Saturday, 23 February 2013

நன்றி! நன்றி !! நன்றி !!!

நடந்து முடிந்த 20 மற்றும் 21.02.2013  பொது வேலை நிறுத்தத்திற்கு  நம்முடைய  கோட்ட மாநாட்டின் வேலையினால் நேரில் வந்து அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும்  பல சதி/ துரோகத்தனங்களையும் மீறி சங்கத்தின்  தொலைபேசி அழைப்பை மதித்து 21.02.2013 அன்று  P3 உறுப்பினர்கள் 65  சதம்  P4 உறுப்பினர்கள்  70 சதம் GDS உறுப்பினர்கள் 25 சதம்  நமது கோட்டத்தில் இருந்து  கலந்து கொண்டனர் என்பது பாராட்டபடவேண்டிய ஒன்று.  கோட்ட மாநாடு முடிந்த ஒரு சில தினங்களில் நடந்த வேலை நிறுத்தம் என்பதால்  குறுகிய காலத்தில் சரியான முறையில்  உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்க முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறோம்.  வேலை நிறுத்த தகவல் கிடைக்காததால் சில உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தத்தையும் தெரிவித்தனர்.   அடுத்த வேலை நிறுத்த போராட்டத்தினை வெற்றிகரமாகக இப்பொழுதே சூளுரை எடுப்போமே .

                                               போராட்ட வாழ்த்துக்களுடன் .
              சி.சஞ்சீவி ,கோட்ட செயலாளர் ,P3, சேலம் மேற்கு கோட்டம்