இன்று 09.06.2014 திங்கள் கிழமை
சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சல் வங்கி சேவை (CORE BANKING SOLUTION) C B S செயல்படத்துவங்கியது.
விழா காலை 9.00 மணிக்கு துவங்கியது.
விழாவிற்கு சேலம் மேற்கு கோட்ட துணை
கண்காணிப்பாளர் திரு வாசுதேவன் அவர்கள் தலைமை தாங்கினார்.
- சோனா கல்லூரியின் முதல்வர் திரு .K. கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து விழாவை தொடக்கி வைத்தார் பின்னர் K. கருணாகரன் , திரு வாசுதேவன்,திருமதி ஈஸ்வரி , உதவி அஞ்சல் அதிகாரி, திருமதி. K,K,கமலமணி ,திரு.மனீஷ் (INFOSYS) ஆகியோர் குத்து விளக்கு ஏற்றியும் விழாவை சிறப்பிக்க , தொடர்ந்து தலைமை அஞ்சல் அதிகாரி சி.சஞ்சீவி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.. விழா நிகழ்வுகளை .திரு கரு.சு.புகழேந்தி அவர்கள் தொகுத்து வழங்கினார்.பின்னர் சிறப்பு விருந்தினர் திரு .K. கருணாகரன் , திரு.வாசுதேவன் A.S.P ,திரு.முருகேசன், திரு.மௌலீஸ்வரன் ஆகியோர் அஞ்சல் சேவையை பற்றி பேசினார்கள். பின்னர் திருமதி K.K.கமலமணி நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர் திரு.சகாயராஜ் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட PLI/RPLI சேவை பிரிவை ரிப்பன் கத்தரித்து தொடங்கினார். அனைவருக்கு இனிப்பு வழங்கி சேவைகள் தொடங்கப்பட்டது. சேவை தொடங்கி ஒருமணி நேரத்தில் ஏறக்குறைய 55 வரவு செலவுகள் செய்யப்பட்டது என்பது பாராட்டுக்குரியது . சிறப்பாக C B S பணி தொடங்க தொடர்ந்து பாடுபட்ட கணினி மேலாளர் திரு பாலாஜி, இரவும் பகலும் பாடுபட்ட கணினி நிர்வாகிகள் திரு.வடிவேலு,திரு.ராமசந்திரன் , திரு.குருசிவம், திரு.நிர்மல் பிரகாஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
Monday, June 09, 2014
V.C.Premlatha








