Sunday, 15 March 2015

26.03.2015 ஒரு நாள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் !

26.03.2015 ஒரு நாள் 

தமிழகம் தழுவிய 

வேலை நிறுத்தம் !


அடக்குமுறையை எதிர்த்து , 
தொழிலாளி அடிமைப்படுத்தப் படுவதை எதிர்த்து , 
தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, பணியிடத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி ,
 ஒழுங்கான கணக்கீட்டில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றக் கோரி ,

 CBS /CIS சேவைகளை சீர்படுத்தக் கோரி, 
அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS , கணக்குப் பிரிவு, 
நிர்வாகப் பிரிவு, GDS உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களின் 
தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 

 தமிழகம் தழுவிய அளவில் போர்ப் பரணி !
இது உரிமைக்கான யுத்தம் !
உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக நினைக்கும் 
சில அதிகார மையங்களுக்கு  நம் உணர்வைக் காட்டும் யுத்தம் !
_________________________________________________________________________________
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !


அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு  இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா 


உண்டு உண்டு என்று நம்பி காலை எடு 

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு 

ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து 

அதில் நீதி  உன்னை தேடி வரும் மாலை தொடுத்து

தோழனே வா ! தோள் கொடுக்க வா !            வீ ரனே வா வீறு கொண்டு வா !
"கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்.
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
 
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி.
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு !
உனக்கும் வேண்டுமா?

போராடிப் பார்! "

N F P E POSTAL,RMS,MMS,GDS(NFPE) J C A 
TAMILNADU CIRCLE