Wednesday, 17 August 2011

நாட்டின் பெரிய வங்கியாகும் தபால் அலுவலகங்களில் வங்கி சேவை



உங்கள் ஊரில் வங்கி கிளை இல்லை என்ற கவலை இனி வேண்டாம்தபால் அலுவலகங்கள் மூலம் வங்கி சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தபால் துறை நாட்டின் பெரிய வங்கியாக உருவெடுக்கும்.நாடு முழுவதும் 1.55லட்சம் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.44 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய தபால் துறை என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. எனினும் வருமானம் இல்லாத மையங்களை மூட அரசு முடிவு செய்தது. இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தபால் நிலையங்கள் மூலம் வங்கி சேவைகளை வழங்க மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்துவிட்டால்,ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி உரிமம் பெற்று வங்கி சேவைகள் விரைவில் தொடங்கும் இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இது உருவெடுக்கும். சிறு கிராமங்களிலும் தபால் மையங்கள் செயல்படுவதால், வங்கி சேவையை அறிமுகம் செய்வதன்மூலம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைவது எளிது என மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.

நன்றி தினகரன் சென்னை நாளிதழ்