கருத்தரங்கம்
,திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் 18.12.2011 ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருப்பூர் கோட்ட சங்கம் மற்றும் மேட்டுபாளையம் கிளைச் சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
,திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் 18.12.2011 ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருப்பூர் கோட்ட சங்கம் மற்றும் மேட்டுபாளையம் கிளைச் சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
வியக்கும் வண்ணம் நடைபெற்றது.
தோழர்:N.கோபாலகிருஷ்ணன் ,செயல் தலைவர் P3 புதுதில்லி
(உலகமயமும் தொழிலாளர் வர்க்க கடமையும் )
தோழர்K.ராகவேந்திரன் முன்னாள் மாபொது செயலாளர்NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)
தோழர்: N. சுப்ரமணியன் , கோட்ட செயலர் P3 திருப்பூர்
(தமிழக அஞ்சல் மூன்று,சவால்களும்-வருங்கால கடமைகளும்)
தோழர் J ஸ்ரீ வெங்கடேஷ் , மாநில தலைவர் P3
(இளம் தோழர்களின் கடமையும் -பொறுப்பும்)
தோழர்:C.சந்திரசேகரன் செயல தலைவர் NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)
தோழர்:V,ராஜேந்திரன்முன்னாள் மாநில செயலர்
(தொழிற்சங்க ஜனநாயகம்)
தோழர்:S.கருணாநிதி Member JCM Deptl Council
(GDS ஊழியர் பிரச்சினைகள் -விடிவு தான் என்ன ?)
ஆகியோர் அவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர்.
ஈரோடு கோட்ட செயலர் தோழர். K.சுவாமிநாதன் அவர்கள் தான் எழுதி தீக்கதிர் பத்திரிககயில் வெளியான “கடையடைப்போம்” என்ற கவிதையை விநியோகித்து நடக்க இருக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அவசியம் போன்றவற்றை விளக்கினார். அந்த கவிதை இதோ ......
ஒரு கோடிப் பேருக்கு –புதிய வேலை வாய்ப்பாம் –
டமாரம் அடிக்கிறார்கள்.
இன்று இருக்கின்ற நான்கு கோடி பேரின்
கதி என்னவாகும் –என்பதைச் சொல்லாமல்
மூடி மறைக்கிறார்கள்.
51 சதவிகிதத்தில்- 50 சதவிகித முதலீடு
கிராமங்களில் தானாம்.
கிராமங்கள் வளருமாம்.
உள்நாட்டு சுராக்களையே –கட்டுப்படுத்த முடியாத போது
வெளிநாட்டுத் திமிங்கலங்களின் –சதவிகித கணக்கையெல்லாம்
கட்டாயப்படுத்த முடியாதென்பதை
மூடி மறைக்கிறார்கள்.
நேரடிக் கொள்முதலில்
இந்திய நிறுவனங்கலாம் !
விவசாய விலை பொருட்களுக்கு
விலை உயருமாம் இதனால் !
கொள்முதல் உரிமையை
தான் கைகழுவிய பின்னர்
தரமில்லைஎனச் சொல்லி
உழவர்களின் வயிற்றிலடிப்பான்
அந்நியன் என்பதை சொல்லாமல்
மூடி மறைக்கிறார்கள்.
காலனியாதிக்கத்தின் -கொடூர நிகழ்வுகள்
மறந்திருக்கும் இந்நேரம்
எமாற்றி விடலாமென்று மனப்பால் குடித்து
மறு ஆலாபனை செய்கிறார்கள்
சில்லறை வணிகத்தில் அன்னியரென்று
சிலர் வாழ வாழ –பலர் வீழ வீழ
தரித்திரம் தம்மைச் சூழ்வதை-உணராமலில்லை .
இன்று ஒரு நாள் கடைகள் மூடபடட்டும்
நிரந்திரமாய் மூடுவதை தவிர்க்க........
மகளிர் அதிகான அளவில் கலந்து கொண்ட மிகச் சிறப்பான ஒரு கருத்தரங்கை நடத்திட்ட கோவை மேற்கு மண்டல செயலரும் ,திருப்பூர் கோட்ட செயலருமான தோழர்.
N.S. அவர்களுக்கு பாராட்டுகள் .
சி .சஞ்சீவி செயலர் சேலம் மேற்கு கோட்டம்
Monday, December 19, 2011
V.C.Premlatha