SOUTHERN REGION TU STUDY CAMP AND DIVL./BR. SECS. MEETING , A GRAND SUCCESS
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
தென் மண்டல தொழிற்சங்க பயிலரங்கு
கடந்த 09.08.2013 அன்று மதுரை மேல மாசி வீதியில் அமைந்துள்ள ஜெய விலாஸ் கம்மா பவனம்
என்ற அரங்கில் தென் மண்டல தொழிற்சங்க பயிலரங்கும் 10.08.13 அன்று அதே இடத்தில் தென் மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் சிறப்பாக
நடைபெற்றது.
தொழிற் சங்கப் பயிலரங்கு நிகழ்ச்சிக்கு முன்னாள் மண்டலச் செயலர்
தோழர். K . நாராயணன் அவர்கள்
தலைமை வகித்து சிறப்பாக நடத்திய விதம் பாராட்டுக் குரியது . மாநில அமைப்புச் செயலர் தோழர். V . ஜோதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் .
காலை சுமார் 11.00 மணியளவில் வகுப்புகள் துவங்கின. "அஞ்சல் தொழிற் சங்க வரலாறும் இன்றைய தொழிற் சங்க கடமையும்" என்ற
தலைப்பில் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள் சிறப்பானதொரு தொழிற் சங்க வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய வகுப்பினை எடுத்தார். இன்றைய கால கட்டத்தில் நமது பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதனையும் சிறப்பாக விளக்கினார்.
அடுத்து " தகவல் அறியும் உரிமை சட்டமும் CONTRIBUTORY
NEGLIGENCE விதிகளும் "
என்ற தலைப்பில் அஞ்சல் மூன்றின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் தோழர் S . சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்பான விளக்கங்களுடனும் நடைமுறை
உதாரணங்களுடனும் எடுத்த வகுப்பு அனைவரையும் கவர்ந்தது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு " அஞ்சல் துறையின்
எதிர்காலமும் , எதிர் கொள்ள
வேண்டிய சவால்களும் , நமது கடமையும் " என்ற தலைப்பின் அஞ்சல் மூன்றின் மாநிலச்
செயலர் தோழர். J .R . அவர்கள் புதிய
பிரச்சினைகளான CHANGE MANAGEMENT , POST BANK ,
I.T. MODERNIZATION PROJECT 2012, NATIONAL POSTAL POLICY
2012, POSTAL DEVELOPMENT AUTHORITY OF INDIA அமைப்பு, CORE BANKING, RURAL ICT , தனியார் SOFTWARE COMPANY களான INFOSYS , SIFY, TCS , RELIANCE , M/S SAI உள்ளிட்ட கம்பெனிகளின் அஞ்சல் துறை மீதான படையெடுப்பு , இதன் விளைவான தாக்கங்கள் ,அவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டிய விதம் , நம் தொழிற் சங்கங்களின் கடமை குறித்து விரிவாக விளக்கி தனது வகுப்பினை அளித்தார் . இது வந்திருந்த அனைத்து தோழர்/
தோழியர்களையும் புதிய சிந்தனைக்கு அழைத்துச் சென்றது .
அடுத்து "ஊழியர் பாதுகாப்பு விதிகள், நடத்தை விதிகள் , இலாக்கா நடைமுறைகள் , ஊழியர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் முறைகள் " உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இலாக்கா நிலைமைகள் குறித்தும் விரிவாகவும்
விளக்கமாகவும் தனக்கே உரிய சிறப்பான விதத்தில் நம்முடைய அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலரும் JCM (DC
) STAFF SIDE LEADER உம் ஆகிய தோழர் KVS அவர்கள் அளித்த வகுப்பு அனைவராலும் பெரிதும் ஈர்க்கப்பட்டது. தொடர்ந்து அவரே ஒரு மணி நேரத்திற்கு வந்திருந்த சார்பாளர் தோழர்களுடன் கலந்துரையாடியதுடன் அல்லாமல் கேள்வி - பதில் விவாத அரங்கினையும் சிறப்பாக
நடத்தினார். அனைத்து விதமான கேள்விகளுக்கும் இலாக்கா
விதிகளுடன் சிறப்பாக பதிலினை அளித்தார்.
கூடவே வந்திருந்த DELEGATE களுக்கு STUDY MATERIAL ஆக 40 பக்கங்களுக்கு ஒரு சிறப்பான கை ஏடு மாநிலச் சங்கத்தால் அளிக்கப் பட்டது. இது மிகவும் பயனுள்ள வகையில்
அமைந்திருந்ததாக சார்பாளர்கள்
பாராட்டினர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் திண்டுக்கல் அஞ்சல் மூன்று
சார்பில் ஒரு SHOULDER BAG நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. இறுதியில், நிகழ்ச்சியின் தன்மை குறித்து அறிய FEED
BACK படிவம்
அனைவருக்கும் அளித்து பதில் பெறப்பட்டது. பெரும்பகுதி தோழர்கள் , இது போன்ற வகுப்புகள் இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம் என்றும் , இனி ஒவ்வொரு கோட்டத்திலும் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தக்
கூடிய வகுப்புகள் அவசியம் நடத்தப் பட வேண்டும் என்று
வேண்டுகோள் FEED BACK படிவத்தில் வைத்திருந்தனர்.
கிட்டத்தட்ட 84 DELEGATE கலந்து கொண்டனர் . மதுரை கோட்டத்தில் இருந்து கலந்து கொண்டவர்களையும்
சேர்த்து 100 ஊழியர்களுக்கு மேல் வருகைப் பதிவு சிறப்பினை சேர்த்தது. கலந்து கொண்டவர்களில் 28 பேர் 2 லிருந்து 5 ஆண்டு சேவைக்குள் உள்ள இளைஞர்கள் . 3 மகளிர் தோழியர்கள் கலந்து கொண்டனர். 17 கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, August 13, 2013
V.C.Premlatha