நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப்போகிறது. Reserve Bank அனுமதி பெற்று அது" போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா " என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது .
வங்கி சேவை எட்டியுள்ள எண்ணிக்கை மக்கள் எண்ணிக்கை 50 சதவீததுக்குள் நீடிக்கிறது. ஏனெனில் வங்கிகள் வர்த்தக நோக்கில் மாநகரம் ,நகரங்களில் மட்டுமே கிளை அமைத்து கவனம் செலுத்துகிறது. இதனால் பின் தங்கிய கிராம மக்களுக்கு இன்னும் வங்கி சேவை எட்டவில்லை.
இந்த நிலையில் கிராமங்களில் அதிகம் ஊடுருவியுள்ள தபால் நிலையங்களில் வங்கி சேவையை அறிமுகம் செய்ய அஞ்சல துறை திட்டமிட்டது. அதற்கான வழிமுறைகளை பற்றி தபால் துறை சார்பில் நாடு முழுவதும் முதல் கட்ட ஆய் வு நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே அஞ்சல் சேவையுடன் சேமிப்பு கணக்கு ,மாத சேமிப்பு,பி பி எப் ,கிசான் விகாஸ் பத்திரம் என வங்கி சேவைகளை தபால் துறை அளித்து வருகிறது. அத்துடன் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பொருட்கள் விற்பனை , இன்சூரன்ஸ் ஏஜென்சி என களமிறங்கியுள்ளது.
எனவே வங்கிகளை போல முழுமையான வங்கி சேவைகளை தபால் துறை தொடங்கினால் நாடு முழுவதும் மக்கள் வங்கி நடவடிக்கைகளை எளிதில் பெறமுடியும் என்பதால் அனுமதி அளிக்க ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி துறையும் ஆர்வம தெரிவித்தன. இதற்கான முறையான அனுமதி அனுமதியை மத்திய அமைச்சரவை ரிசர்வ் வங்கியிடம் பெற விருப்பம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது . அதற்கு அனுமதி கிடைத்ததும்
" போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா " (பி.பி.ஐ. என்ற பெயரில் வங்கி சேவையில் தபால் துறை இறங்கும். இதற்கான சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்ய தபால் துறை 24.05.2012 கடைசி தேதியாகவும் 25.05.2012 அன்று நிறுவனத்தை முடிவு செய்யவும் உள்ளது .
செய்தி- தினகரன் நாளிதழ் நாள் 03.05.201
Friday, May 04, 2012
V.C.Premlatha