இந்திய நிர்ணய சபையில்இருந்து அருந்தொண்டு ஆற்றிய சட்ட மேதை Dr.அம்பேத்கர் அவர்களின் உண்மை பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அவரின் பெயர் திரு.பீமாராவ் ஆகும். அவருடைய ஆசிரியரின் பெயர்தான் அம்பேத்கர் ஆகும். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைசார்ந்த பீமாராவ் அவர்களை தன்னுடைய மகனைப் போல அன்போடும்,பாசத்தோடும் நடத்தினார்.தம்முடைய இல்லத்தில் உணவும் அளித்தார்.பீமாராவ் தன் கல்வியுலும்,சமுதாய நிலையிலும் முன்னேற்றம் அடைந்ததற்கு தனது ஆசிரியர் அம்பேத்கர் அவர்கள் காரணமாக cஅதற்க்கான நன்றியின் அடையாளமாக "பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்" என்று தனது பெயருடன் ஆசிரியர் பெயரையும் சேர்த்து கொண்டார். நாளடைவில் இவரது இயற்பெயர் மறைந்து அம்பேத்கர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.****
Wednesday, July 06, 2011
V.C.Premlatha