Saturday, 1 June 2013

அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு

நமது அஞ்சல்  மூன்றின்  36 வது தமிழ் மாநில மாநாடு  வருகிற 
சூன் 5,6 மற்றும் 7- 2013  நாட்களில் கும்பகோணம் காந்தி நகர், செங்காங்கண்ணி  ரோட்டில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கரா மஹாலில்  நடைபெற உள்ளது.  அகில இந்திய தலைவர்களும், அமைச்சர் பெருமக்களும்,அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற /சட்டமன்ற உறுப்பினர்களும் ,தலைவர்களும்,கல்வி மற்றும் தொழில் அதிபர்களும் ,உள்ளூர் பிரமுகர்களும்,கலந்துகொள்ளும் தொழிலாளர் நலன் குறித்த  பல  அருமையான   நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மிகப்பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் தமிழ் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள சேலம் மேற்கு கோட்ட  அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு,மற்றும் GDS (NFPE)  தோழர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

                                            தோழமையுடன் ,

                  சி.சஞ்சீவி, கோட்ட செயலாளர் , அஞ்சல் மூன்று 
                                   சேலம் மேற்கு கோட்டம்