Thursday, 31 May 2012

 

தொழிற் சங்கத்திற்கு இலக்கணமாய் திகழும் நம் பொது செயலரும்  JCM (DC) ஊழியர் தரப்பு தலைவரும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன துணை தலைவருமான அறிவு ஜீவி தோழர் K V S  அவர்களுக்கு 
சேலம் மேற்கு கோட்டம்  வழங்கும் பணி நிறைவு பாராட்டு

1973--- அஞ்சல் எழுத்தர் 
1979--- கிளைச் சங்க செயலர் 
1987---  கிளைச் சங்க தலைவர்
1993---- மாநில சங்க பொறுப்புகள் 
2003----தமிழ் மாநில சங்க செயலர்
2007----முதல் அகில இந்திய பொது செயலர்

எம்முடன் பணியாற்றிய  எங்களில் ஒருவர் -தொழிற்சங்க 
பாடம் சொல்லி ஊழியர் மனதில் தொழிற்சங்கம  விதைத்தவர்
இன்று எம்மை பிரிந்திட நேரும் - உன் பணி 
நிறைவாலே வந்தது இந்நேரம் 

பணிகள் செய்ய சளைத்தாய் இல்லை 
இன்னமும் நீ களைத்தாய் இல்லை 
பாரில் சங்கம் வளர்த்தோர் உண்டு - நீ  எம்
அஞ்சலகத்தில் சங்கம் வளர்த்த அம்மை - இது மெய் 

வள்ளுவனும் பாரதியும் சொன்ன சொல்லை 
உன் போல் செய்ய எவரும் இல்லை 
சங்கத்தில் ஆற்றும் பணிகள் செய்யப்
பயின்றோமே நாங்கள் உன்னை பார்த்து 

கடலின் ஆழம் அமைதியை போல் -உன்
கருத்தின் ஆழம் அமைதியாய் இருப்பாய்
மௌனமாய் இருந்து பணிகள் செய்வாய் 
புன்னகையால் எம்மை புரிய வைப்பாய் 

வாய் திறந்தாலோ வீர முழக்கம் 
மகிழ்வுடன் நிறையும்  கேட்பவர் உள்ளம 
சங்கத்திற்கு நீ சிறப்பு செய்தாய் -அந்த 
சங்கத்தாலே நீ சிறப்பும் பெற்றாய்

மூன்று ஆண்டுகள் பணி புரிந்தாலும்
முணுமுணுப்புடன் பணி செய்பவர் உண்டு 
முப்பதொன்பதுமுடிந்த பின்னும் 
முகந்தனில் மலர்ச்சி மறைய வில்லை

தந்தையை பிரிந்தால் அது கரு 
நிஜத்தை பிரிந்தால் அது நிழல் 
மண்ணில் விதைத்தால்  அது வீரம் 
இரவை பிரிந்த பொழுது தான் காலை 
இமைகள் பிரிந்தால் தான் பார்வை 
உழைத்து களைத்தால் தான் வேர்வை 

நாங்கள்  வேண்டுவதோ என்றும் உங்கள் உறவை 

உங்களில்  சிறியவர் நாங்கள் எனினும் 
வாழ்த்துகிறோம் உங்களை நன்னலம் பெறவே 
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு 

என

அகில  இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் - அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்