சேலம் மேற்கு கோட்டத்தில்
04.12.2014 அன்று சூரமங்கலம் H O வின் கீழ் உள்ள
வேம்படிதாளம் என்ற துணை அஞ்சலகம் C B S பணியினை வெற்றிகரமாக தொடங்கியது. முன்னதாக கணிணி
நிர்வாகிகள் தோழர்கள். M.வடிவேல் P.இராமசந்திரன்,
நிர்மல் பிரகாஷ் ஆகியோர் C B S மாற்ற பணிகளை
மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.
04.12.2014 அன்று காலை 11.00 மணியளவில் ராசிபுரம்
உட்கோட்ட ஆய்வாளர் திருமதி
மஞ்சு அவர்களின் தலைமையில் துணை
அஞ்சல் அதிகாரி திருமதி P.துளசிமாதா
அவர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் இளம்பிள்ளை S.O. தோழர்கள்.கணபதி PA ,சிவநேசன் PA
ஆகியோர் கலந்து கொண்டு C B S பணி தொடக்கத்தை
வெற்றிகரமாக ஆரம்பித்தனர். தோழர் M.சிவகுமார்
PA, குருசாமிபாளையம் S.O. ஏற்கனவே
C B S பணியில்
அனுபவம் மிக்கவராக இருப்பதால் அவரின் திறமையை காட்டி வரவு செலவுகளை வெற்றிகரமாக C B S இல் செய்து முடித்தார்.
அனைவருக்கும் கோட்ட
சங்கத்தின் வாழ்த்துக்கள்
Friday, December 05, 2014
V.C.Premlatha
