16.09.2014 அன்று நமது மண்டல
அலுவலகத்தில் நமது PMG உடன் நமது அகில
இந்திய பொது செயலர் தோழர். N.S. அவர்கள் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார். உடன் கோவை மேற்கு மண்டல செயலர் தோழர்
சி.சஞ்சீவி,தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் எபினேசர் காந்தி , தமிழ் மாநில அமைப்பு
செயலர் தோழர் ராஜேந்திரன்,மேட்டுபாளையம் கிளை செயலர் தோழர் செல்வராஜ், PSD கிளை செயலர் தோழர் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
சந்திப்பின்போது பேசப்பட்ட பிரச்சனைகளில்
சேலம் மேற்கு கோட்டத்தில் இலாக்கா விதி முறைகளுக்கு மாறாக போடப்பட்ட சுழல் மாறுதல்
(ROTATIONAL TRANSFER)
2014 குறித்து பேசப்பட்டது. இறுதியாக நமது மண்டல PMG அவர்கள் இலாக்காவால் இன்று 17.09.2014 C A T இல் போடப்படும் VACATE PETITION க்கு நம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்க வேண்டாம் எனக்
கேட்டுகொண்டார். வழக்கு நிலுவையில்
இருந்தால் TRANSFER குறித்த
மேல் முறையீடுகளை பரிசீலிக்க இயலாது. என கேட்டு கொண்டார். இது குறித்து சங்க நிர்வாக குழுவையும் ,மாநில
செயலரையும் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறி வந்து விட்டோம்.
அதன் பின்பு மாநில
செயலரையும் கலந்து பேசியதில் P M G அவர்களின் உறுதி மொழியை ஏற்று கொண்டு பின்பு
முறையிடுவது சரிதான் என்று கூறியதின் அடிப்படையில் தொடர்ந்து நிர்வாக குழுவை
தலைவர் அனுமதியுடன் தொடர்பு கொண்டு அவர்களின் அனுமதி பெற்று இன்று 17.09.2014 விசாரணைக்கு
வரும் RT வழக்கில்
மறுப்பு கொடுக்க வேண்டாம் என நமது வழக்கறிஞர் அவர்களிடம் தெரிவித்து உள்ளோம். எனவே விரைவில் பாதிப்பு இல்லாத தோழர்கள்
தங்களின் மாறுதல் பெற்ற பணியிடங்களுக்கு செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது என்பதை
தெரிவித் கொள்கிறோம். பாதிப்புள்ள தோழர்/தோழியர்களின் பாதிப்பும் களையப்பட்டு மாற்று
உத்திரவு பெறப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இது நாள் வரை சங்கம் எடுத்த
நிலைப்பாட்டில் தங்கள் கஷ்டங்களையும் பொறுத்து கொண்டு தொடர்ந்து வீரமுடன் ஆதரவளித்த
அனைத்து தோழர்/தோழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்,
K.பரமசிவம் C..சஞ்சீவி, K.K.கமலமணி
கோட்ட தலைவர் கோட்ட செயலர் கோட்ட நிதி செயலர்
Wednesday, September 17, 2014
V.C.Premlatha