Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Thursday, 7 November 2013

CIRCLE UNION LETTER TO GENERAL SECRETARY ON SHORTAGE/NON FILLING UP OF VACANCIES/APPOINTMENT BEFORE INDUCTION TRG.

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! தற்போது CMC மூலம் நடைபெற்ற எழுத்தர் தேர்வில் ஏராளமான காலியிடங்கள்  நிரப்பப் படவில்லை .இதற்கு காரணம் , குறைந்தபட்ச மதிப்பெண் கூட  பல கோட்டங்களில்  தேர்வு எழுதியவர்கள் பெறவில்லை என்று  தெரிவிக்கப் படுகிறது . 

கிட்டத்தட்ட 5.5லட்சம் இளைஞர்கள்  தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் போது, தேர்வில்  குறைந்த பட்ச காலி யிடங்களுக்குக் கூட  ஒருவரும் தேர்வாகவில்லை என்பது  கேலிக்குரிய  விஷயமாகும்.  

இதற்கு முன்னர் நமது இலாக்காவே தேர்வு நடத்தும்போது நேரடி தேர்வுகளில்  அனைத்து காலியிடங்களும் நிரப்பப் பட்டே வந்தன 
என்பது உண்மையாகும் .

மேலும் 2011 மற்றும் 2012 க்கான நேரடி எழுத்தர் தேர்வுகளின் முடிவுகள் இப்போதுதான்  வெளியிடப் பட்டுள்ளன.  இத்தனை காலதாமதத்தினால் , காலியிடங்கள் நிரப்பப் படாமல் ஊழியர்கள் ஆட்பற்றாக்குறையில் சொல்லொணாத்  துயரத்தை அனுபவித்து வருவது கண்கூடு .

எனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம்  நமது அகில இந்திய பொதுச் செயலருக்கு  ஒரு விளக்கமான கடிதத்தினை நாம் கோரிக்கையாக அளித்துள்ளோம்.  

1) முதலில்  தேர்வு நடத்திட இனி CMC  நிறுவனத்திற்கு  ஒப்பந்தம் அளித்திடக் கூடாது .அப்படி 2013 க்கான  ஒப்பந்தம் அளிக்கப் பட்டிருந்தாலும் கூட அது உடன் ரத்து செய்யப் பட வேண்டும்.

2)  இனி நேரடி எழுத்தர் தேர்வுகளை STAFF  SELECTION  COMMISSION  இடம்  நடத்திட ஒப்படைக்கலாம்.அல்லது  நமது இலாக்காவே முன்பு 
போல நடத்திடலாம் .

3) முக்கியமாக  தற்போது தேர்வு பெற்றவர்களுக்கு  இன்னும்  CERTIFICATE  VERIFICATION , POLICE  VERIFICATION , MEDICAL  FITNESS  போன்ற FORMALITIES  முடிக்கப் படவேண்டும் . அதன் பிறகு PTC  இல் SEAT  ALLOTMENT  பெற்று  பயிற்சி  முடிக்க வேண்டும். அதன் பின்னரே பணி  நியமனம் செய்ய முடியும். 

மாறாக , ஆட்பற்றாக்குறையை கணக்கில் கொண்டு ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு  RECRUITMENT  இல் செய்தது போல  அவர்களுக்கு உடனடி நியமனம் செய்திட இலாக்கா உத்திரவு பெற கோரியுள்ளோம். அப்போதுதான் தற்போது தேர்வு பெற்றவர்களும் கூட வேறு பணிக்கு செல்லாமல் நமது இலாகாவிலேயே  பணியில்  அமர்வார்கள் . நமக்கும்  ஆட்பற்றாக்குறை பிரச்சினை ஓரளவுக்குத் தீரும் . 

4) மேலும் நமது ஆட்பற்றாகுறைப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண  LSG  பதவிகளை முந்தைய SENIORITY  LIST அடிப்படையில் நிரப்புதல் , LR  காலியிடங்களை நிரப்புதல் , தற்போதைய காலியிடங்களுக்கு  விருப்பமுள்ள - தகுதியான  தபால்காரர் /GDS / வெளியாட்களை  அமர்த்த வேண்டியும்   இலாக்கா மட்டத்தில் பேசிட வேண்டி  கோரியுள்ளோம்.

5) காத்திருப்பு பட்டியலில்  தற்போது  பலர் இருப்பதாக  தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படி இருப்பின் அவர்களை மீதமுள்ள காலியிடங்களில் நிரப்பிடவும் தற்போது தனியே கோரியுள்ளோம். 

இது குறித்த  மாநிலச் சங்கத்தின் கடித  நகலை கீழே பார்க்கவும் -


Tuesday, 5 November 2013

வாழ்த்துக்கள்

                                                               
தமிழ்நாடு  வட்டத்தில் இன்று Postal Assistant  பதவிக்காக  தேர்வு  செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.  சேலம் மேற்கு கோட்டத்தில் கீழ் கண்ட தோழர்/தோழியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர் 
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்  சேலம் மேற்கு கோட்டத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !  
 
C        CHANDRASEKARAN   P                            
2            PRAKASHRAJ K                                                      
3           NARMADHAA S                                                  
4            DENCY S                                                         
5           GUBENDRAN G                 

                                                                     அன்புடன் வரவேற்கும் 
                அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று 
                                                          சேலம் மேற்கு கோட்டம்







                                                                                                      
                                                                                                                  
1        

                                                                                                                                               
1  2

Results of Direct Recruitment - PA/SA (April/Aug-2013) declared in Tamilnadu Circle-


அன்புத் தோழர்களே !  இளைய தோழர்கள்  இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த  எழுத்தர்  தேர்வின் முடிவுகள் தமிழக அஞ்சல் வட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது . கீழே காணும்    இணைப்பை ' கிளிக் " செய்து  தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.-

CLICK HERE FOR THE RESULTS

புதிதாக  இந்த இலாக்காவில் இணைய உள்ள  இளைய உள்ளங்களுக்கு , எங்கள் இளைய தோழர் மற்றும் தோழியர்களுக்கு  எதிர்காலம் இனிதாக அமைய  NFPE  அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு  தமிழ் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் ! 

உங்கள் எதிர்காலத்திற்கு , உங்கள் உரிமைகளுக்கு , உங்களுக்காக நீங்களே எங்களுடன் இணைந்து குரல் கொடுத்திட  நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU   GROUP 'C'  சங்கம் !

என் அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே !
புதிய தோழர்களை  நீங்கள் அரவணைத்து  நமது சங்கத்தின் 
தியாகங்களை / வெற்றிகளை எடுத்துச் சொல்லி  நம்முடன் 
இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்திடுங்கள் !
பணியில் சேர அவர்கள் வரும்  நாட்களில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து  உதவிடுங்கள் ! 
அவர்களின்  தேவைகளை அறிந்து  உதவிக் கரம் 
நீட்டிடுங்கள் !

 இளைய தோழர்களான உங்களை 
 நாங்கள் வருக வருக என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் !

அன்புடன் 

J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று 
தமிழ் மாநிலம்.
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle

வருந்துகிறோம்



நமது N F P E சங்கத்தின் முன்னாள்  உறுப்பினரும் ,நமது HEAD QUARTERS  உதவி கோட்ட கண்காணிப்பாளருமான திரு.வாசுதேவன் அவர்களின் தாயார் திருமதி . சாரதாம்பாள் அவர்கள்  இன்று ௦05.11.2013 இயற்க்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

               -----N F P E ,Gr-C ,Salem West.-----

வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த GDS TO POSTMAN தேர்வில் நமது கோட்டத்தில் இருந்து தோழர் திரு.R.சரவணன் GDS MD, மோகன் நகர் , மற்றும் திரு.R.கலைஅரசன் ,GDSMC, பாலமலை BO A/W கொளத்தூர்  ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .  தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு N F P E சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்  

தோழமையுடன் ,


NFPE அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE), 
                   சேலம் மேற்கு கோட்டம்.

GOVT. REJECTED ENHANCEMENT OF FIXED MEDICAL ALLOWANCE TO PENSIONERS



STUDY CAMP AND BI- MONTHLY MEETINGS OF CENTRAL, SOUTHERN, WESTERN REGIONS

அன்புத் தோழர்களே ! வணக்கம் !


 மத்திய மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் 


எதிர் வரும் 09.11.2013 அன்று  மத்திய மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டம்  பெரம்பலூரில்  நடைபெற உள்ளது .இது குறித்து ஏற்கனவே அறிவிப்பும் , தற்போது மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும் அனைவருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  எனவே  மத்திய மண்டலத்தில் உள்ள  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொண்டு அவரவர் பகுதிப் பிரச்சினைகளை மாநிலச் சங்கத்திடம் அளிக்கவும். 


மத்திய மண்டல தொழிற்சங்க  பயிலரங்கு 


எதிர்வரும் 10.11.2013 அன்று மத்திய மண்டலத்தில் தொழிற்சங்க பயிலரங்கு  பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பும் அதற்கான மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும்  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  எனவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் சங்க முன்னோடிகளையும் இளைஞர்களையும்  கலந்து கொண்டு பயன் பெறச் செய்திட வேண்டுகிறோம்.  இலாக்கா விதிகள் குறித்தும் , தொழிற்சங்க வரலாறு , குறித்தும், இலாகாவின் எதிர்காலம் குறித்தும் வகுப்புகள் எடுக்கப் படவுள்ளதால் , அஞ்சல் நான்கின் செயலர்களும், நிர்வாகிகளும் , GDS சங்க செயலர்களும் கூட இந்த பயிலரங்கிற்கு  நமது அஞ்சல் மூன்று செயலர்கள் அழைத்து வரலாம் . அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி பட்டறையாக  நிச்சயம் அமையும் என்பது திண்ணம் .


மத்திய மண்டலPMG  உடன்  இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 


மத்திய மண்டலத்தின்  BI-MONTHLY MEETING  எதிர் வரும் 18.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள  கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 08.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் .


தென் மண்டல PMG உடன் இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 


தென் மண்டலத்தின்  BI-MONTHLY MEETING எதிர்வரும் 20.11.2013 அன்று  நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது . தென் மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 10.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் . 


மேலும் நாம் ஏற்கனவே தென் மண்டல அதிகாரிக்கு அளித்திட்ட MEMORANDUM  குறித்து பதில் நமக்கு அனுப்பப் பட்டுள்ளது . அதன் நகல் , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  தற்போது அனுப்பப்படுகிறது. அதன் மீது  தங்கள் கருத்துக்களை தெரிவித்திட , விவாதித்திட , அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்திட , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களின் கூட்டத்தினை  எதிர்வரும் 19.11.2013 அன்று மாலை 06.00 மணியளவில்  மதுரை தலைமை அஞ்சலக வளாகத்தில் கூட்டப் படுகிறது  இதற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றின் மதுரைக் கோட்டச் செயலர் செய்திட வேண்டுகிறோம். எனவே தென் மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் வருகை தந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தங்களின் கருத்துக்களின் அடிப்படையில்தான்  அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப் படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.


மேற்கு மண்டல PMG  உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 


மேற்கு மண்டலத்தின்  BI-MONTHLY MEETING  எதிர் வரும் 25.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மேற்கு  மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 13.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் 


மேலும்  நாம் ஏற்கனவே மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டத்தில் அறிவித்தபடி ,  கோட்ட / கிளைச் செயலர்களிடமிருந்து பெறப்பட்ட பிரச்சினைகள்  பட்டியலிடப்பட்டு MEMORANDUM  ஆக தயார் செய்யப்பட்டு தற்போது  PMG, WR க்கு அனுப்பப்பட வுள்ளது . அதன் நகல் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  அனுப்பப்படுகிறது .  அதன் மீது தங்கள் கருத்துக்களை எதிர்வரும் 23.11.2013 க்குள் மாநில/ மண்டலச் செயலருக்கு தெரிவித்திட  வேண்டுகிறோம். அதன் மீது 25.11.2013  அன்று  PMG,WR  அவர்களுடன் விவாதிக்கப்படும்  என்பதை இந்த வலைத்தள செய்தியாக பதிவு செய்கின்றோம்.  


இந்த செய்திகளை  முன்னறிவிப்பாக கொண்டு  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் செயல் படுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 


அன்புடன்  

மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று ,

No Comments: Links to this post

MONDAY, NOVEMBER 4, 2013


TN CIRCLE UNION CIRCULAR RELEASED

Workshop on 10.11.2013 in the central zone kutuvir!

Monday, 4 November 2013

மண்டல செய்தி

                             ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GROUP-C , WESTERN REGION 
                                                                     REGIONAL REPRESENTATIVE
                              C.SANJEEVI,ASST.CIRCLE SECRETARY @ Suramangalam H.P.O.636005
MOBILE  NO.9442979586                                                                                email : nfpesalemwest@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
 No. AIPEU/P3/   15   /WR/  dated @ Mettur Dam R.S. 636402 the   04.11.2013
அன்புடன் தோழர்.   கிளை/கோட்ட செயலர்கள் மேற்கு மண்டலம்  அவர்களுக்கு,
வணக்கம். நமது கோவை மேற்கு மண்டல  P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING
வரும் 25.11.2013  அன்று காலை 11.00  மணியளவில் நடைபெறுகிறது. மாநிலச் செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களும் , மண்டலச் செயலரும்  BI-MONTHLY MEETING இல் கலந்து கொள்கின்றனர். எனவே தங்கள் கோட்டத்தில் கோட்ட மட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பற்றி உடனே தங்கள் கோட்ட அதிகாரியால் அப்பிரச்சனைக்கு கொடுக்கப்பட்ட பதிலுடன் உடன் மண்டல செயலருக்கு அனுப்பி வைக்கவும் .  BI-MONTHLY MEETING முடிந்தவுடன் P.M.G. அவர்களிடம்  INFORMAL MEETING கோரப்பட்டுள்ளது. எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ள கிளை/கோட்ட செயலர்கள் 25.11.2013  அன்று கோவை மண்டல அலுவலகத்திற்கு வரவேண்டுகிறோம்.
. 
                                   உங்களின்
C,.சஞ்சீவி ,                D. எபினேசர் காந்தி          Aராஜேந்திரன்           
மண்டல செயலர் ,         மாநில உதவி தலைவர் ,    மாநில அமைப்பு செயலர் 

சேலம் மேற்கு கோட்ட N F P E - அஞ்சல் மூன்று தோழர்/தோழியர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சேலம் மேற்கு கோட்ட செயலரான நான் கோவை மண்டல பொறுப்பாளராகவும்  இருப்பதால் மண்டல பணிகள் மற்றும் டிசம்பர் 10 மற்றும்  11 தேதிகளில் புது தில்லியில் நடைபெறும் பாராளுமன்றம் நோக்கி பேரணி குறித்த பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் சேலம் மேற்கு அஞ்சல் மூன்று பொறுப்பு செயலராக  நமது கோட்டத்தின் உதவி செயலர் தோழர் K.S. புகழேந்தி ,PA, லீ பஜார் அவர்கள் வருகின்ற 30.11.2013 வரை  செயல்படுவார் என அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.
தோழர் புகழேந்தி அவர்களின் அலை பேசி எண் 9442288668


                   தோழமையுடன், 

------------சி.சஞ்சீவி , கோட்ட செயலர் ,சேலம் மேற்கு ----------

Friday, 1 November 2013

HAVE A SAFE AND BRIGHT DEEPAVALI







ENJOY WELL BUT NOT AT THE COST OF OUR  SOCIETY SAFETY
BEST WISHES FOR A HAPPY DEEPAVALI
WITHOUT
SPOILING YOUR HEALTH BY EATING MORE SWEETS
WITHOUT
POLLUTING THE ENVIRONMENT BY FIRING
MORE CRACKERS
AND
BY TAKING THE BLESSINGS OF YOUR
PARENTS AND ELDERS
-----ALL INDIA POSTAL EMPLOYEES POSTAL UNION -----
                                 P3 , P4 , GDS (NFPE)
              SALEM WEST DIVISION, SALEM 636005


LSG PROMOTIONS ON THE MOVE AGAIN BASED ON DATE OF CONFIRMATION IN TAMIL NADU CIRCLE

நீண்ட காலமாக  தேங்கிக் கிடந்த LSG  பதவி உயர்வு என்பது தமிழ்நாடு வட்டத்தில்  தற்போது  அளிக்கப் பட  முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளது . கடந்த மாதத்தில் நடைபெற்ற JCM  இலாக்காக் குழு கூட்டத்தில்  அளிக்கப் பட்ட பதிலின் விளைவாக அனைத்து LSG /HSG  காலியிடங்களும் - உடன் அதற்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப் பட்டு - வழங்கப் படவேண்டும்-என்று இலாக்கா உத்திரவு இட்டதால்  தற்போது மீண்டும்  மாநில அஞ்சல் நிர்வாகம் சுறுசுறுப்பு  அடைந்துள்ளது. 

 JCM  DC  கூட்டத்தில் தமிழகத்திற்கென்று  தனியே வழிகாட்டுதல் அளிக்கப் படும் என்று இலாக்கா பதில் அளித்திருந்தாலும் (பார்க்க  MINUTES  நகலை ) இதுவரை  DTE  இல் இருந்து எந்த பதிலும் வரவில்லை . மேலும் நமது பொதுச் செயலரும் இது குறித்து இலாக்கா முதல்வருக்கு மீண்டும் நினைவூட்டுக் கடிதம் எழுதியும்  இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை . (கடித நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது ) 

எனவே தற்போது DATE  OF CONFIRMATION  அடிப்படையில் மீண்டும் SENIORITY  LIST  சரிபார்க்கப் பட்டு  தமிழகமெங்கும் சுற்றுக்கு விடப் பட்டுள்ளது.

'Seniority List of Postal Assistants in Tamilnadu Circle 
as on 01.01.2011 
who were confirmed prior to 04.11.1992'

என்ற அடிப்படையில் 1302  ஊழியர்களின் பட்டியல்  அனுப்பப் பட்டுள்ளது.
மேலும் PROMOTIVE  க்கும் அதே ஆண்டுக்கான DIRECT  RECRUIT க்கான  பட்டியலும் தனியே அனுப்பப் பட்டுள்ளது.  இதன் அடிப்படையில்  ONE  TIME CONFIRMATION  ஆன PROMOTIVE  இன்  SENIORITY  நிர்ணயிக்கப் படும் . இதற்கான  மாநில நிர்வாகத்தின்  கடித நகலை கீழே பார்க்கவும்.

05.11.2013 க்குள் இந்த SENIORITY  LIST  இல் பிரச்சினை உள்ளவர்கள்  மனுச் செய்ய வேண்டும். அது பரிசீலிக்கப்பட்டு  பட்டியல் இறுதி செய்த பிறகு LSG  பட்டியல் போடப்படும் .