Thursday, 29 January 2015

P3 EXTENDED SOLIDARITY SUPPORT TO OUR P4 UNION PROGRAMME IN SALEM WEST DIVISION

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 26.01.2015 அன்று திருச்சியில் நடைபெற்ற  அஞ்சல் மூன்று மற்றும்  GDS  சங்கங்களின்  மாநில அளவிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில், தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை  தீர்த்து வைத்திடக் கோரியும், நிர்வாகத்தின்  தொழிலாளர் அடக்கு முறைக்கு எதிரான  போக்கினை கண்டித்தும்,  தொழிற்சங்க பழி வாங்கும் போக்கினை  கடைப்பிடிக்கும் தென் மண்டல நிர்வாகத்தை கண்டித்தும்  தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டத்தினை நடத்திடுவது என்று ஒரு மனதான தீர்மானம்,  அஞ்சல் மூன்று  மற்றும் GDS  சங்கங்களால் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பதை  முன்னோட்டமாக  தெரிவித்துக் கொள்கிறோம். 


ஏற்கனவே தமிழக அஞ்சல் நான்கு சங்கத்தால்,  தேங்கிக்கிடக்கும் கோரிக்கைகளை தீர்த்திடக் கோரி, 28.01.2015 தேதியில்  தமிழகம் தழுவிய அளவில் அனைத்து கோட்ட அலுவலகங்களுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் நடத்திட  அறிவிக்கப்பட்டது.    நம்முடைய  SALEM WEST அஞ்சல் மூன்று சங்கம் /GDS/AIPEDUசார்பாக அந்தப் போராட்டத்திற்கு  தார்மீக ஆதரவை அளித்து கலந்து கொண்டுஅதனை முழுமையாக, வெற்றிகரமாக நடத்தப்பட்டது

ஒவ்வொரு  ஊழியர்களுக்கும் தலா  SB கணக்குகள் 300/200 என இலக்கு நிர்ணயம் செய்யாதே /
தபால் காரர்களுக்கு RPLI பிடி /ஸ்பீட் போஸ்ட் வாங்கு என்று துன்புறுத்தாதே இ மெயில்காலையில் பார்போம் ,மாலையில் பதில் கொடுப்போம் அரைமணிக்கு ஒரு ரிமைன்டர்   அனுப்பி ஊழியர்களின் மனஅமைதியை கெடுக்காதே      போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி அஞ்சல் நான்கு சார்பாக SURAMANGALAM HO யில் நடைபெற்ற ஆர்பாட்ட புகைப்படங்கள் 

                  ஆர்ப்பாட்டம் துவக்கம் 

PHOTOS IN PROGRAMME  BEFORE SURAMANGALAM HO ON 28.01.2015







--------N F P E (JCA) SALEM WEST-------