காதலியுங்கள்... பெண்ணையோ ஆண்களையோ அல்ல.. உங்கள் கொள்கைகளை... உங்கள் இலட்சியங்களை.. காதலிப்பது போன்ற இனிமையான நினைப்பிலேயே கொள்களையும் நினைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவன் வெற்றி பெறுவானா அல்லது மாட்டானா எனபதைச் சோதித்துப் பார்க்கும் கருவி எது என்றால், அவன் தான் எடுத்துக்கொண்ட கொள்கையில் (aim or work) அல்லது வேலையில் அவன் கொண்டிருக்கிற கொழுந்துவிட்டு எரிகிற அவனுடைய காதல்தான்.. காதல் என்று சொல்வதைக் காட்டிலும் அதன்மீதுள்ள வெறி என்று கூட சொல்லலாம்.
வெறி நிச்சயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் வெற்றி வரும்.. வெறிக்கும் , வெற்றிக்கும் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசப்படும். கவனித்துப் பாருங்கள்..!
தன்னுடைய கால்களை வேண்டாவெறுப்பாக இழுத்துச் சென்று, முக்கிக்கொண்டும், முனகிக்கொண்டும், சலித்துக்கொண்டும் தன்னுடைய கடமைகளையும், புதிய முயற்சிகளையும் செய்யும் ஒருவனை, அவனைப் படைத்த இறைவானால் கூட முன்னேற்ற முடியாது.தன் முயற்சியின்றி, உழைப்பும் இன்றி தானாகவே வெற்றி கிடைக்காதா என்று அழுகிய கொள்கையுடைய ஒருவன் தனக்கு இறைவன் அளிக்கவிருந்த மகத்தான் வெற்றிப்பாதையை அவனே அழித்துவிட்டதற்கு சமம்.
ஒருவன் தான் செய்துவரும் அல்லது கடமைகளை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே, அதனை தன்னைவிடப் பெரியதாக மதித்து கொடிக்கின்ற ஆசையுடன் யார் செய்கிறானோ அவனே வாழ்வில் வெற்றி பெறுவான் என்பதை நாம் உறுதியாக சொல்லமுடியும்.
இதுவும் என் அனுபவத்தில் கண்ட உண்மை. தீராத ஆசையும், கொள்கையில் நம்பிக்கையும், பிடிப்பும் இருந்தால் யார் ஒருவராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் வெற்றி பெறலாம்
Courtesy :Thangapalani.blogspot.com
Monday, September 19, 2011
V.C.Premlatha