Thursday, 27 June 2013

கோவை மண்டல அஞ்சல் இயக்குனருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு

நமது தமிழ் மாநிலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு  மேற்கு மண்டலத்தில் உள்ள மாநில நிர்வாகிகள் 
தோழர். D.எபினேசர் காந்தி மாநில உதவி தலைவர்,
மேற்கு மண்டல செயலரும் மாநில உதவி செயலரும் ஆன தோழர் C.சஞ்சீவி ,
மாநில அமைப்பு செயலாளர் தோழர் .ராஜேந்திரன் மற்றும் 
NFPE யின் முன்னாள் செயல் தலைவர் தோழர் சந்திரசேகரன் ஆகியோர்   நமது கோவை மண்டல இயக்குனர் உயர்திரு . V.S.ஜெய்சங்கர் IPS அவர்களை மரியாதை நிமித்தமாக 26.06.2013 அன்று சந்தித்தனர். பல வணிகங்களில் முதலிடம் பெற்ற நமது கோவை மண்டலத்தின் இயக்குனாராக பதவி ஏற்றதிற்கு நமது சங்கம் அளித்த வாழ்த்துக்களையும் , மரியாதையையும்   இனிய முகத்துடன் கோவை மண்டல இயக்குனர் ஏற்றுக்கொண்டார்.