அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C
Salem West Division
***R.Sundaram***
Thursday, July 27, 2017
V.C.Premlatha
Thursday, July 27, 2017
V.C.Premlatha
Wednesday, July 26, 2017
V.C.Premlatha
தோழர் MS.சந்திரசேகரன் மதுரை P3 கோட்ட உதவி செயலாளர், தல்லாகுளம் அஞ்சலக எழுத்தர் அவர்களின் ஒரே மகன் சாலை விபத்தில் உயிர் இழந்தார். பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.
எதிர் பாராத இந்த அதிர்ச்சி தோழர் சந்திரசேகரன் குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கும்.
இந்த அதிர்ச்சியை அவரும் குடும்பத்தாரும் தாங்கிட வேண்டும்.
அத்தகைய சக்தியை இயற்கை அளிக்க வேண்டும்.
தோழர் MS.சந்திரசேகரன் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்,
Tuesday, July 25, 2017
V.C.Premlatha
விருதுநகர் கோட்டத்தில் இலாக்கா விதிகளை மீறி முறைகேடாக 16 பேருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்திரவு நிறுத்தம் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விருதுநகர் கோட்டத்தில் கடந்த வாரம் இலாக்கா விதிகளை மீறி - LSG இடங்கள் நிரப்பப் பட்டதால் அதில் பணியாற்றி வந்த எழுத்தர்களை - காலிப்பணியிடங்கள் அறிவிக்காமல், அவர்களது விருப்பம் பெறாமல் முறைகேடாக இடமாறுதல் செய்து அந்தக் கோட்டத்தின் முதுநிலைக் கண்காணிப்பாளர் உத்திரவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்கவும் முயற்சித்தார்.
இது குறித்து வி.நகர் கோட்டத்தின் மூத்த தோழர். சண்முகநாதன் அவர்களும் மதுரைக் கோட்டச் செயலர் தோழர். சுந்தரமூர்த்தி அவர்களும் மாநிலச் செயலரிடம் புகார் தெரிவித்து உடன் நடவடிக்கை கோரினர்.
மாநிலச் செயலர் திண்டுக்கல்லில் இருந்து ஞாயிறு இரவே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால், திங்களன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் PMG ஐ சந்திக்க அவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தருவதாகவும், PMG அவர்களிடமும் இது குறித்து தொலைபேசியில் பேசுவதாகவும் உத்திரவாதம் அளித்தார்.
இதனடிப்படையில் தோழர். S.S., தோழர். சண்முகநாதன் இருவரும் காலையில் மண்டல அலுவலகம் சென்றபோது PMG, DPS, AD Staff எவரும் மண்டல அலுவலகத்தில் இல்லாத சூழலில் உடன் மாநிலச் செயலரை அணுகினர்.
எனவே மாநிலச் செயலரும் உடனடியாக தூத்துக்குடி சென்றிருந்த PMG அவர்களை கைபேசியில் அழைத்து பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விளக்கி உடன் தலையிட வேண்டினார்.
அதற்கு PMG அவர்களும் உடன் இந்த உத்திரவின நிறுத்தி வைக்கச் சொல்வ தாகவும், Campல் உள்ள DPS அவர்களை திரும்பியவுடன் சந்திக்க அறிவுறுத்துவதாகவும் உறுதியளித்தார்.
இதன்படியே வி.நகர் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உடன் இடமாற்ற உத்திரவு அமலாக்கம் நிறுத்தப் பட்டது.
இதனிடையே Surprise Visit ஆக மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகம் சென்ற DPS அவர்களை தோழர். S.S. சந்தித்து இது குறித்து தெரிவிக்க , அவரும் இதில் உடன் தலையிடுவதாக உறுதியளித்தார். மேலும் மாநிலச் செயலரின் கோரிக்கையை ஏற்று , இந்தப்பிரச்னை குறித்து விவாதிக்க எதிர்வரும் புதன்கிழமை வருமாறு PMG/DPS இருவரும் பணித்துள்ளார்.
புதனன்று நிச்சயம் இந்த நிறுத்தப்பட்ட உத்திரவுகள் ரத்து செய்யப்படுவது உறுதி. மேலும் ஏற்கனவே PMG அவர்களால் உறுதியளிக்கப்பட்ட கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம் .
இந்தப்பிரச்னையில் உடன் தலையிட்ட PMG, SR மற்றும் DPS , SR ஆகியோருக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் !.
Saturday, July 22, 2017
V.C.Premlatha
TNCPCB புதிய நிர்வாக
இயக்குனர்கள் பதவியேற்பு விழா
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று (21.7.17) காலை 12.30 மணியளவில் தமிழக அஞ்சல் வட்ட கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி இனிதாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நமது NFPE
P3 யிலிருந்து புதிய இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள். எழில் ரோசலின், V.பார்த்திபன், S.பாலு (எ) பாலசுப்ரமணியன்,D. ரவி(எ) ரவியாதவ், பிரிதிவிராஜ் உள்ளிட்ட தோழர்களையும்
வங்கியின் மேலாண் இயக்குனர் தலைவர். K.சிவராமன் அவர்களையும் சேலம் மேற்கு கோட்ட NFPE வாழ்த்துகிறது.
Friday, July 21, 2017
V.C.Premlatha
Wednesday, July 19, 2017
V.C.Premlatha
தோழர். ஞானையா நினைவஞ்சலி
"""""""""""""''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தபால் தந்தி ஒருங்கிணைந்த தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE) முது பெரும் தலைவர் தோழர் D. ஞானையா அவர்கள் (97) மறைவினை ஒட்டி (8.7.17) இன்று (19.7.17) சென்னை எழும்பூர் SRMU நக்கீரன் அரங்கத்தில் NFPE தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் COC யின் தலைவர். B. பரந்தாமன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அஞ்சல் RMS தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர்.A.G. பசுபதி, RMS பகுதியின் மூத்த தலைவர். நாகை ஜெயராமன், அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர். தோழர். K. R. , அதன் மாநிலத் தலைவர் தோழர். தோழர். M.கண்ணையன், உழைக்கும் வர்க்கம் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் தோழர்.J. ரங்கநாதன், சம்மேளன உதவிப் பொதுச் செயலர். தோழர்.S.இரகுபதி, அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர். தோழர். J.இராமமூர்த்தி, அஞ்சல் நான்கின் மாநிலப் பொருளர் தோழர். வெங்கடரமணி , RMS மூன்றின் அ.இ. உதவிப் பொதுச் செயலர். தோழர். K. சங்கரன், அஞ்சல் கணக்குப் பிரிவு மாநிலச் செயலர் தோழர்.R.B. சுரேஷ், கேசுவல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தோழர். D. சிவகுருநாதன், அஞ்சல் மூன்று அகில இந்திய உதவிப் பொதுச் செயலர். தோழர். வீரமணி, அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர்.V. பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு தோழர். ஞானையா அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Monday, July 17, 2017
V.C.Premlatha