Tuesday, 8 April 2014

வாக்கு பதிவு நாளில் PTC MADURAI யில் பயிற்சி -மாநில சங்க முயற்சியால் பயிற்சி ரத்து

கோவை மேற்கு மண்டல அலுவலகத்தின் உத்திரவின்படி   PLI in FSI Project -End User Type II(R2 Batch 7) TRAINING காக பல கோட்டங்களில் இருந்து P T C MADURAI க்கு 22.04.2014 TO 25.04.2014 வரை நமது தோழர்/ தோழியர்களுக்கு உத்திரவு போடப்பட்டது.  வரும் 24.04.2014 அன்று நாடாளுமன்ற பொது தேர்தல் நடக்கவிருப்பதால் பயிற்சியில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு வந்து  தங்களின் வாக்கினை பதிவு செய்ய முடியாது என்பதால் தேர்தல் நாளில் வரும் பயிற்சி வகுப்பு நாட்களை மாற்றி தர நடவடிக்கை எடுக்குமாறு  நமது மண்டல சங்கம் மாநில சங்கத்திற்கு தகவல் தெரிவித்தது.

நமது மாநில செயலர் J R அவர்களும் ,நமது மாநில நிதிசெயலர் தோழர் A.வீரமணி  விரைந்து செயல்பட்டு இப்பிரச்சனையை C P M G அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதனடிப்படையில் இன்று மேற்கண்ட தேதியில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்புகள் மாற்றி அமைக்க உத்திரவு CPMG  அலுவலத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக நமது மாநில நிதிசெயலர் தோழர் A.வீரமணி அவர்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளார். 

-----சி,சஞ்சீவி ,மண்டல செயலர் கோவை மேற்கு மண்டலம் ---- 

Diamond Jubliee Fest celebrated by NFPE, Ambasamudram & Tirunelveli (Tamilnadu)


     AMBASAMUDRAM



TIRUNELVELI