நேரத்தை நிர்வகிக்கும் இரகசியம் கற்றுக்கொள்ளுங்கள்வெற்றியை அடைவதற்கு இன்னொரு முக்கியமான படி, நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வதுதான். அதாவது நமக்கு உள்ள நேரத்தை முடிந்த அளவு திட்டமிட்டு, சரியாக உபயோகப்படுத்திக் கொள்வதில்தான் வேர்கள் உள்ளன.ஆனால்,, நாம் என்ன செய்கிறோம்? நேரத்தைப் பற்றி சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. அதன் அருமையைப் பற்றி நாம் அறியவில்லை என்பதே உண்மை. உலகிலேயே அனைவருக்கும் சம்மாகவும், இலவசமாகவும் கிடைக்கும் அபூர்வமான மூலதனம் காலம், அதாவது நேரம் ஆகும். நேரத்தின் அளவு அதிகமாகும் போது அது காலம் என்று சொல்லப்படுகிறது. ஆண்,பெண், யாராக இருந்தாலும் அனைவருக்கும் கிடைப்பது 24 மணி நேரங்கள்தான். பணம் கூடும், குறையும், ஆனால் நேரம் கூடாது, குறையாது. நேரத்தை சரியானபடி பயன்படுத்திக்கொண்டால், தான் பலன் உண்டு. இல்லையேல் நேரத்தை மறபடுயும் பெற முடியாது. ஒரு தடவை சென்றால் சென்றது சென்றதுதான். அதாவது பிறந்தவுடனேயே நமது இறப்பை நோக்கிய பயணம் ஆரம்பித்து விடுகிறது. நமது மரண யாத்திரையை நோக்கி தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்அது உணர்வாகப் பெறின். என்று அற்புதமாக திருவள்ளுவர் காலத்தின் அருமையைப் பற்றிச் சொல்கிறார். இன்று ஒரு தினம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை சாதாரணநாள் (அதாவது தினம்) என்று மட்டுமே நினைக்காதீர். நமது உயிரினைப் போக்கும் காலனின் வாள் அனுதினமும் ஒரு அடி நம்மை நோக்கி வருகிறது என்பதை அறிவீராக என்று அழகாகச் சொல்கிறார். நாம் காலத்தின் அருமையைப் பற்றி அறிவதே இல்லை. ஏதோ எழுந்தோம். காலைக்கடன்களை முடித்தோம். அலுவலகம் சென்றோம். வேலையைச் செய்தோம். என்றால் அங்கு வெற்றி என்னும் கன்னி வரவே மாட்டாள். தனது தோழியான காலத்தை அலட்சியம் செய்கிறவன் அருகில் நெருங்கவே மாட்டாள். . ஆங்கில தலைப்பு: Learn the secret to managing your time ..! |
http://thangampalani.blogspot.com
Friday, September 30, 2011
V.C.Premlatha