அனைத்திந்திய அஞ்சல்ஊழியர் மற்றும்
PSD,RMS,MMS ஊழியர் சங்கங்கள்
PSD,RMS,MMS ஊழியர் சங்கங்கள்
கூட்டு நடவடிக்கைக் குழு
கோவை மண்டலம்
பெருந்திரள் மனு அளிப்பு போராட்டம்
28 .03.2014 வெள்ளிகிழமை மாலை 05.00
மணி யளவில் மண்டல அலுவலகம் .
RS Puram கோவையில் தொடங்கியது.
1. நிர்வாக தேவைக்காக கோவை கோட்டத்தில் இருந்து
எடுக்கப்பட்டு காலக்கெடு இன்றி 10 முதல் 12 ஆண்டுகளாக
பணியாற்றுவோரை ...உடனடியாக விடுவித்து
கோவை
கோட்டத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டியும்
2. Target என்ற பெயரில் RPLI / Savings Account /Training Torture ரில்
இருந்து இந்த மண்டலத்தை மீட்கவும் ..
3. ஆட்கள் பற்றாக்குறையை உடனே தீர்க்க வேண்டியும் ...
மாபெரும் போராட்டம்
தொடங்கியது.
2. Target என்ற பெயரில் RPLI / Savings Account /Training Torture ரில்
இருந்து இந்த மண்டலத்தை மீட்கவும் ..
3. ஆட்கள் பற்றாக்குறையை உடனே தீர்க்க வேண்டியும் ...
மாபெரும் போராட்டம்
தொடங்கியது.
கோவை
கோட்டம் மற்றும் கோவை மண்டலத்தில் உள்ள திருப்பூர்
,பொள்ளாச்சி, ஈரோடு,சேலம்
மேற்கு கோட்டம் பகுதிகளில்
இருந்து P3,P4 மற்றும் GDS தோழர்கள் /தோழியர்கள் ஏறக்குறைய 400
க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
முதலில்
நமது கோரிக்கை மனுவை அளிக்க
J C A
சார்பாக NFPE P3 மண்டல
செயலர் தோழர். சி.சஞ்சீவி , NFPE P4 மண்டல செயலர்
தோழர்.பழனிசாமி ,NFPE P3 மாநில உதவி தலைவரும் கோவை
கோட்ட
செயலருமான தோழர். எபினேசர் காந்தி ,NFPE P3 மாநில
அமைப்பு செயலரும் திருப்பூர்
கோட்ட P3 செயலருமான தோழர்
. ராஜேந்திரன்,NFPE P4 கோவை கோட்ட தலைவர் தோழர்.மகேந்திரன்
,NFPE P3 ஈரோடு கோட்ட செயலர் தோழர். சுவாமிநாதன், NFPE P3
பொள்ளாச்சி கோட்ட செயலாளர் தோழர் .அய்யாசாமி NFPE P4
கோவை கோட்ட செயலர் தோழர். ஸ்ரீதர் , , NFPE P4 பொள்ளாச்சி
கோட்ட செயலாளர் தோழர்KRISHNASAMY, FNPO P3 கோவை கோட்ட
செயலர் தோழர்.சுப்பராஜ்
, FNPO P3 பொள்ளாச்சி கோட்ட செயலர்
தோழர்.மோகன்ராஜ் ,NFPE R3
கோவை கோட்ட செயலர் தோழர்
K.V.ராஜேந்திரன் ஆகியோருடன் NFPE சம்மேளன முன்னால்
தலைவர் தோழர்
கருணாநிதி அவர்களும் நமது மண்டல இயக்குனர்
(பொறுப்பு) அவர்களை சந்தித்து மனு
கொடுக்க காத்திருந்தோம்.
ஆனால் நமது மண்டல இயக்குனர் அவர்கள் மண்டல அலுவலக
தோழரின் பணி ஓய்வு விழாவில் கலந்து
கொள்வதால் சற்று
நேரமாகும் என்பதை அலுவலகம் மூலம் தெரிவித்தார். எனவே
நமது நிகழ்ச்சி நிரல் படி பெருந்திரள் மனு
அளிப்பு போராட்டம்
தொடங்கியது. நமது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை
கோஷமாக தோழர்
தோழியர்கள் வெளிப்படுத்தினர். பின்னர் JCA
குழுவினர் மீண்டும் மண்டல இயக்குனர்
(பொறுப்பு) அவர்களை
சந்தித்து மனு கொடுக்க சென்ற போது நம்மை சந்திக்க
மறுத்துவிட்டார்.APMG(STAFF)
அவர்களும் நம்முடைய
கோரிக்கை
மனுவை வாங்க மறுத்து விட்டார். தொடர்ந்து நாம் முயற்சித்தும்
மனுவை பெறவும் ,JCA வை சந்திக்க மறுத்ததனால் குழுமியிருந்த
அனைத்து
தோழர்களும் முக்கியமாக தோழியர்களும் மிக
ஆவேசமடைந்து மண்டல அலுவலகம் முன் அமர்ந்து விட்டனர்.
P3 மாநில செயலர் தோழர் J.R. மற்றும் NFPE அகில இந்திய
துணை பொது செயலர் தோழர்
N.S. அவர்களிடம்
நிலைமையை எடுத்து சொன்னதின் பேரில் நமது NFPE P3 யின்
மாநில செயலர் J R அவர்கள் நமது மண்டல PMG(பொறுப்பு)
அவர்களுடனும் ,மண்டல இயக்குனர் அவர்களுடனும்
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு பேசியதன் விளைவாக இரவு
8.50 மணியளவில் நமது கோரிக்கை மனுவை மண்டல்
அலுவலகத்தில் பெற்றுகொண்டதுடன் நமது கோரிக்கைகளை PMG
அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடன் நடவடிக்கை
எடுப்பதாகவும் உறுதி
கூறியதால் நன்றி கூறி புறப்பட்டோம்.
நமது போராட்டம் முடிவுக்கு வர முயற்சித்த நமது மண்டல
APMG(STAFF) மற்றும் மண்டல அலுவலக உதவி
கண்காணிப்பாளர
அனைவருக்கும் நமது JCA சார்பில் நன்றிகள் பல.
முக்கியமாக நமது போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வர PMG
மற்றும் DPS ஆகியோரிடம் தொடர்ந்த பேசிய நமது NFPE PE மாநில
செயலர் தோழர் J R அவர்களுக்கு நன்றிகள் பல
இரவு 9.00 மணி ஆகியும் தோழியர்கள் கலந்து
செல்லாமல்
இருந்தது நமது கோரிக்கையின் பால் உள்ள நியாமும், நமது தோழர்
தோழியர்கள்
அடைந்திருக்கும் துயரமும் தான் காரணம் என்பது
தெள்ள தெளிவாகியது. போராட்டத்தின் வெற்றியை இறுதிவரை
இரவு வரை
தொடர்ந்து இருந்து கலந்துகொண்ட
தோழியர்களுக்கு
சமர்ப்பணம் செய்கின்றோம்.
" தங்கம் செய்யாததை
சங்கம் செய்யும் "
போராட்டங்கள்
இல்லாமல் யாராட்டமும் செல்லாது.
ஒன்று
பட்ட போராட்டம் ஒன்றே தான்
தொழிலாளி
வாழ்வில் துயரோட்டும்
என்ற நமது தொழிலாளர் வர்க்க கோசங்கள்
நேற்று நடந்த நிகழ்ச்சி
மூலம் தெளிவு படுத்தியுள்ளது.
நெஞ்சம்
நிறைந்த வீர வாழ்த்துகளுடன்
அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று
Coimbatore Region

Saturday, March 29, 2014
V.C.Premlatha



























