பரிசீலித்துவருவதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக, பிரதமர் தலைமையில் கடந்த வாரம் நடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அஞ்சல்நிலையங்களை வங்கிகளாக மாற்றுவதற்கான மாதிரி திட்டஅறிக்கை பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.