நம்முடைய வேலை நிறுத்த
போராட்ட அறிவிப்பிற்கு மாபெரும் வெற்றி !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நம்முடைய அஞ்சல் மூன்றின் வேலை நிறுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, மண்டல மற்றும் மாநில அலுவலகத்தில் பல கோட்டங்களில் இருந்து நீண்ட காலம் DEPUTATION இல் இருக்கும் ஊழியர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதே . இன்று தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற CONCILIATORY MEETING இல் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு அதன் மீது எழுத்து பூர்வமாக இன்று பதிவு செய்து மாநில நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது .
இன்று DEPUTATION குறித்த கோப்புகள் மற்றும் ஞாயிறு பணி குறித்த பிரச்சினைகள் நமது மாநிலத்திற்கு ADDL CHARGE ஆக இருக்கும் கர்நாடகா CPMG அவர்களின் உத்திரவுக்கு அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்தது . ஏனெனில் அங்கு வருகை புரிந்த அஞ்சல் வாரிய உறுப்பினர் அவர்களுடன் CPMG CAMP இல் இருந்ததால் அதன் மீது முடிவு எடுக்கப் படவில்லை . பிறகு மாலை 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு இரவே உத்திரவு அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அதன் படி புதிதாக பணியில் சேர்ந்த PA COக்கள் அனைவரும் பணி பயிற்சி முடித்து பணியில் அமர்ந்த உடன் (APRIL மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே CIRCLE OFFICE மற்றும் நான்கு மண்டலங்களிலும் உள்ள மண்டல அலுவலகங்களில் நீண்ட காலமாக DEPUTATION இல் இருக்கும் ஊழியர்கள் திருப்பி அனுப்பப் படவேண்டும் . இந்த செய்தி மாநில நிர்வாகத்தில் இருந்து நமக்கு தெரிவிக்கப்பட்டது . இதற்கான உத்திரவின் நகல் நமது சங்கத்திற்கு நாளை அனுப்பப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. .
இந்தப் பிரச்சினை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக DEPUTATION இல் உள்ளார்கள் என்பதே இதற்கு ஆதாரம் . இந்த முடிவு நம் அனைவரின் போராட்ட வீச்சிற்கு கிடைத்த வெற்றி என்றாலும், இப்படி ஒரு முடிவை எடுத்த CPMG திரு. M .S . ராமானுஜன் , IPoS அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஒட்டு மொத்த உத்திரவின் மூலம் நம்முடைய தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களின் உண்ணா விரதக் கோரிக்கையும் மதுரை கோட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரும் தன்னுடைய உண்ணா நிலை போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டார். அவரது போராட்டத்திற்கு நம்முடைய மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் ! இதர கோரிக்கைகளை வென்றடைய நாம் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம்.
ஊழியர் ஒற்றுமை ஓங்குக !
வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
CONCILIATORY TALKS BEFORE ASST. LABOUR COMMISSIONER(ENTRAL) CHENNAI ON STRIKE DEMANDS !
தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! இன்று ( 20.03.2015) காலை சுமார் 11.00 மணியளவில் NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் 9 மாநிலச் செயலர்களும் இதர பொறுப்பாளர்களும் COC கன்வீனர் தோழர். J .R . தலைமையில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் மாநில நிர்வாகத்தின் பிரதிநிதியுடன் வேலை நிறுத்தம் தொடர்பான கோரிக்கைகளின் மீதான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
நம்முடைய வேலை நிறுத்த நோட்டீசில் கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதம் அனைத்து மாநிலச் செயலர்களாலும் வைக்கப்பட்டது.
நிர்வாகத் தரப்பில், விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்ப்பதாக CPMG அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் , அதனால் வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப் படவேண்டும் என்றும் வேண்டினர்.
நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர் J .R . அவர்கள், பிரச்சினைகள் பற்றி எரிவதாகவும் வேலை நிறுத்த கோரிக்கைகளில் ஒன்றான விடுமுறை மற்றும் ஞாயிறு நாட்களில் ஊழியர்கள் பணி செய்திட உத்திரவிடப்படுவது மனித உரிமை மீறல் என்றும் , வேலை நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படும் தேதியிலேயே எதிர்வரும் 22.3.2015 மற்றும் 29.03.2015 தேதிகளில் மீண்டும் பணி செய்திட உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக புகார் தெரிவித்தார். இது மனிதஉரிமை மீறல். நிச்சயம் இது குறித்து தான் தலையிடுவதாகவும் இது குறிப்பில் ஏற்றப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோல , இன்றைய தேதியில் மதுரை கோட்டச் செயலர் மூன்றாவது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும் இது குறித்து நேற்றைய தேதியில் மதுரை PMG இடம் பேசியும் முழுமையாக DEPUTATIONIST பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், ஏற்கனவே RJCM , FOUR MONTHLY MEETING , BI MONTHLY MEETING களில் எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டிருந்தும் ஆனால் அவை அப்பட்டமாக மீறப் படுவதாகவும் தெரிவித்தார். மூன்றாவது நாள் உண்ணாவிரதம் உயிர் பிரச்சினை என்பதால் இன்றே இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிவிக்கப்படவேண்டும் என்றும் உரக்கத் தெரிவித்தார்.
இது குறித்தும் இன்றே முடிவு செய்திட வேண்டி தாம் எழுத்து பூர்வமாக வலியுறுத்துவதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் உறுதி அளித்தார். இதர பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இந்தப் பிரச்சினைகளில் எதிர்வரும் 24.3.2015 க்குள் CPMG அவர்கள் ஊழியர் தரப்புடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண வேண்டும் என்றும், எதிர்வரும் 25.3.2015 அன்று மீண்டும் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் , அதில் நேரடிப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தார். இந்த பேச்சு வார்த்தைக்கான MINUTES உடனே அளிக்கப்பட்டது. அதன் நகல் கீழே காணவும் .
இந்தப் பேச்சு வார்த்தை நம் போராட்டத்தின் ஒரு பகுதியே . முழுமையல்ல. நாம் எந்த அளவுக்கு வேலை நிறுத்தத்தில் தீவிரமாக இருக்கிறோமோ அந்த அளவுக்கே பிரச்சினைகள் தீர்ந்திட நிர்வாகம் செவி சாய்க்கும் என்பது கடந்த கால வரலாறு.
எனவே உங்களின் போராட்ட தயாரிப்பு வேலைகளை தீவிரப் படுத்துங்கள். வேலை நிறுத்த வீச்சினை அதிகப்படுத்துங்கள் ! வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
MEETING WITH PMG, SR ON 19.03.2015 IN CONNECTION WITH MADURAI ISSUE
மதுரை மண்டலத்தில் மாநிலச் செயலர்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . மண்டல அலுவலகத்தில் DEPUTATION இல் வைத்திருக்கும் மதுரை கோட்டத்தை சேர்ந்த 28 ஊழியர்களை உடனே திருப்பி அனுப்பக் கோரி அரசரடி தலைமை அஞ்சலகத்தில் பணியில் இருந்து கொண்டே தொடர் உண்ணா விரதம் இருக்கும் மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்களது கோட்டப் பிரச்சினைய தீர்த்திடவேண்டி PMG SR அவர்களுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்திட வேண்டியும் அஞ்சல் மூன்றி மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் நேற்றைய தினம் மதுரைக்கு சென்றிருந்தார். காலையில் தோழர். சுந்தரமூர்த்தி அவர்களை நேரில் சென்று வாழ்த்திவிட்டு, அவர் முன்னிலையிலேயே , APMG STAFF அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினை குறித்து PMG SR அவர்களுடன் விவாதித்திட மண்டல அலுவலகம் வருவதாகவும் உடன் நேரம் ஒதுக்கித்தருமாரும் வேண்டினார்.
அதற்கு முதலில் PMG SR அவர்கள் வெளியில் இருப்பதாக தகவல் தரப்பட்டது. அவர் வந்தவுடன் உடன் தகவல் தெரிவிக்குமாறு மாநிலச் செயலர் வேண்டினார் . 15 நிமிடம் கழித்து PMG அவர்கள் வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு சற்று உடல் நலம் சரியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு , எப்படியும் அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார் நம் மாநிலச் செயலர் தோழர் J .R .
மீண்டும் அரை மணி நேரம் கழித்து , PMG அவர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர் விடுப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி மாநிலச் செயலர் மற்றும் அவருடன் அங்கு வந்திருந்த அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி , GDS மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் , முன்னாள் மாநிலச் செயலர் தோழர். பார்த்திபன் , விருதுநகர் கோட்ட முன்னாள் செயலர் தோழர் L .S ., பாண்டி கோட்ட செயலர் தோழர். சத்திய மூர்த்தி ஆகியோருடன் மண்டல அலுவலகம் சென்று APMG STAFF அவர்களிடம் PMG உடனான சந்திப்புக்கு உடன் ஏற்பாடு செய்திட வேண்டினார். அவர் தன்னால் தொடர்பு கொள்ள இயலாது என்று தெரிவித்ததால், மீண்டும் கைபேசியில் PMG SR அவர்களை தொடர்பு கொண்டு பேசினார் நம் மாநிலச் செயலர். வேறு வழியின்றி நம் மாநிலச் செயலாளர் தோழர். J .R . இடம் PMG SR அவர்கள் மாலை 05.30 மணிக்கு நேர் காணலுக்கு ஒப்புக் கொண்டார்.
அதனடிப்படையில் மாலை 05.30 மணியளவில் PMG அவர்களுடன் மாநிலச் செயலரின் சந்திப்பு நடைபெற்றது. மாநிலச் செயலருடன், மாநில நிதிச் செயலர் தோழர். A வீரமணி, முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V பார்த்திபன் , விருதுநகர் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். L .S . ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சு வார்த்தை
1 1/2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. PMG அவர்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி 9 PA COக்கள் புதிதாக பணியில் எதிர்வரும் 11.4.2015 அன்று இணைவதால் அன்று அதற்கு ஈடான 9 P .A . க்களை திருப்பி அனுப்புவதாகவும், ஏற்கனவே கடந்த வாரத்தில் அங்கயற்கண்ணி என்ற தோழியர் திருப்ப அனுப்பப்பட்டதாகவும் , எதிர்வரும் 31.3.2015 அன்று தோழியர் . உமா என்பவரை திருப்பு அனுப்புவதாகவும் இரண்டாம் வாரத்தில் IP பணியில் இருந்து விடுவிப்பு கோரி பெற்றுள்ள தோழியர் கௌரி என்பவர் திருப்பப் படுவார் என்றும் உறுதி அளித்தார்.
குறைந்த பட்சம் 20 பேரையாவது திருப்ப அனுப்ப வேண்டும் என்று மாநிலச் செயலர் வேண்டினார். அதற்கு PMG அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை . இதனை நம்முடைய மாநிலச் செயலர் ஏற்கவில்லை .உடன் PMG அவர்கள் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் உடன் மருத்துவரை பார்க்கவேண்டும் என்றும் கூறிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார்.
இதன் பின்னர் மாலை சுமார் 07.00 மணியளவில் அரசரடி HO வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர் PMG அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்ததோடு , இந்தப் பிரச்சினையில் நாளை (20.03.2015) அன்று LABOUR COMMISSIONER முன்னிலையில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் , முழுவதுமாக DEPUTATION உள்ள அதிகப் படியான ஊழியர்களை திரும்பப் பெறுவோம் என்றும் , இதனை கோரிக்கையாக வைத்தே எதிர்வரும் 26.03.2015 அன்று மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை NFPE இன் ஒன்பது சங்கங்களும் செய்ய உள்ளன என்றும் உறுதியாகத் தெரிவித்தார் .
போராட்ட களத்தில் உள்ள தோழர். சுந்தரமூர்த்தியை வாழ்த்தி மாநிலச் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து மாநிலச் சங்கத்தின் ஆதரவை போராடும் தோழருக்கு தெரிவித்தார். மாநிலச் சங்க போராட்ட தயாரிப்புகள் தீவிரப் படுத்தப்படுவதாகவும் நிச்சயம் கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம் என்றும் சூளுரைத்தார்.
மறுநாள் (20.03.2015) காலை தொழிலாளர் நல ஆணையருடன் ஏற்கனவே பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருந்ததால் இரவு சுமார் 08.00 மணியளவில் கோட்ட சங்க நிர்வாகிகளால் மாநிலச் செயலர்கள் தோழர். J .R . மற்றும் தோழர். R . தனராஜ் ஆகியோர் வழியனுப்பப் பட்டனர்.
மதுரை மட்டுமல்லாது அனைத்து மண்டலங்களிலும் மற்றும் மாநில (CIRCLE OFFICE ) அலுவலகத்தில் இருந்தும் அதிகப்படியாக பல்வேறு கோட்டங்களில் இருந்து மாநில அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை SHORTAGE உள்ள நிலையில் கோட்டங்களுக்கு திரும்ப பெறுவதே நம் இலட்சியம் ஆகும்.
அந்த திசை நோக்கி மாநிலச் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு போராட்ட களத்தை விரிவு படுத்தியுள்ளது . கடந்த பதினைந்து ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினை தற்போதாவது தீர்க்கப்பட வேண்டும் என்பதே மாநிலச் சங்கத்தின் போராட்ட நோக்கமாகும் .
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !

Saturday, March 21, 2015
V.C.Premlatha



