Friday, 23 September 2011

கொஞ்சம் யோசிங்களேன்

                                             உறவுகள் மேம்பட

நானே பெரியவன் நானே சிறந்தவன்  என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்.


எந்த விசயத்தையும் ,பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள் .

சில நேரங்களில் சில சங்கடங்களைச்  சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

நீங்கள் சொன்னதே சரி .செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் .

உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் .

மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி  நினைத்து கர்வப்படாதீர்கள்

அளவுக்கதிகமாய் ,தேவைக்கதிகமாய் ஆசைபடாதீர்கள் .

எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும் ,அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ ,இல்லையோ சொல்லிகொண்டிருக்காதீர்கள் 

கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள் .  அற்ப விசயங்களை பெரிது படுத்தாதீர்கள் .

உங்கள் கருத்துகளில் உடும்புபிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்தி கொள்ளுங்கள் .

மற்றவர்கள் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் .

மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் இனிய,இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் .
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாது போல நடந்து கொள்ளாதீர்கள் .

பேச்சிலும் நடத்தையுலும் பண்பில்லாத  வார்த்தைகளையும் ,தேவையில்லாத மிடுக்கையும்  தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள் .

அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்த பேசுங்கள்.

பிரச்னைகளையும் ஏற்படும் போது  அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்  நீங்களே பேச்சை துவங்க முன் வாருங்கள் .


நன்றி:

தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி.