Wednesday, 18 June 2014

C B S தொடக்கம் - குருசாமிபாளையம் துணை அஞ்சலகம் சேலம் மேற்கு கோட்டம்




இன்று 18.06.2014  புதன் கிழமை குருசாமிபாளையம் துணை அஞ்சலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சல் வங்கி சேவை (CORE BANKING SOLUTION) C B  S செயல்படத்துவங்கியது. விழா காலை 8.00 மணிக்கு துவங்கியது.  விழாவிற்கு குருசாமிபாளையம் துணை அஞ்சல் அதிகாரி திருமதி.கலாராணி அவர்கள்  தலைமை தாங்கினார்.  




















  1.       துணை கண்காணிப்பாளர் திரு வாசுதேவன் அவர்கள்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன்  கத்தரித்து  விழாவை தொடக்கி  வைத்தார்  பின்னர் திரு.சிவகுமார்  அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசி முதல் TRANSACTION தொடங்கினார் . விழா நிகழ்வுகளை விருந்தினர்கள் திரு. P/செங்கோடன் SPM ராசிபுரம்,திரு.சோமசுந்தரம்,SPM, ஆண்டகலூர் கேட், திருமதி.ஹெலன் செல்வராணிSPM,சிங்களாந்தபுரம்,திருமதி.பிரேமகலாராணி,Sr.PA,
  2. ராசிபுரம் மற்றும் ராசிபுரம் பகுதி அஞ்சல் அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பேரூராட்சி தலைவர். திருமதி மலர்கொடி வடிவேலு, பெரியதனக்காரர் திரு சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   திரு.சிவகுமார்  நன்றி கூற விழா  இனிதே முடிவுற்றது.  அனைவருக்கு இனிப்பு வழங்கி சேவைகள் தொடங்கப்பட்டது. .  சிறப்பாக C B S  பணி தொடங்க  தொடர்ந்து பாடுபட்ட கணினி மேலாளர் திரு பாலாஜி, திரு.வடிவேலு,திரு.ராமசந்திரன் , திரு.குருசிவம்,இரவும் பகலும் பாடுபட்ட கணினி நிர்வாகி திருமதி.கவியரசி   ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.