Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 11 March 2015

STRIKE NOTICE SERVED - MASS DEMONSTRATION IN FRONT OF CPMG'S OFFICE -GRAND SUCCESS !

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  
மாபெரும் வெற்றி ! 
சட்ட பூர்வமான வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !
26.03.2015 அன்று தமிழகத்தில்  தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளுக்காக 
தமிழகம் தழுவிய ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! நேற்று (10.03.2015) அன்று மதியம்  தமிழக NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு சார்பாக 9 சங்கங்கள் , CPMG  அலுவலகம் முன்பாக  நடத்திய கோரிக்கை முழக்க  ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.  கிட்டத்தட்ட 300  தோழர்கள்  கலந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். இந்த ஆர்ப்பாட்டம்  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் (R  4) தலைமையில், தோழர். J . ராமமூர்த்தி (P  3) முன்னிலையில், NFPE  அனைத்து மாநிலச் செயலர்களும்  மற்றும் அகில இந்திய சங்கங்களின்  நிர்வாகிகளும்  கலந்துகொள்ள  எழுச்சியுடன்  நடைபெற்றது.  சிறப்பு  அழைப்பாளராக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக  பொதுச் செயலர்  தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  

ஆர்ப்பாட்டம்  முடிந்த பிறகு  அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய  26.3.2015 அன்றைய தேதியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ்  CHIEF  PMG  தலைமை இடத்தில் இல்லாத காரணத்தினால்  DPS  HQ அவர்களிடம்  நேரில் வழங்கப் பட்டது. இதன் நகல்  PMG,CCR  மற்றும் PMG, MM  அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.  மேலும்  அனைத்து PMG க்களுக்கும் ,  தொழிலாளர் நல ஆணையருக்கும் முறையாக அனுப்பப் பட்டது. 

13.03.2015 அன்று திருச்சியில் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் 

கூட்டத்தின் முடிவில்,  வேலை நிறுத்தம் குறித்து அடுத்த கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ள  எதிர்வரும் 13.03.2015 அன்று  SRMU  சங்கக் கட்டிடம்  திருச்சியில் காலை 10.00 மணியளவில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்  முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு NFPE  இன்   அனைத்து  மாநிலச் சங்கங் களின்  மாநில நிர்வாகிகள் அனைவரும் , கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டது.  

அனைத்து மண்டலங்களிலும்  வேலைநிறுத்த  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடவும் ,  அதில் அனைத்து மாநிலச்  செயலர்களும்  கலந்து கொள்வதெனவும்  தீர்மானிக்கப்பட்டது.  மேலும்  தமிழகத்தின் அனைத்துக் கோட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடுவதெனவும்  அதில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள்  அடுத்த வாரத்தில் இருந்து  கலந்துகொள்ளச் செய்வ தெனவும்  தீர்மானிக்கப் பட்டது. 

எனவே  மாநிலச் சங்க நிர்வாகிகள் , வேறு  காரணம் எதுவும் கூறாமல்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களில்  கலந்துகொள்ள  தயார் நிலையில் இருக்குமாறும்  கேட்டுக் கொள்கிறோம்.  வேலை நிறுத்த  நோட்டீஸ் மற்றும்  கோரிக்கைகள் அடங்கிய  மனுவின் நகல் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களுக்கும்  தனியே  அனுப்பப்படும்.  வேலை நிறுத்த நோட்டீஸ்  மற்றும்   கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த புகைப் படங்களில் சில  கீழே  பார்க்கலாம். 













Monday, 9 March 2015

MOBILISE IN LARGE ! SERVING OF STRIKE NOTICE WITH THE CPMG, TN BY TN NFPE COC ON 10.03.2015 FOLLOWED BY LUNCH HOUR DEMONSTRATION IN FRONT OF O/O CPMG, TN


அடக்குமுறையை எதிர்த்து , 
தொழிலாளி அடிமைப்படுத்தப் படுவதை எதிர்த்து , 
தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, பணியிடத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி ,
 ஒழுங்கான கணக்கீட்டில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றக் கோரி ,

 CBS /CIS சேவைகளை சீர்படுத்தக் கோரி, 
அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS , கணக்குப் பிரிவு, 
நிர்வாகப் பிரிவு, GDS உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களின் 
தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 

 தமிழகம் தழுவிய அளவில் போர்ப் பரணி !
இது உரிமைக்கான யுத்தம் !
உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக நினைக்கும் 
சில அதிகார மையங்களுக்கு  நம் உணர்வைக் காட்டும் யுத்தம் !
_________________________________________________________________________________
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !
10.03.2015 மதியம் CHIEF PMG 
அலுவலகம் முன்பாக 
உணவு இடைவேளை ஆர்பாட்டம் !
ஆர்ப்பாட்ட முடிவில் சட்ட பூர்வமான 
வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குதல் !
_________________________________________________________________________________


தோழனே வா ! தோள் கொடுக்க வா !            வீ ரனே வா வீறு கொண்டு வா !
"கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்.
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி.
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு !
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்! "

சேலம் மேற்கு கோட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் உதவியாளர்களுக்கு பணி நியமன உத்திரவு வழங்கப்பட்டது.

 சேலம் மேற்கு கோட்டத்தில் தேர்வு செயப்பட்ட அஞ்சல் உதவியாளர்களுக்கு இன்று 09.03.2015 பணி நியமன உத்திரவு வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட  21 அஞ்சல் உதவியாளர்களில் மூவர் declaine  செய்ததால் மீதம் 18 பேர்களுக்கு கீழ்க்கண்ட அலுவலகங்களில் 10.03.2015 முதல் 23.03.2015  வரை  IN HOUSE TRAINING  காக  உத்திரவு வழங்கப்பட்டுள்ளது,

நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் மிக அற்புதமாக ஊழியர் நலனில் அக்கறை உள்ளவராக ஒவ்வொருவரின் சொந்த ஊர் என்ன என்பதை மனதில் கொண்டு அவரவர் ஊர் அருகில் இருந்தால் இன்னும் அதிகம்  ஊழியர்களிடம் வேலை எதிர்பார்க்கலாம் என்ற நல்ல நிர்வாக திறமையுடனும் IN HOUSE TRAINING  உத்திரவு கொடுத்துள்ளார்கள்.  சங்கத்தின் சார்பில் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி.  இதே அடிப்படையில் நமது கோட்ட கண்காணிப்பாளர்  அவர்கள் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ,இந்த ஆண்டில் சுழல் மாறுதலில் வருபவர்களுக்கும்  சுழல் மாறுதல் 2015 அமைத்து கொடுப்பார் என்று நம்புகிறோம்.


1.R.Anandakumar     ------ Suramangalam HO
2.A.Meenakshi         ------   Suramangalam HO
3.V.Vinoth                ------  Suramangalam HO
4.S.Vasishnavi          ------  Suramangalam HO
5.A.M.Kishore Raja ------  Suramangalam HO
6.K.Vimal                  -----  Suramangalam HO
7.A.Anish Rajan       -----   Jagir Ammapalayam
8.N.Prakash             ------   Rasipuram S.O
9.M.Tamilselvi         ------  Rasipuram S/O
10.M.Dhivya           -----     Mettur Dam S.O.
11.Ravi Kant Kumar-----   Mettur Dam S.O
12.V.P.Velmurugan     ---  Mettur Dam R.S.
13.J.Muralikrishnan   ---- Vennandur S.O.
14.M.Janaki               -----Rasipuram S.O.
15.N.Ramachandran ------Mecheri S.O.
16.G.Rathikha          ------Raman Nagar S.O.
17J.Sivakumar          ------Kolathur S.O.
                                         

 அனைவருக்கும் அகில இந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம்  அஞ்சல் மூன்று சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் வாழ்த்துக்கள் .

Sunday, 8 March 2015

Posting of Physically handicapped candidates - DOPT Order

Saturday, 7 March 2015

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சூரமங்கலம் தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சார்பில்
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் 07.03.2015 மாலை  சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  சூரமங்கலம் அஞ்சலகத் தலைவரும், மனமகிழ் மன்ற தலைவருமான திரு.சி.சஞ்சீவி அவர்கள் தலைமை தாங்கி நடத்த திரு.கருவை.சு.புகழேந்தி அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார். மகிளா கமிட்டியின் அமைப்பாளரான திருமதி. கமலமணி அவர்கள் கேக் வெட்டி விழாவினை தொடங்கினார். தொடர்ந்து அனைத்து தோழியர்களும் மகளிர்தின சிறப்பினை பற்றி பேச தோழர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை பரிமாற்ற அனைத்து தோழர்களும் தோழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்   முடிவில் மனமகிழ் மன்ற செயலர் திரு சரவணன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.