Wednesday, 14 August 2013

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்


 
நமது நாடு சுதந்திரம் அடைந்து 66ஆண்டுகள் முடிந்து,67ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.  
   .நேரடி அன்னிய முதலீடு என்றபெயரில் நம்நாடு அன்னிய நாடுகளுக்கு பொருளாதார அடிமைகளாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கவேண்டியது இன்றைய அவசியம்.
  அவசரக்கடமையுமாகும்.அதே வேளை நமது நாட்டில் நமது சுதந்திர தினத்தை அச்சமின்றி கொண்டாடக்கூட முடியாத அளவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்வதும்,எல்லையில் பாகி்ஸ்தான் ராணுவ தாக்குதல்களும் கவலை அளிப்பதாக உள்ளது.
  சுதந்திரம் என்பதின் உண்மையான அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டு மக்கள் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும்,அச்சமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே சுதந்திர திருநாளின் சபதம் என ஏற்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவோம்.
  சாதி.சமய மொழி பேதங்களை மறந்து நாட்டின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து இச்சுதந்திர தினநாளை கொண்டாடுவோம் 
என 
வாழ்த்தும்
சி.சஞ்சீவி, மண்டல செயலாளர் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்  அஞ்சல் மூன்று
கோவை மேற்கு மண்டலம்
 
 
1947 இந்திய சுதந்திர தின புகைப்படங்கள் 



















 
 
தேசியக் கொடி - சில தகவல்கள்

தேசியக் கொடியைக் காலை நேரங்களில் ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கப்பட வேண்டும். கொடியை இறக்கும்போது நிதானித்து மெதுவாக இறக்கவேண்டும். கொடி தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ தவறு. ஆனால் முறைப்படி அறிவிக்கப்பட்ட இரவுகளில் உதாரணமாக சுதந்திர தின பொன்விழா, வெள்ளிவிழாவில் பறக்க விட அனுமதி உண்டு.

தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும்போது முதல் வரிசையில் வலதுபுறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வேறு கொடிகள் முன்வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும்.


                                                   செய்யக் கூடாதவை:

சாயம் போன தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.
முக்கியஸ்தர்களுக்கு மரியாதை அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்கூடாது.
தேசியக் கொடியை அலங்கார பொருளாக மேடையிலோ. மேஜை மீதோ விரிக்கப்படக் கூடாது.

கொடியேற்ற விழா முடிகையில் ‘ஜனகன மன’ தேசிய கீதத்தைப் பாடத் தவறக் கூடாது.
தேசிய கீதம் பாடப்படும்போது கூடியுள்ளோர் பணிவுடன் அசையாது நிற்கத் தவறக்கூடாது.