Monday, 10 February 2014

12.02.2014 & 13.02.2014 வேலை நிறுத்த புரட்சி அழைக்கிறது

J. C .A
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு  போராட்ட குழு
            சேலம் மேற்கு கோட்டம் .சேலம் 636005
----------------------------------------------------------------
அறிக்கை எண்:9    (உறுப்பினர்களுக்கு மட்டும்)        நாள்:09.02.2014

வீரமிகு தோழர்களே!தோழியர்களே!! வணக்கம்.

7வது சம்பளக் கமிசன் அமைத்தல் உட்பட 15அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் மற்றும் NFPE,FNPO சம்மேளனம் 12.02.2014 &13.02.2014 இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது.  ஆனால் மத்திய அரசு ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி திரு.ஜஸ்டிஸ்.அசோக்குமார் மாத்தூர் அவர்கள் தலைமையில் திரு விவேக் ரே (SECRETARY,PETROLIUM & NATURAL GAS)முழு நேர உறுப்பினராகவும் திரு.DR.ரத்தின் ராய் (DIRECTOR,NIPEP) அவர்கள் பகுதி நேர உறுப்பினராகவும் திருமதி.மீனா அகர்வால் (OSD,DEPT OF EXPENDITURE-MIN OF FINANCE) செயலராகவும் கொண்டு 7வது சம்பளக்கமிசனை அறிவித்து கண் துடைப்பு காட்டியுள்ளது.  ஆனால் அறிவிப்பில் DA MERGER  பற்றி தகவல் இல்லை. இடைக்கால நிவாரணம் பற்றி தகவல் இல்லை. GDS  பற்றி தகவல் இல்லை.  அமல் படுத்தும் தேதி நாம் கோரியிருந்த 1.1.2014 இல்லை.  ஊழியர் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் பெறவில்லை.  ஊழியர் தரப்பில் இருந்து சம்பளக்கமிசனில் உறுப்பினர் நியமனம் இல்லை.இப்படி இல்லை.. இல்லை... என்ற தகவலுடன் 7வது சம்பளக்கமிசன் அமைந்தால் நமக்கு எந்த பயனும் இல்லை என்றாகி விடும்.  எனவே மத்திய அரசு உறுதியான அறிவிப்பை செய்தால் ஒழிய வேலை நிறுத்தம் வாபஸ் கிடையாது என்ற நிலைப்பாட்டினை N F P E சம்மேளனம் எடுத்துள்ளது.  எனவே யார் போராட்டம் அறிவித்தார்கள் என்பதை பார்க்காமல் எதற்காக போராடுகிறார்கள் என்பதை உணர்ந்து 12.02.2014 &13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

                 GDS  GDS தோழர்களின் கவனத்திற்கு

GDS தோழர்களே  உங்களின் போனஸ் உச்ச வரம்பை ரூ.3500 ஆக உயர்த்த மத்திய அமைச்சர் திருமதி .கில்லி ராணி அவர்களை சந்தித்து அவர் மூலம் நடவடிக்கை எடுத்தது NFPE சம்மேளனம், உங்களை மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது NFPE  சம்மேளனம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.12.01.2014 தேதியில் வழக்கை  விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கு முகாந்திரம் உள்ளது. எனவே டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து நான்கு மாதத்தில் தீர்ப்பு வழங்கவேண்டும் என உத்திரவிட்டுள்ளது.  உங்கள் ஒளிமயமான எதிர்காலம் உருவாக காரணம் NFPE சம்மேளனம். அதேபோல 7வது சம்பளக்கமிசனில்GDS  களின் சம்பளத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும் , வாரிசு வேலைகளை உடனே முழுவதும் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது N F P E சம்மேளனமும்  30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் தான். எனவே நீங்கள் முழுமையாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  மற்றவர்கள் போராடி வரும் பலனை போராடமல் அனுபவிக்கலாமா ?
                      புரட்சி அழைக்கிறது

          பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளின்அழைப்பு

புரட்சி வெறும் விருப்பமாக மட்டும் வெளிப்படுவது போதுமா?
அது செயலை உன்னிடம் மலரும் நாள் எது ?
பிப்ரவரி திங்கள்  12 மற்றும் 13 தேதிகள் கேட்கிறது.
உலகை மாற்றுதல் புரட்சி என்பது உண்மை தான்,
ஆனால்
அதற்க்கு முதலில் உன்னை மாற்றுதல் வேண்டுமென்பதை உணர்வாயா?

தாய் தந்தை உருவில் பாச வடிவாய்நின்ற மத்திய அரசின்
ஊழியர்களாகிய நமக்கு ஒரு தீது ஏற்படுவதை தடுக்க
எதிர்த்து போராட தயங்குபவர்களுக்கு
எப்படி கிடைக்கும் புரட்சியின் நறுமணம்?
போராடும் தொழிலாளி வர்கத்தை
மதிக்க தெரியாத மத்திய அரசை
வெறுக்கத் தெரியாதவர்களுக்கு எப்படிக்
கிடைக்கும் புரட்சியின் உணர்ச்சி பலம்?

கருவறை வரைக்கும் கை நீட்டி சுரண்டும்
ஏகாதிபத்திய கார்பரேட்களின் தீவிரத்தின் இயல்பறிந்தும்
இயன்றவரை என்னால் முடிந்த வேலைகளை
அதிகாரிகளுக்கு செய்கிறேன் என வரம்பிட்டு கொள்ளும்
வாழ்க்கை முறையை விடாமல் இருந்தால் வருமா புரட்சி?

பிப்ரவரி 12 மற்றும் 13 வேண்டுவது இதைத்தான் ..
தயவு செய்து உங்கள் பகை உணர்சிகளுக்கு
சலுகை வழங்காதீர்!
புரட்சி கடமைகளுக்கு தடையாய் வரும்
உங்கள் சொந்த உணர்ச்சிகளை எதிர்க்க தயங்காதீர்!!
தன சுகம் மறுத்துத் துடித்து கொண்டிருக்கும்
தலைவர்களின் இதயத்தின் தீராத ஆசை கேட்கிறதா
உங்கள் செவிகளுக்கு?
தோழர்களே! தோழியர்களே!!
புரட்சிக்கு உங்களிடம் இடம் கொடுங்கள்

புதிய ஓய்வூதிய மசோதாவால் .பாதிக்கப்போவது இளைய சமுதாயம் மட்டும் அல்ல
விரைவில் மற்றவர்களும் தான்
ஐந்து வருட  காலம் மட்டுமே  நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியில் இருந்தாலும் பென்சன்
பாதியில் இறந்தாலும் பென்ஷன் ஆனால்
மத்திய அரசுக்கு வாழ்கையை அர்ப்பணித்த நமக்கு இல்லை பென்ஷன்..
இதை நீ அனுமதிக்கலாமா?
உனது கோட்டைக்குள்ளே கொடியவர்கள்
கூடாரம் அமைக்க அனுமதிக்கலாமா?.

ஒரு எல்லை வரை போராடினோம்
7வது சம்பளக் கமிசன் வேண்டுமென்று....
50  சதம் பஞ்சப்படி இணைப்பு வேண்டுமென்று...
GDS களை இலாக்கா  ஊழியராக்குவென்று ...
5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய கமிசன் வேண்டுமென்று...
வாரிசு வேலை அனைவருக்கும் வேண்டுமென்று
காலிப்பணியிடங்கள் உடனே வேண்டுமென்று...
மிகுதி நேரப்பணிப்படி மாற்ற வேண்டுமென்று
ஐந்து கட்ட பதவி உயர்வு வேண்டுமென்று...
ஊதிய உச்சவரம்பில்லா போனஸ் வழங்க வேண்டுமென்று....
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள் !விவாதங்கள்!!
சண்டைகள்! எல்லாம் முடிந்து விட்டன.
ஆனாலும் மத்திய அரசு தன் பிடிவாதத்தை
இலக்கத் தயாராய் இல்லை ...
சுதந்திரக்காற்றை இனி சுவாசிக்க முடியாது..போராடாமல்

தோழர்களே! தோழியர்களே!!
உங்களைப்பார்த்து கேட்கிறேன்....
6 வது சம்பளக்கமிசனில் 20 சதம் தான்
ஊதிய உயர்வு என்பதை 40 சதமாக்கியது சங்கங்கள்..
ஆண்டு ஊதிய உயர்வு 3 சதமாகியது சங்கங்கள்...
GDS  களுக்கு ரூ.3500 போனஸ் உச்ச வரம்பாக்கியது சங்கங்கள்
+2  தேறிய GDS ஊழியர்களுக்கு நேரடி எழுத்தர்களாகக
வழிவகுத்தது சங்கங்கள் ,,,
மகளிர்களுக்கு CCL வாங்கி கொடுத்தது சங்கங்கள்..
MTS தோழர்களுக்கு அடிப்படை ஊதியம் 6500/-
வாங்கி கொடுத்தது சங்கங்கள்...........
சுயநலமில்லாது யாருமில்லையென்று
உங்களுக்கு தெரியுமா?
எனவே இவற்றை போல பல சலுகைகளை  பெற்றுதந்த
நாங்கள் கேட்கிறோம் உங்களை ...
உங்கள் வாழ்வில் ஒளியேற்ற போராடும்
தொழிற்சங்கத்தை உடைக்க நினைக்கும் அதிகாரவர்கத்தின்
தலையீட்டைஅனுமதிக்கலாமா?
நீ உண்ணும் அளவை எவரோ கட்டுபடுத்துவது தெரிகிறதா? இல்லையா?
உன் சிறகை ஒடித்து சிறையிலிருக்கப்போவதை
போல உணர்கிறாயா?

ஓடினேன்... பயம் எனக்கு
என ஓடினால் பறப்பதற்கு  சிறகு இருக்காது
நீங்கள் பணி செய்ய மத்திய அரசு பணிகள் இருக்காது ...
உனக்காக..எனக்காக எல்லோரும்
போராடும் எண்ணம் வளர்த்தி கொண்டிருக்கும் போது
உனக்காக நீயும் ...எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்..இனி.

போராடப் புறப்படுவோம் –இதோ
எதிர்க்கண்ட  கனவுகள் தோழர்களின் கண்ணீரிலிருந்தும் ..
விடை தேடும் உங்கள் வியர்வையிலிருந்தும்
நொடிக்கொருமுறை அலை அலையாய் எழுந்து ஆர்ப்பரிக்கட்டும் ..
அஞ்சி நடுங்கட்டும் மத்திய அரசு..

பிப்ரவரி 12-13 வேலை நிறுத்த புரட்சி வெல்லட்டும்
இன்றைய வேலை நிறுத்த முதலீடு
நாளைய இலாபத்தின் வெளிப்பாடு ...புறப்படுவோம் சிங்கமென
படைத்திடுவோம் புதிய சரித்திரம்...

போராட்ட வாழ்த்துகளுடன் ...
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று நான்கு GDS(NFPE) சேலம் மேற்கு கோட்டம் சேலம். 636005


மீண்டுமொருமுறை 12.02.2014 & 13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து ஊழியர்களும்  கலந்து கொள்ள வேண்டுகிறோம். அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கும் பலனை எண்ணி தங்கள் ஆதரவினை  அளிக்க வேண்டுகிறோம்.