தமிழகத்தில் அஞ்சல் மற்றும் RMS பகுதிகளில்
48 மணி நேர வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி
நமக்குக் கிடைத்த செய்திகளின் படியும் , பத்திரிகை, தொலைகாட்சி செய்திகளின் படியும் இதுவரை நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்தங்களையும் விட இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிக்கும் நூற்றுக்கு நூறு விழுக்காடு என , எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து பகுதி ஊழியர்களும் கலந்துகொண்டது உண்மையிலேயே நம் தமிழ் மாநில சங்கங்களுக்கு பெருமை ! இது மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்துகிறது ! .
இது நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி ! நிச்சயம் நம் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் ! கோரிக்கைகளில் நாம் நிச்சயம் வென்றே தீருவோம் !
மீண்டும் அனைத்து பகுதி தோழர்களுக்கும் , தோழியர்களுக்கும்
எங்கள் நெஞ்சு நிறைந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறோம் !
நமது உரிமைகளுக்காகவும் , கோரிக்கைகளுக்காகவும் நமது சங்கத்தின்
அறைகூவலுக்காக பொறுமைகாத்து சம்பள இழப்பையும்
பொருட்படுத்தாமல் 2 நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவது நமது
கடமை என்று எண்ணி நம் சங்கத்தின் கண்ணியத்தை அக்கடமையின்
வாயிலாக முழு வீச்சில் பங்கேற்று ஊழியர்களின் ஒற்றுமையை
மத்திய அரசுக்கு எடுத்துக்காட்டிய தோழர் / தோழியர்
அனைவருக்கும் நமது சங்கத்தின் வீர வணக்கங்கள் !
C.SANJEEVI
ASST CIRCLE SECRETARY®IONAL SECRETARY
COIMBATORE REGION
ASST CIRCLE SECRETARY®IONAL SECRETARY
COIMBATORE REGION
Saturday, February 15, 2014
V.C.Premlatha