Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Saturday, 24 November 2012

MESSEGE OF THE DAY


Friday, 23 November 2012

Holiday 2013 - Postal Directorate orders

Thursday, 22 November 2012

SB Order 16/2012 - Purchase of NSCs by an Adult on behalf of a Minor - A clarification

It was clarified by SB Order no 16/2012 released 0n 16.11.2011 that NSCs can be purchased by an Adult in the name of a Minor irrespective of any relation.

 Click here to view SB order no 16/2012

Tuesday, 20 November 2012

19.11.2012 சேலம் மேற்கு கோட்ட ஆர்ப்பாட்டம்

7-வது ஊதியக்குழு  அமைத்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளன அறைகூவலை ஏற்று 12.12.12 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு  JCA கூற்றுப்படி19.11.2012 அன்று மாலை  6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.ஆர்ப்பாட்ட முடிவில் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்  உதவி கோட்ட  அஞ்சல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது..  120 க்கும் அதிக அளவில் தோழியர்களும் /தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி செய்தி .
  வரும்  12.12.12 அன்று நடைபெறும்  வேலை நிறுத்தத்தில் 100  சதம் அனைவரும் கலந்து கொண்டு சேலம் மேற்கு கோட்டத்தின் பெருமையை காப்போம்.

வெற்றி வாழ்த்துக்களுடன் 
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு  மற்றும் புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம் மேற்கு  கோட்டம்

STRIKE NEWS -TAMILNADU CIRCLE - IN NEWSPAPER

Monday, 19 November 2012

சேலம் மேற்கு கோட்ட ஆர்ப்பாட்டம் 19.11.12


அன்புத் தோழர்களே, தோழியர்களே 
வீரவணக்கம்...19.11.12 அன்று மாலை 6.00 மணியளவில் சூரமங்கலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டமும் 12.12.12. அன்று நடைபெறவிருக்கும், வேலை நிறுத்தத்தை ஒட்டிய STRIKE NOTICEம் சேலம் மேற்கு  கோட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். தோழியர்கள் /தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 தோழமையுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் 
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு , புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம் மேற்கு கோட்டம்
 

Saturday, 10 November 2012

MODEL STRIKE NOTICE TO BE SERVED ON 19.11.12 for 12.12.2012 one day strike news



Please copy and submit the same after holding a massive demonstration on 19.11.2012

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GDS (NFPE)

NFPE/12.12.2012                                                                  Dated – 19th November, 2012

To,
The Director General
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001

NOTICE
Sir,
            In accordance with the provisions of Sub Section (1) of Section 22 of the Industrial Disputes Act, 1947, we hereby notify that all the Postal/RMS/MMS/Administrative & Postal Accounts Employees and the Gramin Dak Sewaks which are affiliated to Confederation of Central Government Employees & Workers will go on one day strike on 12.12.2012. The demands for acceptance of which the employees embark upon One Day Strike are detailed in the Charter of Demands enclosed.
                                                                                   
M. Krishnan                                                                                       R. Sivannarayana
Secretary General, NFPE                                                                  General Secretary, AIPEU Group 'C'          
                                                             
Ishwar Singh Dabas                                                                           Giriraj Singh
General Secretary                                                                             General Secretary
AIPEU Postmen, MTS & Group 'D'                                                      AIRMS & MMS EU Group 'C'
`                                                                                                                                  
                                                                       
P. Suresh                                                                                           Pranab Bhattacharjee
General Secretary                                                                             General Secretary      
AIRMS & MMS EU MG & Group 'D'                                                      AIPAOEU Group C & D           

                                                                                                                                   
T. Satyanarayana                                                                              S. Appanraj     
General Secretary                                                                             General Secretary      
AIPAEA                                                                                              AIPSBCOEA     
    
S. A. Raheem                                                                                    P. Pandurangarao      
General Secret                                                                                  General Secretary      
AIPCWEA                                                                                           AIPEU GDS (NFPE)      

                                                                                                                                               
CHARTER OF DEMANDS

1.       Appoint Seventh Pay Commission for revision of wages of Central Government Employees including Gramin Dak Sevaks from 01.01.2011.

2.       Grant merger of 50% DA to all including Gramin Dak Sevaks from 01.01.2011.

3.       Remove restrictions on Compassionate appointments.

4.       Departmentalization of GDS and grant them all benefits of regular employees. Revise cash handling norms; withdraw open market recruitment in Postmen/MTS, Grant full protection of TRCA. Grant Time bound promotions. Implement Medical reimbursement Scheme etc.

5.       End Bonus discrimination and enhance the bonus ceiling of GDS to 3500/-

6.       Regularize the Casual, Part-time, contingent employees and grant revise pro-rata wages from 1.1.2006.

7.       Revise Overtime allowance and Night Duty allowance.       

8.       Stop downsizing, outsourcing, Contractorisation and privatization.

9.       Grant Five promotions to all.

10.     Implement all Arbitration awards.

11.     Ensure prompt functioning of JCM at all levels.

12.     Withdraw PFRDA Bill.

13.     Stop price rise and strengthen public distribution system.

14.     Withdraw all trade union victimization.

15.     Enact laws to grant Right to Strike to Government employees.

Tuesday, 6 November 2012

12 DEC 2012 ONE DAY STRIKE


                                           


NFPE
         
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும்  புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம்  மேற்கு  கோட்டம்,    சேலம் – 636 005

          


            

அறிக்கை எண் 23            (¯உறுப்பினர்களுக்கு மட்டும் )          நாள் : 09.11.2012

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !! வணக்கம் .
            .
7-வது ஊதியக்குழு அமைத்தல் உள்ளிட்ட,  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலை ஏற்று
12.12.12  அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
                மத்திய  அரசு ஊழியர்களின் பல்வேறு பொதுவான முக்கிய பிரச்சனைகள்  தீர்க்கப்படாமல் பல காலமாக  தேங்கிக் கிடக்கிறது. துறைவாரியாக  பல போராட்டங்கள்  நடத்தியும், மத்திய அரசு,  கோரிக்கைகள் தீர வழி வகுக்காமல்   மெத்தனமாக உள்ளது.  இதைக்கண்டு   வெகுண்டெழுந்த மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம்  மிக முக்கிய - பொதுவான
15 கோரிக்கைகளை மையப்படுத்தி – முன்வைத்து, 12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. நம் அஞ்சல்  துறையைப்  பொறுத்தமட்டில் NFPE சம்மேளனத்தில் அங்கம்  வகிக்கும் அனைத்துப் பிரிவு சங்கங்களும்  இந்த மாபெரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வென்றெடுக்க  திட்டமிட்டுள்ளன.
கோரிக்கைகள்:
1)  7-வது  ஊதியக்குழு அமைத்து 1.1.2011 முதல் ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும்
                பொதுத்துறை மற்றும் வங்கித் துறைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றம் செய்யப்படுகிறது.  ஆனால் மத்திய அரசு  ஊழியர்களுக்கோ 10 ஆண்டுகளுக்கு  ஒருமுறைதான்.  அதுவும்   ஊதியக்குழு அமைக்கப்பட்டால்தான்  உண்டு!
5-வது   ஊதியக்குழு அறிக்கைப்படி  DA  50% -ஐ தாண்டிய  1.1.2011 முதல் ஊதியக்குழு  அமைக்கப்பட்டு  ஊதிய மாற்றம் செய்யப்படவேண்டும். 1.1.2006முதல் 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் 160%-ஐ தாண்டியிருக்கும் போது, அகவிலைப்படியாக  வெறும் 51% மட்டுமே வழங்கப்பட்டது. 6-வது ஊதியக்குழுவும்  தந்திரமாக  விலையேற்றத்தை  முழுமையாக  கணக்கில்  கொள்ளாமல்  குறைந்த அளவிலேயே ஊதிய நிர்ணயம் செய்துள்ளது. இந்த முரண்பாடுகள் களையப்பட உடனடியாக 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு 1.1.2011 முதல் ஊதியம் மாற்றப்பட வேண்டும்.

2) அகவிலைப்படியை  (DA)  அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும்
        DA 50% -ஐ தாண்டும்போது  அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற 5-வது  ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்றப்படவில்லை. எனவே  GDS  உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் DA-வை ஊதியத்துடன்  இணைத்து, அதனை அடிப்படையாகக்கொண்டே மற்ற படிகள் (Allowance) அனைத்தும் கணக்கிட்டு  வழங்கப்பட வேண்டும்.

3) கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள்  உச்சவரம்பின்றி  வழங்கப்பட வேண்டும்
        கருணை அடிப்படையிலான பணிநியமனங்களுக்கு உள்ள 5% என்ற  உச்சவரம்பு நீக்கப்பட்டு, இரயில்வே துறையில் உள்ளதுபோல் உச்சவரம்பின்றி, வாரிசுதாரர்களுக்கு  பணிநியமனங்கள் உடனடியாக  வழங்கப்படவேண்டும். உச்சநீதிமன்றமும் 5% உச்சவரம்பு  வைக்கப்படவேண்டும்  என்று  வரையறுக்காத  நிலையில்  நம்  துறையில் மட்டும்  காத்திருக்கும்  RRR ஊழியர்களுக்கு பணிநியமனங்கள்  வழங்கப்படாதது அநீதியாகும்.

4) JCM  முறையாக கூட்டப்பட்டு அதன் முடிவுகள்  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
        அனைத்து  மத்திய அரசுத் துறைகளிலும்  JCM கூட்டம்  4 மாதங்களுக்கு  ஒருமுறை  தவறாமல்  கூட்டப்படவேண்டும். ஆனால்  ஆண்டுக் கணக்கில்  JCM  கூட்டப்படுவதில்லை. மேலும்  அதில்  எடுக்கப்படும்  முடிவுகள்  அரசால் நடைமுறைப்- படுத்தப்படுவதில்லை. அனாமலி  கமிட்டியில்  வைக்கப்படும்  கோரிக்கைகளும்  பரிசீலிக்கப்படுவதில்லை..
[                                                                                                 
5) ஆளெடுப்புத் தடை முற்றிலும் நீக்கப்பட்டு புதிய  பணியிடங்கள்    உருவாக்கப்பட வேண்டும்
        2001 முதல் 2008 ஆண்டுவரையில்  குரூப்-C  மற்றும்  குரூப்-D பிரிவுகளில் மட்டும்   மூன்றில்  இரண்டு பங்கு   காலிப் பணியிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து 2010 ஆண்டுவரையில் மேலும் 20% குரூப்-C & D  பதவிகள் ஒழிக்கப்பட்டு பணிச்சுமை மிகவும்  அதிகமாக்கப்பட்டுள்ளது.  6-வது ஊதியக்குழுவும் ஆளெடுப்புத் தடை நீக்கப்பட்டு தேவைக்கேற்ப  ஊழியர்களை  நியமிக்க பரிந்துரைத்துள்ள  நிலையிலும் மத்திய அரசு  அதை  நடைமுறைப்படுத்தவில்லை. 
6) அரசுப்பணிகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்
        ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் பல பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  ஆட்குறைப்பும், சில  துறைகள்  மூடப்பட்டும், பல  மூடப்படும்  நிலையிலும்  உள்ளது. உதாரணமாக பாஸ்போர்ட்  மற்றும்  PAN CARD வழங்கும்  பணிகள்  TATA கம்பெனிக்கும், வருமானவரிக்  கணக்கு  தணிக்கைப்பணி NFOSYS கம்பெனிக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையிலும்கூட இந்திய அஞ்சல் சட்டம் திருத்தப்பட்டு  Public Private Partnership (PPP)                                                                                                                                                                                                                                                        
- 2 -
எனப்படும் அரசுத்துறையும் தனியார் துறையும் இணைந்து  செயல்படும் அபாயகரமான திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இது மேலும் கூரியர் சர்வீஸ் கம்பெனிகளை  வளர்க்கவே  உதவும். இத்திட்டங்கள் அரசுத் துறைகளை  முதலில்  கார்பொரேஷனாக்கி  முடிவில்  தனியார்மயமாக்கிடும் என்பதையே   உணர்த்துகிறது! BSNL-க்கு ஏற்பட்டுள்ள  நிலைதான்  இனி  மற்ற அரசுத் துறைகளுக்கும்.  இது உடனடியாக  தடுத்து  நிறுத்தப் படவேண்டிய  ஒன்று.

7) விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு பொது விநியோகத் திட்டம் சீராக்கப்படவேண்டும்
        மத்திய அரசு  கடைபிடிக்கும்  புதிய  பொருளாதாரக் கொள்கைகளும்  அதன்மூலம்  பொது   விநியோகத் திட்டம் 
சீரழிக்கப்பட்டதுமே  கடுமையான  விலைவாசி உயர்விற்கு  காரணமாகும். எனவே  அனைத்துப் பிரிவு ஊழியர்களும்  பொது விநியோகத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டு  அத்தியாவசியப்  பொருட்களின்  விலையை  அரசு  கட்டுப்படுத்த வேண்டும்.

8(a) GDS  ஊழியர்கள் அரசு ஊழியராக்கப்பட வேண்டும்
        ஜஸ்டிஸ் தல்வார் கமிட்டியும்,  அதற்கும் முன்பாக 1977 -லேயே  உச்சநீதிமன்றமும்  ED  ஊழியர்களையும் அரசு ஊழியராகக் கருதி  அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.  GDS ஊழியர்களை அரசு
ஊழியராக்க அனைத்து சாத்தியக் கூறுகளும் உள்ள  நிலையில், நடராஜ மூர்த்தி கமிட்டி அநீதியாக அவர்களை அங்கன்வாடி/ பகுதிநேரப் பணியாளர்களாகத்தான் பாவித்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளது. இழைக்கப்பட்ட  அநீதி களையப்பட்டு, TRCA  முரண்பாடுகள், போனஸ் உச்சவரம்பு, போஸ்ட்மேன்/ குரூப்-D பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றிற்கான  விதிமுறைகளும் GDS  ஊழியர்களுக்கு சாதகமாக  மாற்றியமைக்கப்பட வேண்டும்.
 (b) பகுதி நேர / தற்காலிக பணியாளர்கள்   நிரந்தரமாக்கப்பட வேண்டும்
        அரசுப் பணிகளில் சுமார் 25% ஊழியர்கள்  தற்காலிகப்  பணியாளர்களே! மத்திய அரசால் மிகவும் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு  அவர்களின் உழைப்பு  சுரண்டப்படுகிறது.   அவர்களும் அரசு  ஊழியராக்கப்பட வேண்டும்.

9) அனைவருக்கும் உச்சவரம்பின்றி போனஸ் வழங்கப்பட வேண்டும்
        போனஸ் தொகை மற்றும் நாட்கள் கணக்கிடுவதில் உள்ள உச்சவரம்பு நீக்கப்பட்டு  GDS  உள்ளிட்ட அனைத்துப்  பிரிவு ஊழியர்களுக்கும் அவர்கள் பெறுகின்ற ஊதியத்தின் அடிப்படையில்  போனஸ் வழங்கப்பட  வேண்டும்.

10) மிகுதி நேரப்படி (OTA) மற்றும் இரவுப் பணிப்படி உயர்த்தி வழங்கப்பட வேண்டும்
       4-வது  ஊதியக்குழு நிர்ணயித்த OTA ஒரு மணி நேரத்திற்கு ரூ 15.85 மட்டுமே இன்றும்  வழங்கப்- படுகிறது. ஆனால் வெளியாட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பணிகளுக்கு, அரசு இதைவிட அதிகப்படியான தொகை வழங்குகிறது. எனவே  நடுவர்மன்றத்  தீர்ப்பின்படி உயர்த்தப்பட்ட OTA மற்றும் இரவுப் பணிப்படி  வழங்கப்பட வேண்டும்.

11) நடுவர்மன்றத் தீர்ப்பாய உத்தரவுகள் அமலாக்கப்பட வேண்டும்
        ஊழியர்களுக்கு சாதகமாக இதுவரை  நடுவர்மன்றத் தீர்ப்புகள் 17 வந்துள்ளது. இவற்றை  அமல்படுத்துவதற்கான செலவும் மிகக் குறைவே. இருப்பினும் மத்திய அரசு இவற்றை பாராளுமன்றத்தில் வைத்து நிராகரிக்க முனைகிறது.

12) தொழிற்சங்கங்களை பழிவாங்கும் போக்கினை கைவிட வேண்டும்

13) வேலைநிறுத்தப் போராட்ட உரிமை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் 
பாராளுமன்றத்தில் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். 

14) ஐந்துகட்ட பதவிஉயர்வு வழங்க வேண்டும் 
        எவ்வித தேர்வுகளும் எழுதாமல் குரூப்-A  அதிகாரிகளுக்கு 5 கட்டத்திற்கும் மேலாக பதவி உயர்வுகள் வழங்கப்- படுகிறது. ஆனால் குரூப்-C & D ஊழியர்களுக்கு மட்டும் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில்லை. எனவே அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் கேடர்  சீரமைப்பு  செய்யப்பட்டு, 5 கட்ட பதவி உயர்வு வழங்கப்படவேண்டும். 

15) புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட வேண்டும்
        1.1.2004 முதல் நடைமுறைப்படுத்தப்படும் - சமூகப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத்  திட்டம் கைவிடப்படவேண்டும். ஓய்வூதிய திட்ட நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் கூடாது.  பழைய  பாதுகாப்பான - உத்திரவாதத்துடன் கூடிய  ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்து அமலாக்கப்படவேண்டும்.
       
        கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுத்து, அனைத்து நமது  ஊழியர் நலன் காக்க சங்கபேதமின்றி அனைவரும்  ஒன்றுபட்டுப்  போராடுவோம்! 12.12.2012 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!!

வெல்லட்டும் வேலை நிறுத்தப் போராட்டம்!   வென்றெடுப்போம் அனைத்துக் கோரிக்கைகளையும்!!

போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,
  K. பரமசிவம் தலைவர்  P3                                  C.சஞ்சீவி செயலர் P3         P. இளங்கோவன் நிதிச்செயலர் P3                                         
R.வரதராஜன் தலைவர் P4                R..பிரகாஷ் செயலர் P4           S.ரத்தினம் நிதிச்செயலர்  P4
                     K. கண்ணபிரான் கௌரவதலைவர் GDS(NFPE)   C.ஆறுமுகம் செயல் தலைவர் GDS(NFPE)    R.சரவணன்தலைவர்GDS(NFPE)  S.சண்முகம் செயலர்GDS(NFPE)   C.முருகன் நிதிச்செயலர் GDS(NFPE)